“இல்லை மாறா..!அங்கே வேறு சில ஆவிகளும் இருந்தன…”
“நிகழ்காலத்தில் நீங்க எதிர்கொள்ள போவது காத்தவராயனுடன் சேர்த்து இன்னும் பல ஆவிகளை..இன்னொரு முக்கியமான விசயம் நீங்கள் அவனை எதிர்கொள்ள போவது அமாவாசை அன்று.அன்று அவன் முழுபலத்துடன் இருப்பான்.தனக்கு தேவையானதை நிறைவேற்றி கொள்ள அவன் வெகு உக்கிரமாக இருப்பான்.அந்த நேரத்தில் நீங்க நாலு பேரே பத்தாது.இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது.”
“அது என்ன சிக்கல் மாறா..?”
“மன்னர் காலத்தில் காத்தவராயனின் உடலை அழிக்கும் சக்தியை மதிவதனி பார்த்து கொள்வாள்..ஆனால் அவனின் ஆத்மா நிகழ் காலத்திற்கே வரவேகூடாது..அதற்கு அவன் உடம்பில் இருந்து அவன் ஆத்மாவின் தொடர்பை அறுப்பது அவசியம்.அவன் ஆத்மாவை அவன் உடம்பில் இருந்து பிரிக்க வேண்டுமென்றால் உங்கள் நால்வரின் ஆத்ம சக்தியை நீங்கள் மதிவதனியிடம் அளிக்க வேண்டும்.அப்பொழுது தான் நீங்கள் இழந்த கற்பை அடையமுடியும்.இப்போ வரை அவன் உடம்போடு ஆத்மா தொடர்பு அறுபடவில்லை.அவன் உடல் பாதுகாப்பாக ஓரிடத்தில் உள்ளது.”
அனு அவனிடம்,”என்ன சொல்றே மாறா…!இன்னும் அவன் உடம்பு அழியவில்லையா..! மேலும் எனக்கு ஒரு சந்தேகம்,ரெண்டு பேர் தான் டைம் டிராவல் பண்ண முடியும் என்று சொல்றே..நாங்க நாலு பேர் எப்படி எங்கள் ஆத்ம சக்தியை மதிவதனிகிட்ட கொடுக்க முடியும்?”
மாறன் அவர்களை பார்த்து”அது தான் நான் சொல்லவந்த சிக்கலே அனு,ஒன்று டைம் டிராவல் செய்யும் இருவர்,இங்கு இருக்கும் இருவரின் ஆத்ம சக்தியை சுமந்து செல்ல வேண்டும்.அப்படி நீங்கள் செல்லும் பொழுது இங்கு இருக்கும் இருவரின் சக்தி போய்விடும்,அப்போ இங்கு இருக்கும் காத்தவராயன் ஆவியை யாரும் கட்டுக்குள் கொண்டு வர முடியாது.அது காற்று போன பையாக இருக்கும் அவன் உடலை மீட்க,நான்கு பலி கொடுத்து நிகழ் காலத்தில் சாதித்து விட்டால் நீங்கள் டைம் டிராவல் பண்ணுவதே வீண் தான்.இரண்டாவது நீங்கள் நால்வர் சேர்ந்து காத்தவராயன் காலத்திற்கு பயணித்தால் இங்கு காத்தவராயனை பலி கொடுக்காமல் கட்டுபடுத்த யாராவது வலிமைமிக்க ஒருவர் வேண்டும்..அதுவும் அவர் தெய்வ சக்தி அற்றவராக,ஆவிகளை கட்டுப்படுத்தும் வல்லமை வாய்ந்தவராக இருக்க வேண்டும்..இது தான் நான் சொல்ல வந்த சிக்கல் அனு.”
அனு கவலையுடன்”என்ன மாறா..! நிலைமை போக போக சிக்கலாகி கொண்டே போகுதே..! காத்தவராயனுக்கு அவ்வளவு சக்தி எப்படி வந்தது..!”
