யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 10 217

அதற்க்குள் அக்கம்பக்கத்தினர் சத்ததை கேட்டு சூழ்ந்தனர்… அப்போது வடிவை விசாரிக்க வந்த போலிஸ் இங்கே கூட்டமாக இருப்பதால் வடிவிடம் செல்லாமல் நேராக இங்கே வந்தனர்… பின் ரவி அவர்களுக்கு விளக்கமாக எடுத்து கூறினான்… வீட்டில் பின்புறம் இருந்த கோணி துணியையும் எடுத்து காட்டினான்.. காவலாளி ஒருவர் வீட்டை சோதனையிட்டதில் உள்ளே இருந்து ஒரு பையில் கயிறு, மயக்க மருந்து , கூர்மையான கத்தி, ஆசிட் பாட்டில் , சிரஞ்சி ஊசி , சிறிய பாட்டிலில் ஏதோ பெயரில்லா திரவம் போன்றவை சிக்கியது… இவையனைத்தும் ஜானகி வடிவை பழிவாங்க டவுனில் இருந்து பட்டாபி முலம் வாங்கி வந்தவை..

காவலாளி ” ஏம்மா… இதெல்லாம் என்னது..மா..”

ஜானகி கையும் களவுமாக பிடிபட்டதில் உண்மையை ஒத்துகொண்டு ” வடிவ பழிவாங்கதான் சார்.. இதெல்லாம் வாங்கினோம் …ஆனா…. ” என கூறி கொண்டிக்கும் போதே. ..

காவலாளி ” போதும் போதும்…. டேஷன்ல்ல போய் மத்தத சொல்லு…ஏறு வண்டில… ” என மூவரையும் கைது செய்து ஜீப்பில் கொணடு சென்றனர்..

அதேசமயத்தில் இதையெல்லாம் அறியா வடிவுக்கரசி அவளது வீட்டில் அந்த ஒல்லியானவன் அப்போது தன் காதில் என்ன கூறினான் என யோசித்து கொண்டிருந்தாள். .. அப்போது இருந்த பதட்டத்தில் அந்த வார்த்தைகளை கவனிக்க தோன்றில்லை. .. எவ்வளவு சித்தித்தாலும் அவன் என்ன கிசுகிசுத்தான் என்று நியாபகம் வரவில்லை. … திரும்ப திரும்ப யோசித்தாள்…. ஏதோ ஒன்று புலப்பட ஆரமித்தது.. அந்த வார்த்தைகள்…. ஆம் அந்த வார்த்தைகள் … அதே குரலுடன் அதே வார்த்தைகள் …. கண்டுபிடித்துவிட்டாள் அது யார் என்று…

இப்போது வடிவின் உடல் சிலிர்த்தது அவளை அறியாமல் வாய் முனுமுனுத்தது ” அவனா???……. அப்போ உடன் வந்தவன்?? இல்லை இல்லை வந்ததவள்..??? நான்தான் அவள் கத்தும் போது கேட்டேன். .. அந்த குரல் பெண்ணின் குரல் தான்…. அப்படி என்றால் உடன் வந்ததவள்… அவளேதான்…. எதற்க்காக என்மேல் இவ்வளவு கோவம் அவர்களுக்கு… ஒருவேளை சொத்துக்காக இருக்குமோ…. ச்சே ச்சே.. இருக்காது..!! ” என தனக்குள் சித்தித்து கொண்டிருந்தாள்.

அப்போது வந்த ரவி ” மா…அம்மா…. நம்மல கட்டி போட்டு டார்ச்சர் பன்னவங்கள நான் கண்டு புடிச்சிட்டேன்…. ”

வடிவு ” அப்படியா…. யார்…டா அவங்க..!!”

ரவி ” ஜானகியும் அவங்க மகன் கோபாலும் தான்”

வடிவு ” அது கண்டிப்பா.. அவங்க இல்ல..டா …”

ரவி ” எப்டி சொல்றீங்க?…..அப்போ வந்தது யாரு”

வடிவு ” உங்..அப்பாவும் என்..அம்மாவும் ! !! ” என ஏதோ ஒரு வேகத்தில் கூறிவிட்டு …. தன் தவறை உணர்ந்து வாய்மேல் கை வைத்து கொண்டாள்..

Updated: August 12, 2021 — 2:30 pm

3 Comments

  1. Supr brooo 😂

  2. Semma story semmaya irukku

  3. சூப்பர் கதை படிக்க இன்ரெஸ்டா படிக்க
    படிக்க அருமையா போகுது

Comments are closed.