எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 1 195

“உ..உங்க பேரே மறந்து போச்சு..!!” பிரமிட் நடராஜன் சாயலில் இருந்த பரந்தாமன் நெற்றியை தடவியவாறே சொன்னார்.

“அ..அசோக்..!!” அவருக்கு பதிலளித்த அசோக் அல்லு அர்ஜுன் சாயலில் இருந்தான்.

“ஆங்.. கரெக்ட் கரெக்ட்.. அசோக்..!! இப்போ ஞாபகம் வந்துடுச்சு..!! ஹாஹா.. வயசாயிடுச்சுல..??”

“ம்ம்..!! அதனால என்ன ஸார்..?? பரவால..!!”

“வந்து ரொம்ப நேரம் ஆச்சோ..??”

“இல்ல ஸார்.. ஒரு பத்து நிமிஷம் இருக்கும்.. அவ்வளவுதான்..!!”

“ம்ம்.. காஃபி, டீ ஏதும் சாப்பிடுறீங்களா..??” அவர் சம்பிரதாயமாக கேட்க,

“இ..இல்ல ஸார்.. பரவால..!!” அசோக் புன்னகையுடன் தவிர்த்தான்.

“வெயில்ல அலைஞ்சு வந்திருப்பீங்க போல.. கொஞ்சம் தண்ணியாவது குடிங்க..!!” அவர் கண்ணாடி தம்ளரில் இருந்த தண்ணீரை அசோக்கின் பக்கமாக நகர்த்தினார்.

“பரவால ஸார்.. இருக்கட்டும்..!!” அசோக் அதை தொட்டுக்கூட பார்க்காமல் சொன்னான்.

“ஹ்ம்ம்.. சொல்லுங்க தம்பி.. கிஷோர் தம்பி உங்களை பத்தி ஆஹா ஓஹோன்னு சொன்னாரு.. நானும் ‘சரி அனுப்பி வைங்க.. பேசிப்பாக்குறேன்..’னு சொல்லிருந்தேன்..!!” அவருடைய பேச்சில் ஒரு அலட்சியம் தெரிந்தது. இருந்தாலும்,

“ரொம்ப தேங்க்ஸ் ஸார்.. எனக்காக உங்களோட டைம் ஒதுக்கித் தந்ததுக்கு..!!” அசோக் நிஜமான நன்றியுணர்வுடன் சொன்னான்.

“பரவால தம்பி..!! மொதல்ல.. உங்களை பத்தி கொஞ்சம் சொல்லுங்க..!!”

அவர் கேட்க, அசோக் இப்போது தனது கையிலிருந்த ஃபைலை டேபிள் மீது வைத்தான். சர்ர்ர்ரென ஜிப்பை இழுத்து ஃபைலை திறந்தான். உள்ளே இருந்த அந்த டிவிடி கேஸை வெளியே எடுத்தான். எதிரே இருந்தவரின் முன்பாக வைத்து, அதை அவர் பக்கமாய் நகர்த்தினான். பரந்தாமன் இப்போது சற்றே குழம்பிப்போனவராய், அந்த டிவிடி கேஸ் மீதிருந்து பார்வையை விலக்காமலே கேட்டார்.

“என்ன தம்பி இது..??”

“என் ரெஸ்யூமே ஸார்..!! நான் எடுத்த ஆட் ஃபில்ம்ஸ்.. ஷார்ட் ஃபில்ம்ஸ்.. டாகுமன்ட்ரிஸ்.. எல்லாம் இதுல காப்பி பண்ணிருக்கேன்..!! இதை பாத்தீங்கன்னா என்னைப் பத்தி உங்களுக்கு ஒரு ஐடியா கெடைக்கும்..!!”

“ஹாஹா.. எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி.. நீங்களே கொஞ்சம் உங்களை பத்தி சொல்லிடுங்க..!! என்ன பண்ணுனீங்க.. என்ன பண்ணிட்டு இருக்குறீங்க.. எப்படி போயிட்டு இருக்கு..??”

பரந்தாமன் அப்படி கேட்பார் என்று அசோக் எதிர்பார்க்கவில்லை. சற்றே தடுமாறினான். அவருக்கு பக்கவாட்டில் இருந்த கம்ப்யூட்டரை அமைதியாக ஒருமுறை பார்த்தான். ‘நேரம் இல்லையா..?? அப்புறம் எதற்கு இதெல்லாம் இங்கு இருக்கிறது..??’ என்பது போல இருந்தது அவனது பார்வை. பரந்தாமன் ஒரு கையை, அமர்ந்திருந்த சேரின் கைப்பிடியில் ஊன்றி இருந்தார். புறங்கையை இன்னொரு கையால் தடவிக்கொண்டே, ஒருபக்கமாய் தலையை சாய்த்து வைத்துக்கொண்டு, திறந்த வாயும் இடைவெளி விழுந்த பற்களுமாய் இவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அசோக் இப்போது மெல்ல ஆரம்பித்தான். தன்னைப் பற்றி கூறினான்.

“எ..என்னை பத்தி சொல்றதுக்கு பெருசா எதுவும் இல்ல ஸார்..!! பொறந்தது வளந்தது படிச்சதுலாம் சென்னைதான்..!! லயலால விஷுவல் கம்யூனிகேஷன் முடிச்சேன்.. காலேஜ்ல படிக்கிறப்போவே ஆட் ஃபில்ம் இண்டஸ்ட்ரி மேல ரொம்ப இன்ட்ரஸ்ட்..!! டிக்ரீ முடிச்சதும்.. சென்னை ஃபில்ம் ஸ்கூல்ல, சிக்ஸ் மன்த்ஸ் கோர்ஸ் அண்ட் ட்ரெயினிங் எடுத்துக்கிட்டேன்.. ஆட் ஃபில்ம் மேகிங் பத்தி..!! அப்புறம்.. நானும், என் கூட படிச்ச பிரண்ட்ஸ் கொஞ்ச பேரும் சேர்ந்து ஒரு அட்வர்டைசிங் கம்பனி ஆரம்பிச்சு, இப்போ நடத்திட்டு இருக்குறோம்.. கிஷோர் கூட அதுல ஒன் ஆஃப் தி பார்ட்னர்ஸ்..!!”

“ம்ம்ம்.. சொன்னாரு சொன்னாரு..!! உங்க ஆபீஸ் எங்க இருக்கு..??”

“வடபழனிதான் ஸார்.. ஆர்காட் டெரஸ்க்கு ஆப்போசிட்..!!”

“ஒ.. அப்போ ரொம்ப பக்கத்துலதான் இல்லையா..??”

” ஆமாம் ஸார்..!!”

Updated: June 3, 2021 — 3:03 am