அசுரன் Part 25 15

“இன்னும் என்னடா ஆனால் மாறா…”ஆராதனா சோர்ந்து கேட்க

“எல்லாம் சரியாக நடந்தாலும் மதிவதனி வம்சாவளி மட்டும் உயிரை பணயம் வைத்து தான் இந்த செயலை செய்ய வேண்டும்.இதில் உயிரை இழக்கவே வாய்ப்பு அதிகம்..அது தெரிந்து அவனோ,அவளோ இந்த காரியத்திற்கு ஒப்பு கொள்வார்களா..!என்பது மிக மிக சந்தேகம்..!”

“யப்பா சாமி சுத்தமா முடியல..எவ்வளவு சிக்கல்..!நீ சொல்லும் போதே இப்பவே கண்ணை கட்டுதே..!நிஜத்தில் எப்படி செய்ய போகிறமோ என்று தெரியல..”ஆராதனா கவலை தோய்ந்த முகத்துடன் சொன்னாள்.

“அனு இங்க பாரு..ராமன் மட்டும் அரசனாக முடிசூட்டிக் கொண்டு இருந்தால் ராவணனை அழிக்க முடிந்து இருக்க முடியுமா..!கூனி மூலம் கைகேயி மனதை கெடுத்து ராமனை விதி காட்டுக்கு துரத்தியது..அவன் வட நாட்டில் உள்ள காட்டிலேயே இருந்திருந்தால் அரக்கர்களை ராமன் எவ்வாறு அழித்து இருக்க முடியும்.ராமனை தேடி பரதனை காட்டுக்கு வரசெய்தது.பரதன் பக்கத்தில் இருந்தால் அவன் அடிக்கடி தேடி வரக்கூடும் என ராமனை அரக்கர்கள் உள்ள தண்டகாரண்யம் பகுதிக்கு விதி மீண்டும் துரத்தியது.சூர்ப்பனகை வந்தாள்,ராம லக்ஷ்மணன் மீது ஆசைப்பட்டாள்.அதனால் தண்டகாரண்யத்தில் உள்ள இராவணனின் தம்பிகள் அழிந்தனர்.தன் தம்பிகளை கொன்ற,தங்கையை அவமானப்படுத்திய ராமனை பழிவாங்க,இராவணன் மாரிசனின் துணை கொண்டு சீதையை கடத்தினான்..அதன் விளைவாக ராமன் சீதையை தேடி செல்லும் பொழுது சுக்ரீவன் நட்பு கிடைத்தது..ராவணனை கொல்ல அகத்தியரிடம் இருந்து ஆயுதத்தை ராமன் பெற்று கொண்டான்..இவ்வளவு இருந்தும் கடலை கடக்க ராமனின் சேனையால் முடியவில்லை..பிறகு இயற்கை அதற்கும் வழி செய்து இருந்தது..ராமனின் சேனையில் இருந்து நளன் என்ற வானரம் போட்ட பாறைகள் மட்டும் தண்ணீரில் மிதந்தன.அதை கொண்டு பாலத்தை கட்டி கடலை கடந்த பிறகும் ராமன் பல தடைகளை கடந்து தான் ராவணனை கொல்ல முடிந்தது.எத்தனை எத்தனை தடைகள்…! அதுவும் இந்திரஜித் மாபெரும் தடையாக இருந்தான்..அவனை கொல்ல வழியை லக்ஷ்மணன் மூலம் விதி உருவாக்கி இருந்தது..கடவுள் அவதாரமான ராமனுக்கே இவ்வளவு சவால்கள்.நமக்கு இல்லாமல் இருக்குமா..!
இந்த காத்தவராயனை கொல்ல விதி நமக்கு வழி கண்டிப்பா ஏற்படுத்தி இருக்கும்..நாம் நம் கடமையை மட்டும் செய்வோம்..காத்தவராயனை கொல்ல உருவாக்கப்பட்ட கருவிகள் நாம் அவ்வளவு தான்”என மாறன் சொல்லி முடிக்க அனுவும்,ஆராதனாவும் அதை கேட்டு அயர்ந்தனர்.

