மேல் மார்புகளில் திராட்சைப் பழத் தோட்டத்திற்குச் சொந்தக்காரி – 2 47

ஆமா, அங்க என்ன வசதி இருக்கு? அங்க எதுக்கு, என் பொண்ணு போயி இருக்கனும்?

நீ என்னைக் கட்டிகிட்டப்ப, உங்கப்பா என்ன சீர் செஞ்சாரு? நீ என்ன கோடீஸ்வரன் வீட்டுப் பொண்ணா? நான் உன்னை கட்டிக்கலை? வசதி பாத்திருந்தா, உன் வீட்ல நான் தங்கியிருப்பேனா, இல்லை வசதி கம்மின்னு, உன் பொறந்த வீட்டுக்கு, என் பொண்ணை அனுப்பாம இருந்திட்டேனா?

ஏன்பா இப்படி பேசுறீங்க?

நியாயம்ன்னா எல்லாருக்கும் ஒண்ணுதானம்மா! அம்மாவும், பொண்ணும் என்னை நல்லா பேச வைக்குறீங்க?! வெளில உழைச்சிட்டு வர்ற மனுஷன், வீட்டுக்கு ஆசையா வர்றது, அந்த வீட்டு, பொண்ணு கையிலதான் இருக்கு! ஒரு நல்ல நாள் அன்னிக்கு, உன் புருஷன் இல்லியேன்னும் உனக்கு அறிவில்லை, கட்டுன புருஷனுக்காக பாக்காட்டியும், அந்தக் குழந்தை தேடுமேன்னும், நீ ஃபீல் பண்ணலை! பொண்ணு தப்பு பண்ணா, திருத்தாம, தீபாவளி அன்னிக்கு மாப்பிள்ளை கூட இல்லாம இருக்காளேன்னு, உங்கம்மாவும் ஃபீல் பண்ணலை!

அம்மாவை ஏம்பா திட்டுறீங்க?

திட்டாம? உனக்கு அவ நல்ல அம்மாவா இருக்கலாம்! ஆனா, அவ நல்ல மாமியாரா, சம்பந்தியா இல்லையே?! இருந்திருந்தா, மாப்பிள்ளையை, ஏன் வரலைன்னு கேட்டிருப்பால்ல? இல்ல, வசதி கம்மினாலும், சம்பந்தி வீட்டுக்கு, அவளே கூட்டிட்டு போயிட்டு வந்திருப்பா!

உங்கம்மா என்ன பெரிய மகாராணியா? உங்கம்மாவை, நான் கல்யாணம் பண்ணப்ப, உங்கம்மாவுக்கு இருந்த வசதியை விட, உன் மாமியார் வீடு, இப்ப நல்ல வசதியாத்தான் இருக்கு அஞ்சலி! ஆனா, உனக்கும், உங்கம்மாவுக்கும், பணத் திமிர்ல கண்ணு தெரிய மாட்டேங்குது!

யாருக்கு அமையும், இப்படி ஒரு மாப்ளையும், குடும்பமும்? மருமகளை ஒரு வேலை செய்யச் சொல்லியிருப்பாங்களா, இல்லை மிரட்டியிருப்பாங்களா?

மாப்ளையோட ஊருல, எனக்கு இருக்குற அரிசி மில்லை, அவரு பேருக்கு மாத்தி எழுதலாம்னு கேட்டதுக்கு, எதா இருந்தாலும், உங்க பொண்ணு பேருலியோ, பேரக் குழந்தை பேருலியோ எழுதுங்க மாமான்னு சொன்னவருடி என் மாப்ளை! பொண்ணு வீட்ல, வரதட்சணை கேட்டு நோகடிக்குற காலத்துல, மருமளையும் பேரக் குழதையையும் தேடி வந்து பாத்துட்டு, இனிப்பு கொடுத்துட்டு அமைதியா போறாங்களே, அந்தப் பெத்தவங்களோட நல்ல மனசு உங்களுக்கு எப்ப புரியுமோ?!

இந்தத் திமிருல்லாம், என்னைக்கும் நிலைக்காதுமா! உனக்கும், உன் அம்மாவுக்கும் பிசினஸ்ல என்னென்ன பிரச்சினைன்னு தெரியுமா? வராத பணத்தை எப்படி வசூல் பண்றதுன்னு தெரியுமா? குறைஞ்சது, நம்ம கடையோட கல்லாவுல உக்காந்து மேனேஜ் பண்ணத் தெரியுமா?