“இந்த விசயமே நேற்று தான் என் குரு மூலம் எனக்கு தெரிய வந்தது அனு…!உண்மையில் மதிவதனியால் அவனை கொல்ல முடியவில்லை..அவனை கொல்லும் ஆயுதத்தை அவள் வைத்து இருக்கவில்லை..அதனால் அவள் அவனை கொல்ல வேறு ஒரு உபாயம் செய்தாள்..அது காத்தவராயனுக்கு சாகும் முன் நேரத்தை நீட்டித்து கொடுத்தது..அப்போ அவன் அதர்வண வேதத்தில் உள்ள மந்திரங்களை ஜெபித்து ஆத்மாவுக்கும்,உடலுக்கும் உள்ள தொடர்பை நீட்டித்து கொண்டான்.உடலையும் அழியாமல் பார்த்து கொண்டான்.ஒன்றை புரிந்து கொள் அனு,மதிவதனி அவன் உயிரை எடுக்கவில்லை..மாறாக மதிவதனி அவனுக்கு ஏற்படுத்திய துன்பம் தாங்க முடியாமல் அவனாக தான் அவன் உயிரை விட்டான்.அவனால் பிற்காலத்தில் ஏற்பட போகும் சேதத்தை அறிந்து மதிவதனி தன் குழந்தையை ஒருவரிடத்தில் கொடுத்து விட்டு அவனை மீண்டும் அழிக்க பிறப்பு எடுப்பதாக கூறிவிட்டு கடும்தவம் செய்து அவளும் உயிரை விட்டு விட்டாள்.
அவள் சொன்ன மாதிரி பிறப்பும் எடுத்து இருக்கிறாள்..அவளுக்கு பூர்வஜென்ம உணர்வுகள் காத்தவராயன் அவளுடன் உடலுறவு கொள்ளும் பொழுது கொஞ்ச கொஞ்சமாக நினைவுக்கு வரும்.அதை கொண்டு தான் நாம் வழி தேட வேண்டும்..இன்னொரு சாதகமான விசயம் நமக்கு உள்ளது..அதாவது காத்தவராயன்,மதிவதனிக்கு பிறந்த குழந்தை இறக்கவில்லை..அவர்களின் வம்சம் கண்டிப்பாக வழி வழியாக வந்து இருக்கும்..அந்த வம்சத்தின் வழியாக வந்த ஒருவர் தான் நமக்கு உதவி செய்ய போகிறது என நினைக்கிறேன்..”
ஆராதனா சந்தேகத்துடன்”ஒருவேளை அது தான் நிகழ்கால மதிவதனியா இருக்குமோ”
“கண்டிப்பா இருக்காது அனு,அரக்கர் வம்சமாக ஆனாலும் தங்கள் வாரிசுகளுடன் அவர்கள் உறவு கொள்வது இல்லை..அவனின் வம்சாவளியை காத்தவராயன் பார்த்த உடன் அறிந்து கொள்வான்.அதனால் இயற்கை நிகழ்கால மதிவதனியை அதே வம்சத்தில் பிறப்பு எடுக்க அனுமதிக்காது..ஏனெனில் காத்தவராயன் நிகழ்கால பிரியங்காவுடன் உடலுறவு கொண்டே ஆக வேண்டும். மேலும் மதிவதனி எதற்காக தவம் செய்தாள்?என்ற விடை எல்லாமே பிரியங்காவிற்கு பூர்வ ஜென்ம ஞாபகம் வந்த உடன் விடை கிடைத்து விடும்..மதிவதனியின் வம்சாவளி ஆணா?பெண்ணா? என்பது எல்லாம் எதுவுமே தெரியாது..?அவனோ,அவளோ கிடைத்து விட்டால் ஆவியை அடக்கும் நபரின் துணையோடு நிகழ்கால காத்தவராயன் ஆவியை கட்டுபடுத்தி விட்டால் நீங்கள் நால்வர் டைம் டிராவல் செய்து நாம் நினைத்த காரியத்தை எளிதாக முடித்து விட்டு திரும்பி விடலாம்..ஆனால் …”