கடைசியாக மாறன் இருவரை பார்த்து,”என்னால் ஒன்றை மட்டும் உறுதியாக உணர முடிகிறது..காத்தவராயனை முழுவதுமாக அழிக்கும் ரகசியத்தை மதிவதனி கடும் தவம் மூலம் அறிந்து இருக்கிறாள்..உங்கள் நால்வருக்கும் ஏதோ நூலிழை தொடர்பு இருக்கு..நீங்கள் நால்வரும் ஏதோ ஒருவிதத்தில் மதிவதனியுடன் சம்பந்தப்பட்டு உள்ளீர்கள்..அதற்காக நீங்கள் நால்வரும் மதிவதனி மறுபிறப்பு என்று நான் சொல்லவில்லை..ஆனால் நிகழ்கால பிரியங்கா மூலம் உங்கள் மூவருக்கும் மதிவதனிக்கும் இடையே உள்ள தொடர்பு தெரிய வரும்..”என்று அவன் சொல்லி முடித்தான்..

லிகிதாவை தேடி தேடி கஜா சோர்ந்து போனான்.கடைசியாக காத்தவராயனை மனதில் நினைக்க,காத்தவராயன் எதிரில் தோன்றினான்..

கஜா காத்தவராயனிடம்,”காத்தவராயா..நீ சொல்வது தான் சரி..என்னால் லிகிதா இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியல..உன் வழிக்கு நான் வருகிறேன்..நீ முழுக்க அனுபவித்த பிறகு எனக்கு லிகிதாவை கொடு அது போதும்..அவ என் உடம்பு மூலம் கற்பு இழந்தாலே எனக்கு அது போதும்…”என சொன்னான்..

காத்தவராயன் அந்த இடம் அதிர சிரித்தான்…”நல்ல முடிவு கஜா, லிகிதாவை அவள் இடத்தை விட்டு தானாக என்னை நோக்கி வெளியே வரவைக்க போகிறேன்..அவளை இந்த மாளிகையில்,இதோ இந்த மஞ்சத்தில் ருசித்து விட்டு உனக்கு விருந்தாக்குகிறேன் போதுமா…!”என சொல்லி விட்டு கஜா உடம்பில் புகுந்தது..

நிகழ் காலம்

லிகிதாவிற்கு ஒரே இடத்தில் இருப்பது செம்ம போர் அடித்தது.ஒரே இடத்தில் tv மட்டும் பார்த்து கொண்டு எவ்வளவு நேரம் தான் இருக்க முடியும்…சகுந்தலா தேவி பேச்சை மீறி தன் போனை ஆன் செய்தாள்.

ஆன் செய்த உடனே தன் தோழியான பிரியங்காவிடம் இருந்து வாட்ஸ்அப் மெஸேஜ் நோடிஃபிகேஷன் வந்தது.லிகிதாவை பலமுறை அழைக்க முயற்சி செய்ததையும், ஃபோன் எடுக்காமல் போனதை பற்றி அவள் குறிப்பிட்டு மெசேஜ் அனுப்பி இருந்தாள்.. லிகிதா அவளை இம்முறை அழைக்க பிரியங்கா நம்பர் ஸ்விட்ச் ஆஃப். ப ரிப்ளை மெஸேஜ் மட்டும் அனுப்பி விட்டு வந்து அமர்ந்தவுடன் கூட இருந்த ஒரேயொரு வேலைக்கார ஆயாவும் வந்து, “குட்டிம்மா நான் கொஞ்சம் என் வீடு வரை போய்ட்டு நாளை காலை வந்து விடட்டுமா…! என அனுமதி கேட்க,

“சரி ஆயா போய்ட்டு வாங்க”