எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி End 90

“ப்ச்.. நான் ஃபோனலாம் கட் பண்ணல.. எருமை மாடு மாதிரி ஒருத்தன், என்மேல வந்து இடிச்சுட்டான்.. செல்ஃபோன் செகண்ட் ஃப்ளோர்ல இருந்து கீழ விழுந்துடுச்சு..!!”

“ஓ..!! எனக்கு எப்படி அதுலாம் தெரியும்.. எப்போவும் போல இப்போவும் நீ எஸ்கேப் ஆக நெனைக்கிறேன்னு நான் நெனச்சுட்டேன்..!! கொஞ்சநேரம் என்ன பண்றதுனே எதுவும் புரியல.. அப்புறந்தான் அந்த அட்வர்டைஸ்மன்ட் கண்ணுல பட்டுச்சு..!!”

“என்ன அட்வர்டைஸ்மன்ட்..??”

“அவசர தேவைக்கு அணுகவும்னு ஏர்ப்போர்ட் அத்தாரிட்டியோட அட்வர்டைஸ்மன்ட்..!! உடனே அணுகிட்டேன்..!!” அசோக் அப்பாவியாக சொல்ல, மீராவுக்கு சிரிப்பு வந்தது.

“ஹஹாஹா..!!! லூசு..!!!!”

“ஆமாம்.. உன் மேல..!!”

அசோக் அவ்வாறு பட்டென சொல்லவும்.. சிரித்துக்கொண்டிருந்த மீரா அமைதியானாள்..!! அவனுடைய முகத்தையே ஆசையாகவும், காதலாகவும் பார்த்தாள்.. அசோக்கும் மீராவை அதே மாதிரி ஒரு பார்வை பார்த்தான்..!! ஒருசில வினாடிகள்.. அப்புறம் அசோக் திடீரென கேட்டான்..!!

“நித்தியா உன் பேரு..??”

“ம்ம்..!! அம்மாவுக்கு சின்னு.. மத்தவங்களுக்கு நித்தி.. முழுப்பேர் ஸ்ரீநித்தி..!!”

“ஸ்ரீநித்தியா..?? ரொம்ப வித்தியாசமான பேரா இருக்கு..!!”

“ஹாஹா.. யெஸ்..!!”

மெலிதாக சிரித்த மீரா, பிறகு அசோக்கின் கண்களை ஒருமாதிரி குறுகுறுவென பார்த்தவாறே,

“எனக்கு இன்னொரு பேரு கூட இருக்கு..!!” என்றாள் பாட்ஷா ரஜினி ஸ்டைலில்.

“இன்னொரு பேரா.. என்னா அது..??”

“உனக்கு ரொம்ப பழக்கப்பட்ட பேர்தான்..!!”

“என்னன்னு சொல்லு..!!”

“ஸ்ரீனி..!!”

“ஸ்ரீனியா..??” அசோக் இப்போது குழப்பமாக நெற்றியை சுருக்கினான்.

“யெஸ்.. ஸ்ரீனி..!! ஸ்ட்ரைக் ஆகுதா..??”

மீரா கேட்டுவிட்டு கண்சிமிட்ட.. அசோக் இப்போது சற்றே நிதானித்தான்..!! புத்தியை கூர்மையாக்கி தீவிரமாக யோசித்தான்.. ஒரு சில வினாடிகளிலேயே அவனுடைய மூளையில் பளிச்சென்று ஒரு மின்னல்..!!

“ஹேய்.. என் டாடியை திட்டி லெட்டர் அனுப்புற அந்த.. அந்த லவ் பெயிலியர் ஃபேன்.. அது.. அந்த ஸ்ரீனியா..??”

“ஹாஹா.. எக்ஸாக்ட்லி..!!” மீரா கலகலவென சிரிக்க, அசோக் அதிசயித்துப் போனான்.

“அடிப்பாவி..!! அப்படினா.. அந்த லெட்டர்ல..”

“யெஸ்.. என் வீட்டு அட்ரஸ் இருக்கும்..!!”

அசோக் தலையை பிடித்துக்கொண்டான்..!! ‘இவளுடைய முகவரி இத்தனை நாளாய் என் வீட்டு அலமாரியிலேயே இருந்திருக்கிறது.. அது புரியாமல் நான் உலகம் முழுக்க இவளை சல்லடை போட்டு தேடிக்கொண்டிருந்திருக்கிறேன்..!! இப்படியும் நடக்குமா..??’ அசோக்கிடம் இப்போது ஒருவகை சலிப்பும், மீரா மீதான செல்லக்கோவமும்..!! அந்த செல்லக்கோவத்துடனே அவளை திட்டினான்..!!

“ராட்சசி.. ராட்சசிடி நீ..!!!”

“ஹாஹாஹாஹா..!!!” மீரா அழகாக சிரித்தாள்.

7 Comments

  1. Good story boss ???????

    ??????????????

  2. Romba nalla kathai?? I loved it,
    Entha mathiri stories la enno naraiya podunga please? super ah eruku??..

  3. It’s a wonderful very nice to your story. I need more love story from you. Thanks

  4. Its not a sex story. Its beautiful awesome love story which melted me so much. I can’t believe that this story ended. I appreciate your work and please continue this story or new love story.

  5. கதை அருமை.

  6. super feeling ?

Comments are closed.