வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் ஏழு 41

அப்புறம் எப்படி தாத்தா இந்தளவு படிச்சி, முன்னேறியிருக்காங்க?

அவிங்க பாட்டியோட சப்போர்ட்லதான் இவ்வளவும். அப்பா சரியில்லைன்னாலும், அப்பாவோட அம்மா சப்போர்ட்டா இருந்திருக்காங்க. உன் அக்காவும் சின்ன வயசுல இருந்து ஃப்ரண்டு. உங்க அம்மா இறந்த சமயத்துலதான் அவிங்க பாட்டியும் இறந்திருக்காங்க. அதான் மனசு கேக்காம, உன் அக்கா அந்தப் பொண்ணை இங்க டெய்லி வரச்சொல்லி கேக்குது. அப்பன்னாச்சும், அந்தப் பொண்ணுக்கு கொஞ்சம் மனசுக்கு நிம்மதியா இருக்குமில்ல?!

குற்ற உணர்ச்சியில் நான் தலை குனிந்திருந்தேன். பின் மெதுவாகச் சொன்னேன். சாரி தாத்தா. நான் தெரியாம, அந்தப் பொண்ணைப் பத்தி தப்பா சொல்லிட்டேன். ப்ச்… பாட்டி, அம்மா, சித்தி, இவங்களையெல்லாம் பாத்துட்டு, எந்த உறவு மேலியோ, பொண்ணு மேலியோ ஒரு நல்லெண்ணம் வர்றதில்லை!

சரி விடுங்க! அந்தப் பொண்ணு, அவ இஷ்டப்படி வரட்டும் போகட்டும். என்று சொல்லி திரும்பிய நான் அதிர்ந்தேன். ஏனெனில், அந்த உரையாடலை என் அக்காவும், லாவண்யாவும் கேட்ட படி நின்றிருந்தார்கள். லாவண்யாவின் முகம் கலங்கியிருந்தது.

ஏனோ எனக்கு, அது மிகவும் வருத்தத்தை அளித்தது. அந்த உணர்வு எனக்கு மிகப் புதிது!

அதன் பின், லாவண்யாவின் வருகை மிக இயல்பாக இருந்தது. அக்காவைப் போல், அவளும், தாத்தாவிடம் மிகுந்த பாசம் வைத்திருப்பாள். ஆனால், அவள் என்னிடம் மட்டுமே பேசவே மாட்டாள். அக்கா கூட என்னிடம் அதிகம் பேசாவிட்டாலும், அவ்வப்போது பேசுவாள். தாத்தாவின் மூலம் சொல்ல வேண்டியதை சொல்லிவிடுவாள். ஆனால் லாவண்யா மட்டும் என்னிடம் பேசியதேயில்லை.

அவள் என்னிடம் முதலில் பேசியது ஏறக்குறைய 10 மாதங்கள் கழித்துதான்.

அன்று என் அம்மாவின் முதல் வருட நினைவு தினம். என் தாத்தா, ஏற்கனவே என்னிடம் சொல்லியிருந்தாலும், வேண்டுமென்றே, அன்று காலையிலே வெளியே சென்று விட்டு, மதியம் 3 மணிக்கு, பூஜை எல்லாம் முடிந்த பின் தான் வீடு திரும்பினேன். தாத்தா, என் அக்கா, லாவண்யா மூவரும் சாப்பிடாமல் காத்திருந்தார்கள். என்னை சாப்பிடச் சொல்லிவிட்டு, சாப்பிடும் சமயத்தில் கேட்டார்.

ஏன் ராஜா இப்டி பண்ண?

என்ன பண்ணேன்?

இன்னிக்கு பூஜை இருக்குன்னு உனக்கு தெரியுமில்ல? என்ன கோபம் இருந்தாலும், பூஜையைக் கூடவா செய்ய மாட்ட?

உயிரோட இருக்கிறப்ப செய்ய வேண்டிய கடமையை அவிங்க செஞ்சிருந்தா, செத்ததுக்கப்புறம் செய்ய வேண்டிய கடமையை நான் ஏன் செய்யாம இருக்கப் போறேன்? வாழ்ந்ததும் எனக்காக இல்லை. குறைந்த பட்சம் செத்ததும் கூட எனக்காக இல்லை. அப்புறம் என்ன அம்மா? எனக்கு பூஜை புடிக்காதுன்னு சொன்னேன். நீங்க கேக்கலை. அதான் இப்படி செஞ்சேன்.

நான் சொன்னதில் இருந்த உண்மையும், என் மனதில் இருந்த வலியும், என் தாத்தவை மிகவும் உலுக்கியது. மெல்லிய கண்ணீருடன் சாப்பிடாமல் எழுந்து விட்டார். எந்தளவு என் அம்மாவை வெறுத்தாலும், என் மேல் அன்பு காட்டும் அந்த ஜீவன் பட்டினி கிடக்கும் போது என்னால் சாப்பிட முடியவில்லை. அதனால் நானும் எழுந்தேன். கூடவே, என் அக்கா, லாவண்யாவும் சாப்பிடாமல் எழுந்தார்கள். அது மாலை வரை நீண்டது.

