வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் ஏழு 41

ஹா ஹா ஹா! இது திட்டுனதுக்கு இல்லக்கா! அந்த லூசு, என்னை லவ் பண்றேன்னு, சொல்லாம சொல்லிட்டு போதுல்ல, அதுக்குதான் சிரிச்சேன்!

ஏய், என் முன்னாடியே, என் ஃபிரண்டை, அதுவும் உன்னை விட ரெண்டு வயசு பெரியவளை லூசுன்னு சொல்ற? என்ற அவன் அக்காவின் குரலில் இருந்தது வெறும் சீண்டல் மட்டுமே!

உன் ஃபிரண்டுன்னா, அது உன்னோட! எனக்கு, அவ என் லவ்வர்! ஃபியூச்சர்ல என் ஒய்ஃப்! அவளை நான் எப்டி வேணா கூப்பிடுவேன். அதெல்லாம் உனக்கு தேவையில்லை!

என்னடா லவ்வர்ங்கிற! ஒய்ஃப்ங்கிற! அவ்ளோ கான்ஃபிடண்ட்டா? கொஞ்ச நேரம் முன்னாடி, ஒரு மான்ஸ்தன் ஓவரா ஃபீல் பன்ணிட்டிருந்தானே? இப்ப எங்க போனான் அவன்?

ஆமா, கான்ஃபிடண்ட்டுதான். நான் குழம்புனது, நான், என்ன நினைக்கிறேன்னு தெரியாம இல்லை. அவ எப்டி எடுத்துக்குவான்னு தெரியாமத்தான். ஆனா, இப்ப கன்ஃபார்ம் ஆயிடுச்சி!

பாரேன் அவளை! அவளுக்காகன்னா கூட, என்கிட்ட பேச மாட்டாளாம். ஆனா, உன் விஷயம்னா, என்னைத் திட்டுவாளாம். நான் செஞ்சதையெல்லாம் விட்டுட்டு, செய்யாத ஒண்ணுக்காக, ஏன் செய்யலைன்னு கேப்பாளாம். திட்டுனாலும், என்கிட்ட பேசாம போக முடியலைல்ல?!

டேய்… போதுண்டா! திட்டுனதுக்கு இவ்ளோ விளக்கமா? என்று கிண்டல் பண்ணியவள், கொஞ்சம் சீரியசாகவே கேட்டாள்.

டேய், அவளோட கோபம் என்னான்னு உனக்கு தெரியுமா?

வேணாங்க்கா! எதுன்னாலும், அவளே என்கிட்ட சொல்லட்டும். நான் தெரிஞ்சு எந்தத் தப்பும் பண்ணலை. அப்படியே பண்ணியிருந்தாலும், அதை எப்டி சரி பண்ணனும்னு நான் பாத்துக்கறேன். என்ன பிரச்சினன்னா, அவ பக்கத்துல வரவே விட மாட்டேங்குறா. அதான் யோசிக்கிறேன். லெட்ஸ் சீ! மதனின் வார்த்தைகளில் கொஞ்சம் வருத்தம் இருந்தாலும், அளவுக்கு மீறிய நம்பிக்கையும், காதலும் இருந்தது.

அப்படி, இவர்கள் இருவருடைய அன்புக்கும், உணர்வுக்கும், பேச்சுக்கும் காரணமான, அந்த நபர்!

மதனுடைய அக்காவின் உயிர்த் தோழி!

மதனின் காதலி!

மதனை விட இரண்டு வயது மூத்தவள்!

அந்தக் காரணத்திற்காகவே, மதன் சின்ன வயதில் தன் காதலைச் சொன்ன போது மறுத்தவள்.

அதன் பின் காதல் வந்தாலும், பல்வேறு குழப்பங்களில் அதை வெளிப்படுத்தாதவள்.

ஆனாலும், இந்த இருவர் மீதும் ஆழமான அன்பினை உடையவள்.

அவள் பெயர் லாவண்யா!

(கடைசியாக கதாநாயகி, கதைக்குள் வந்தாச்சு! – அப்படி அவர்களுக்குள் என்னதான் நடந்தது?)

மதனின் பார்வையில்!

