“நான் என் குழந்தையை பலி கொடுக்க விடமாட்டேன்..”என அவள் தாய்மை பாசம் பொங்க கத்தினாள்..
பிரசவம் பார்த்த பெண் மதிவதனியின் கைகளை பிடித்து”தேவி நீங்கள் அங்கு செல்ல அவசியம் இல்லை.கெடுவான் கேடு நினைப்பான்.ஒவ்வொருவர் செய்த வினை அவர்களையே பாதித்து உள்ளது.”நடந்ததை அவள் விளக்கி சொல்ல எத்தனிக்கும் பொழுது,மதிவதனி கோபத்தால் தன் கையை உதற,பிரசவம் பார்த்த பெண் பக்கத்தில் உள்ள தூணில் முட்டி கொண்டு மயங்கி கீழே விழுந்து விட்டாள்..
மதிவதனி எண்ணம் முழுக்க தன் குழந்தையை மீட்க வேண்டும் என நினைத்து போர்க்கோலம் பூண்டாள்..ஆனால் அவள் வசம் இருந்த வில் அவனை தோற்கடிக்க முடியுமே தவிர,அவனை கொல்ல முடியாது.முக்கியமாக கும்பக்கர்ணணை கொன்ற வாயு அஸ்திரத்தை அவள் இந்த வில்லில் இருந்து பிரயோகிக்கவே முடியாது..என்ன செய்ய..!
ஆனாலும் பாதாள பைரவி கோவிலை நோக்கி வாயு வேகத்தில் சென்றாள்.
நிகழ் காலம்
காத்தவராயன் ரெண்டு பெண்களிடம் அடிவாங்கிய கடுப்பில் புளியமரத்தில் தொங்கி கொண்டு இருந்தான்..
“யப்பா,என்ன அடி..கடைசியில் என் பொருளை வைச்சே என்னையே இந்த அனுவும்,ஆராதனாவும் போட்டுட்டாங்களே..இந்த பொண்ணு அனுவுக்கு என்ன ஆச்சு..!இன்னும் கொஞ்சம் நேரம் விட்டு இருந்தா அனுவை சுவைச்சு இருக்கலாம்.ஆனா கடைசியில் இந்த ஆராதனா பொண்ணு வந்து எல்லாவற்றையும் கெடுத்துடுச்சி..இந்த அமாவாசை மட்டும் வரட்டும்..அப்புறம் இவளுகளை வச்சிக்கிறேன். இவளுககிட்ட இருக்கிற என் சக்தியை எப்படி திரும்ப பெறுவது என எனக்கு தெரியும்..”என புலம்பினான்.
அடுத்த நாள் மாறன்,அனு மற்றும் ஆராதனாவை தேடி வந்தான்..ஆராதனா வெளியே சென்று இருந்தாள்..அனு குளித்து விட்டு புத்தம் புது செப்பு சிலை போல் வெளியே வந்தாள்..கூந்தலில் ஈரம் சொட்ட சொட்ட வெறும் டவல் மட்டும் அணிந்து வர அங்கே மாறன் இருப்பதை தர்ம சங்கடமாக உணர்ந்தாள்..ஆனால் மாறன்,அவள் தர்ம சங்கடத்தை புரிந்து கொண்டு உடனே அனு இருந்த அறையை சாத்தி விட்டு அமைதியாக வெளியே உட்கார்ந்தான்..அனு ஆடை அணிந்து கொண்டு வந்து,”மாறன் உங்களுக்கு காஃபி வேணுமா இல்ல டீ வேணுமா”என கேட்க,
மாறன் அவள் கண்களை பார்த்து “ம்ம்ம்..சிஸ்டர்..!வெயில் காலையிலேயே மண்டை பொளக்குது.எனக்கு தண்ணி கொடுங்க போதும்..”
சில்லென்ற மோர் எடுத்து வந்து அனு கொடுத்தாள்.
“ஆமா எங்கே ஆராதனா”மாறன் கேட்க,
“இங்கே தான் கீழே மதியம் சமையலுக்கு காய்கறி வாங்க போய் இருக்கா”
மாறன்,அனுவும் சகஜமாக பேசி கொண்டு இருக்க ஆராதனா வந்து சேர்ந்தாள்.. அனுவிடம் பேசும் பொழுது மாறன் கண்கள் அவள் கண்களை விட்டு கீழே இறங்கவில்லை..ஒரு மாதிரியான கவர்ச்சி நிலையில் தான் இருப்பதை பார்த்தும்,மாறன் கண்ணை மட்டுமே பார்த்து பேசுவதை பார்த்து அவளுக்கு உள்ளூர மகிழ்ச்சியாக இருந்தது..
நேற்று நடந்த விசயத்தையும்,காத்தவராயன் உதை வாங்கி போன விசயத்தையும் ஆராதனா சொல்லி சொல்லி சிரித்தாள்..
“எங்க ரெண்டு பேரையே இந்த காத்தவராயனால் சமாளிக்க முடியலையே..!,இன்னும் ரெண்டு பொண்ணு வந்தா அவன் கதை கந்தல் தான்”என சொல்லி சொல்லி சிரித்தாள்.
மாறன் பொறுமையாக,”அங்கே தான் நீ தப்பு பண்றே ஆராதனா,நீங்கள் எதிர்கொள்ள போவது ரெண்டு காத்தவராயன்களை..ஒன்று மன்னர் காலத்தில்,இன்னொன்று இப்போ நாம் வாழும் காலத்தில் இருக்கும் காத்தவராயன் ஆவியை..!”
ஆராதனா விடாமல்”அப்போ கூட இங்க ரெண்டு பேர்,அங்க ரெண்டு பேர் போதாதா மாறா..!”
“போதாது ஆரூ..! நீ மாயமலை போன பொழுது காத்தவராயன் ஆவி மட்டுமா அங்கு இருந்தது..!”
