மதிவதனியை நேருக்கு நேர் எதிர்த்து போராட சகுந்தலாவுக்கு தைரியம் இல்லை..எல்லா வேலைகளையும் ரகசியமாகவே செய்ய வேண்டி இருந்தது..ஆனால் அவளுக்கும் சில தினங்களில் ஒரு நற்செய்தி தெரிய வந்தது..அவளும் கருத்தரித்து இருப்பது அடுத்த இரண்டு தினங்களிலேயே தெரிய வந்தது.
சகுந்தலாதேவி மனதுக்குள் சில திட்டங்கள் உருவாயின…மதிவதனியின் கருவை கலைக்கும் திட்டத்தை மாற்றி கொண்டாள்.அவளுக்கு இந்த மாயமலை அரண்மனையின் அனைத்து இடங்களும் அக்குவேறு ஆணிவேறாக தெரியும்..அதில் குறிப்பிட இடத்தை பாதாள அறையில் தேர்ந்தெடுத்து ரகசிய அறையை உருவாக்கி கொண்டாள்..தான் பிறந்த தேசம் செல்வதாக கூறி மாயமலையில் இருந்து வெளியேறிய சகுந்தலா தேவி அன்றிரவே ரகசிய பாதை வழியாக அந்த ரகசிய அறைக்குள் திரும்பி விட்டாள்..அங்கே இருந்து அவள் வெளியே வரவே இல்லை.தனக்கு நம்பிக்கையான ஆட்கள் மூலம் தினமும் தேவையானவற்றை வரவழைத்து கொண்டாள்.அவள் வயிற்றில் இருந்த சிசுவும் நன்றாக வளர்ந்து வந்தது.மதிவதனி குழந்தை பெற போகும் நாளை தன் ரகசிய ஆட்கள் மூலம் கண்காணிக்க சொல்லி எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தாள்..மதிவதனி பிரசவிக்கும் நாளும் நெருங்கியது..ஆச்சரியமாக அதே நாளில் சகுந்தலா தேவி பிரசவ நாளும் வந்தது..
குறிப்பிட்ட இந்த நேரத்தில் தான் குழந்தை பிறக்க வேண்டும் என அகோரி சொல்லி இருந்ததால் மதிவதனி அதற்கு முன் பிரசவிக்க கூடாது என காத்தவராயன் மதிவதனியை உத்திரத்தில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு இருந்தான்..மதிவதனி பிரசவ வலி வந்து துடித்தாள்..தலைகீழாக தொங்கவிட்டு இருந்ததால் அவளால் குழந்தையை பெற்றெடுக்க முடியவில்லை..ஏற்கனவே பெண்களுக்கு பிரசவம் என்பது மறுபிறவி போல..மதிவதனியின் பிரசவத்தை,காத்தவராயனின் சுயநலத்தால் இன்னும் கஷ்டம் அதிகமாகி போனது.குறிப்பிட நேரம் வந்த உடன் அவள் கால் கட்டுக்கள் அவிழ்க்கபட்டன.சரியான நேரத்தில் அவள் தன் குழந்தையை ஈன்றாள்.ஈன்ற உடனே பிரசவத்திற்காக போராடிய வலியில் அவளுக்கு மயக்கம் வர,அந்த நேரத்தில் அங்கு ஒரு சதி அரங்கேறியது.
காத்தவராயனுக்கு மதிவதனியின் குழந்தை பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது..அதை கேட்ட காத்தவராயன் கண்கள் சிவந்தன..இது எப்படி நடந்தது..?அகோரி தெளிவாக சொன்னானே..!அவளுக்கு ஆண் குழந்தை தான் பிறக்குமென..!ஆனால் பெண் குழந்தை பிறந்து என் கனவுகள் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி விட்டதே..!காத்தவராயன் பொங்கினான்.