மாலையும் சாப்பாடு வேண்டாம் என்று நான் முரண்டு பண்ணி அறையிலேயே இருந்தேன். வந்து கூப்பிட்ட அக்காவிடமும் கோபமாக கத்தினேன். அப்பொழுதுதான் லாவண்யா என் ரூமுக்கு தனியாக வந்து சாப்பிடக் கூப்பிட்டாள். அவளிடமும் கோபமாக, உன் வேலையைப் பாரு என்று கத்தினேன். ஆனால், என் கோபத்தை, அவள் சட்டையே செய்யவில்லை.

அவள் ஆரம்பத்திலிருந்தே அப்படித்தான். என் அக்கா கூட, என் கோபத்துக்கு சில சமயம் பயப்படுவாள். ஆனால், இவளோ ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள மாட்டாள்.

கத்தி பேசுனா நீ சொல்றது சரின்னு ஆகிடாது. உனக்கு அட்வைஸ்லாம் நான் பண்ண விரும்பலை. உனக்காக இல்லாட்டியும், உன் தாத்தாக்காக வந்து சாப்டு!

என் வீட்டுக்கே வந்து, என் தாத்தாக்காக நீ சப்போர்ட் பேசுறியா? உன் வேலை என்னமோ அதை மட்டும் பாரு! இனி என் விஷயத்துல தலையிட்ட, இந்த வீட்டுக்கே வர விடாம பண்ணிடுவேன்.

உன் வீடா, இது உன் தாத்தா வீடு! அவரு சொல்லட்டும், வர்றதா வேணாமான்னு. இவ்ளோ பேசுறியே, அந்த தாத்தா, பூஜைக்காக காலையில இருந்து சாப்பிடலை. மதியம் உன்னால சாப்பிடலை. இப்ப நைட்டும், நீ சாப்பிடாம, சாப்பிட மாட்டேன்னு இருக்காரு. உங்க அம்மா, கடமையைச் செய்யலைன்னு சத்தம் போட்டியே. உனக்காக வாழ்ந்துட்டிருக்கிற, உன் தாத்தாக்கு, நீ உன் கடமையைச் செஞ்சுட்டியா?

அவளுடைய கேள்வியில் இருந்த நியாயம் என்னை யோசிக்க வைத்தது. இருந்தாலும், முதன் முறை என்னுடன் பேசுபவள், என் வீட்டுக்கே வந்து என்னிடம் அதிகாரம் பண்ணுபவளிடம், தணிந்து போக ஈகோ இடம் கொடுக்க வில்லை.

என்ன இருந்தாலும், அவருக்கு, அவரு பொண்ணு மேலதானே பாசம் அதிகம். அவரு பொண்ணைப் பத்தி சொன்னவுடனே சாப்பிடாமக் கூட எந்திரிச்சு போயிட்டாருல்ல… என் வாதம் எனக்கே மொக்கையாக இருந்தது. அதனாலேயே, நான் கொஞ்சம் மெல்லிய குரலிலேயே சொன்னேன்.

என்னையே லாவண்யா பார்த்தாள்.

நீ எப்பவுமே லூசா? இல்ல, கோபம் வந்தா மட்டும் லூசுத்தனமா பேசுவியா? உன் தாத்தா, தன் பொண்ணுக்காக சாப்பிடாம எந்திரிச்சு போகலை. தன் பொண்ணு, தன் பேரனுக்கு செய்ய வேண்டியதை செய்யலியேங்கிற வருத்தத்துலியும், அதை விட முக்கியம், இந்தச் சின்ன வயசுல, அது உனக்கு ஏற்படுத்தியிருக்கிற பாதிப்பையும் நினைச்சு ஃபீல் பண்ணிதான் சாப்பிடாம போனாரு.

நான் வீட்டுக்கு வரக்கூடாதுன்னு உன் தாத்தாகிட்ட பேசுனப்ப, எந்த பொண்ணு, உறவு மேலியும் நம்பிக்கை வர்லைன்னு சொன்னியே, அந்த கஷ்டத்தை நீ அனுபவிக்கிறியேன்னு ஃபீல் பண்ணி, அதுக்காக எந்திரிச்சு போறாரு!

உன் தாத்தா என்னான்னா, உன்னை ரொம்பதான் பொத்தி பொத்தி பாக்குறாரு. தப்பு செஞ்சா கூட திட்ட மாட்டேங்குறாரு. அதான் நீயும் ஓவரா ஆடுற! வா… வந்து சாப்டு. உன் தாத்தாவுக்கான கடமையைச் செய்யு முதல்ல. அப்புறம் சொல்லு, என்னை வீட்டுக்கு வர வேண்டாம்னு. என்று சொல்லிவிட்டு சென்றாள்.

நான் வாய் பிளந்து, அமைதியாகப் போய் சாப்பிட்டேன். யார் சொல்லியும் கேட்காதவன், முதன் முறை லாவண்யா பேசி, சாப்பிட வந்ததைப் பார்த்து, என் அக்காவே வாய் பிளந்து நின்றாள்!

Updated: April 1, 2023 — 12:31 pm

1 Comment

  1. Raji ma

Comments are closed.