ஆரம்பத்தில், மதனின் ஃப்ளாஸ்பேக்கில், மதன், அவன் அக்கா, அவன் தாத்தா ஆகியோரிடையேயான சம்பவங்களைச் சொல்லியிருந்ததில், முதன் முதலில் மதனின் அக்கா, தேடி வந்து தாத்தாவின் முன்னிலையில், அதிக மதிப்பெண் எடுத்ததற்கு, என்னிடம் கிஃப்ட் கொடுத்த காட்சியைத் தவிர்த்து, மீதி எல்லாக் காட்சிகளிலும் நம் கதாநாயகி லாவண்யாவையும் உள்ளே சேர்த்துக் கொள்ளுங்கள்)

என் அக்கா, கிஃப்ட் கொடுத்த பின், தாத்தாவிடம் பழக்கம் ஏற்பட்ட பின், அவள் தனக்காக கேட்டது ஒன்றே ஒன்றுதான். அது, தன்னுடைய நெருங்கிய தோழி ஒருத்தியை, அந்த வீட்டில் அனுமதிக்க வேண்டும் என்றுதான். சிறு வயதிலிருந்தே அவர்கள் மிக நெருக்கம்.

லாவண்யா ஆரம்பத்தில் வரும் போது, ஏனோ எனக்கு பிடிக்கவில்லை. ஏனெனில், கடும் மன உளைச்சலில் இருந்த எனக்கு, புதியவர்களைக் கண்டாலே பிடிக்காமல் இருந்தது. இந்நிலையில், பெரும்பாலும் தன் வீட்டில் இன்னொரு புதிய ஆள், அதுவும் ஒரு பெண் என்பது எனக்கு மிகவும் கடுப்பேற்றியது.

அதனாலேயே, தன் தாத்தாவிடம், அவள் ஏன் அடிக்கடி வருகிறாள் என்று கோபப்பட்டேன்.

இல்லடா ராஜா, உன் அக்கா காசு வேணும், காரு வேணும்னு கேட்டிருந்தா நான் முடியாதுன்னு சொல்லலாம். ஆனா, தன்னோட ஃபிரண்டுக்குதானே பெர்மிஷன் கேக்குறா. தவிர, அந்த லாவண்யா பொண்ணு கதையைக் கேட்டா எனக்கே கஷ்டமா இருக்கு!

அப்படி என்ன கஷ்டம். அவிங்க காசு வேணும்னு சும்மா ஏதாச்சும் பொய் சொல்லியிருப்பாங்க…

தப்பு ராஜா! புடிக்கலைங்கிறதுக்காக, என்னான்னு தெரியாமியே பேசக் கூடாது. ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து க்ளோஸ். ஒரே ஸ்கூல், இப்பியும் ஒரே காலேஜ், ஒரே க்ளாஸ். தவிர, ரெண்டு பேருக்குமே அப்பா அம்மா இருந்தும் அனாதை மாதிரி!

அந்த கடைசி வாக்கியம் என்னை மிகவும் பாதித்தது!

ஏன் தாத்தா அப்படிச் சொல்றீங்க?

உன் அக்காவுக்கு, தன்னோட அப்பா, அம்மா நடந்துக்குற முறை பிடிக்கலை. அதுனால, தள்ளி நிக்குறா.

அந்த லாவண்யா பொண்ணுக்கு, அம்மா சின்ன வயசுலியே செத்துடுச்சு. செத்த ஒரு மாசத்துல இன்னொரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டாரம், அவிங்க அப்பா. கேட்டா, புடிக்காத பொண்ணை கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்களாம். புடிக்காத பொண்டாட்டி கொடுத்த குழந்தை மேலயும், அவருக்கு பாசம் வரலை.

பெத்த அப்பாவே, பாசமா இல்லாட்டி, புதுசா வந்த ரெண்டாவது மனைவி என்ன பாசம் காட்டிடப் போறா? சினிமால வர்ற மாதிரி சித்தி கொடுமை இல்லாட்டியும், ஒரு மாதிரி, அன்பே இல்லாத வீடு. வேலைக்காரி மாதிரி நடத்துறது மட்டும்தான் கொடுமைன்னு இல்லை. சொந்த வீட்டுல, தன்னோட எதுவுமே பேசாம, தன்னை கண்டுக்காம, வார்த்தைகளால் துன்புறுத்துறதும் கூட ஒரு கொடுமைதான்.

இத்தனைக்கும் ஓரளவு வசதில்லாம் இருக்கு. இருந்தாலும், இப்படிப்பட்ட அப்பா காசை எதிர்பார்க்கக் கூடாதுன்னு, உன் அக்கா கூட சேர்ந்து பார்ட் டைம் ஜாப்க்கு போறா! சொந்த காசுல படிக்கிறா! என்று பெருமூச்சு விட்டார். அப்படிப் பட்ட பொண்ணை எப்படிப்பா நான் வராதன்னு சொல்லுவேன்?

Updated: April 1, 2023 — 12:31 pm

1 Comment

  1. Raji ma

Comments are closed.