மதிவதனி குழந்தையை கையில் ஏந்தி கலங்கிய கண்களுடன்,” நீ பிறந்த உடனே நான் என்னை மாய்த்து கொள்ள எண்ணி இருந்தேன் கண்ணே..ஆனால் உன்னை பார்த்த உடனே என் எண்ணமெல்லாம் மாறி விட்டது..ஒன்று உன்னை எடுத்து கொண்டு என் நாட்டுக்கு சென்று சந்தோஷத்துடன் என் வாழ்க்கையை கழிப்பேன்.உன்னை காத்தவராயன் விட்டு கொடுக்காவிட்டால் அவனுடன் சேர்ந்து வாழவும் நான் தயார்…”என குழந்தையின் நெற்றியில் முத்தம் வைத்தாள்.தாய்மை உணர்வு பொங்க சேலையை விலக்கி குழந்தைக்கு பால் புகட்ட,காத்தவராயன் சிவந்த கண்களுடன் உள்ளே நுழைந்தான்.
அவளிடம் இருந்த குழந்தையை வெறிகொண்டு பிடுங்கினான்.அவனின் இந்த செயலை மதிவதனி சற்றும் எதிர்பார்க்கவில்லை..அவன் குழந்தையை மேலிருந்து கீழே பார்க்க அகோரி சொன்ன ஒரு அடையாளம் கூட அந்த குழந்தையிடம் இல்லவே இல்லை..என்ன தான் காத்தவராயன் கருப்பாக இருந்தாலும் மதிவதனிக்கு பிறக்கும் குழந்தை அவள் நிறத்தில் இருக்கும் என சொல்லி இருந்தான்..ஆனால் குழந்தையோ அவன் நிறத்தில் இருந்தது.குழந்தை தொப்புள் குழி வலப்புறமாக மதிவதனிக்கு இருப்பது போல சுழிந்து இருக்கும் என சொல்லி இருந்தான்..மதிவதனியின் தொப்புள் குழியை ஏற்கனவே நிறைய முறை அவன் பார்த்து ரசித்து நக்கி சுவைத்து இருந்தான்.ஆனால் இது இடது பக்கமாக சுழிந்து மதிவதனியின் தொப்புள் அழகில் கொஞ்சமும் இல்லாமல் இருந்தது..இன்னொரு முக்கிய விசயமாக மதிவதனியின் மார்புக்கு கீழே ஒரு பிறை வடிவ நிலா மச்சத்தை அப்படியே இந்த குழந்தை உரித்து பிறக்கும் என சொல்லி இருந்தான்.அதுவும் இல்லை. இன்னும் சொல்ல போனால் மதிவதனி அடையாளங்கள் ஒன்று கூட அந்த குழந்தையிடத்தில் இல்லை..காத்தவராயனின் அடையாளங்கள் மட்டும் கொஞ்சம் கொஞ்சம் இருந்தன..
தன் கனவுகள் மண்ணோடு மண்ணாய் போன கோபத்தில் வெறி வந்தவனாய்,குழந்தையை எடுத்து கொண்டு அகோரியை பார்க்க சென்றான்..” பொய் சொன்ன அந்த அகோரி இன்றோடு ஒழிந்தான்” என மனதில் கருவிக்கொண்டு அவனை நோக்கி புயல் வேகத்தில் சென்றான்..
“என் குழந்தையை எங்கே கொண்டு போறீங்க…!என்கிட்ட கொடுங்க”என மதிவதனி கதற..அதை கொஞ்சமும் காது கொடுத்து கேளாமல் அவன் கடந்து சென்றான்..
பிரசவித்த பெண் மதிவதனியிடம்,”தேவி உங்கள் குழந்தையை பாதாள பைரவிக்கு பலிகொடுக்க மன்னர் கொண்டு செல்கிறார்..குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த குழந்தையை பலி கொடுத்தால் தான் தனக்கு மிகப்பெரிய சக்திகள் கிடைக்கும் என்ற நோக்கத்தில் தான் உங்கள் பிரசவ நேரத்தை தள்ளி போட்டார்..”என்று சொன்னவுடன் மதிவதனி பொங்கி எழுந்தாள்..அவள் கால்கள் தரையில் நிற்க தள்ளாடின..அடிமேல் அடி எடுத்து வைக்க சிரமபட்டாள்.ஆனால் அவள் தாய்மை அவளுக்கு பலத்தை கொடுத்தது.