நாளைக்கே, எனக்கு ஏதாவது ஆச்சுன்னா, மாப்பிள்ளைதான் எல்லாத்தையும் பாக்கனும்! ஒருவேளை பிசினஸ் லாஸ் ஆகி நான் நடுத்தெருவுக்கு வந்தாக் கூட, என் மாப்ளை என்னைக் காப்பாத்துவாரும்மா! ஆனா, அவருக்குதான், இந்த வீட்டுல மரியாதை இல்லை!

நல்ல வேளை அஞ்சலி, நீ பொறக்குறதுக்கும் முன்னாடியே பொறந்த குழந்தை, அன்னிக்கே செத்துருச்சு! மருமகனையும், அவரு குடும்பத்தையுமே இந்தப் பாடு படுத்துற உங்கம்மா மாதிரி பொம்பிளையெல்லாம், மருமகளையெல்லாம் என்ன பாடு படுத்துவாளோ? அன்னிக்கு, நான் என்ன பாவம் பண்ணேன்னு, உங்கம்மா அழுதா! இப்பதானே புரியுது ஏன்னு? கடவுள் சரியாதான் செய்யுறாரு! பொம்பிளையா நீ, ராட்சஸி! பெத்த பொண்ணு வாழ்க்கையிலியே விளையாடுறவ என்று கத்தி விட்டுச் சென்றார்.

தன் முதல் குழந்தையை வைத்து திட்டியதில் அஞ்சலியின் அம்மா, அவரது கோபத்தை புரிந்து கொண்டாள்! அவருக்கு எளிதில் கோபம் வராது. வந்தால் அவ்வளவுதான் என்று புரிந்ததில், அதன் பின் அவள் அமைதியாகி விட்டாள்!

ஆனால், அவர் பேசியதில், ஓரளவு திருந்தினாலும், முழுதாகத் திருந்தாத அஞ்சலி, இதுவரை திட்டாத, அப்பா, தன்னைத் திட்டுவதற்குக் காரணம் விஜய்தான் என்று, அதையும் தவறாகத்தான் புரிந்து கொண்டாள்!
அதன் பின், வார இறுதிகளில், வெளியே சந்தித்து பேசிக் கொண்ட சிவாவும், விஜய்யும், ஏனோ, நிவேதாவுக்கும், அஞ்சலிக்கும், தாங்கள் நண்பர்களானதைச் சொல்ல விரும்பவில்லை!

ஏன் சிவா, நீ இன்னமும் நிவேதாவை டைவர்ஸ் பண்ணாம இருக்க? உனக்கு இன்னும் வயசு இருக்குடா! என்னை மாதிரி, குழந்தைக்காகன்னு கூட பார்க்க வேண்டிய அவசியமில்லையே?! எப்படிடா வாழுற அவளோட?

இல்லை விஜய்! அவ பாவம்டா! அவ இப்படி நடந்துக்குறதுக்கே, அவங்கப்பாதான் காரணம்! என்று நிவேதாவின் சிறு வயது வாழ்க்கையைச் சொன்னவன்,

அவ நடந்துக்குறது எல்லாமே அந்தப் பாதிப்புனாலதாண்டா! அவளால, யாரையும் நம்ப முடியலை! அவங்கம்மா, ரொம்ப நாளைக்கு ஏன் அப்படி ஒரு ஆளை, பொறுத்துப் போனாங்கன்னு அவங்க மேலயும் கோபம்! இப்படியே தனியாவே வளந்ததால, யார்கிட்ட, எப்படி நடந்துக்கனும்னு தெரியலை! அவளுக்குத் தேவை, டைவர்ஸ் இல்லைடா, சின்ன கவுன்சிலிங்கும், அன்பும்தான்!

முன்னைக்கு நிறைய மாறிட்டாடா! இன்ஃபாக்ட், அவளுக்கு உள்ளுக்குள்ள என்கிட்ட நெருங்கி வரனும்னு ஆசையா இருக்கு! ஒரு சராசரி வாழ்க்கையை வாழனும்னு ரொம்ப ஆசை! எனக்கு உடம்பு சரியில்லன்னா ஒர்கிங் ஃப்ரம் ஹோம் போட்டுட்டு, வேலை கம்மி, இங்க இருந்தே ஒர்க் பண்ணா போதும்னு அலட்சியமாச் சொல்லுவா! என்னை பாத்துகிட்டாலும், அதை வெளிக்காட்டிக்க மாட்டா! ஆனா, நானும் அவளை ஏமாத்திடுவேனோன்னு, அவளாவே நினைச்சுகிட்டு, கண்டதையும் பண்ணிட்டிருக்கா! அவளுக்கு, இன்னொரு ஏமாற்றத்தை தாங்குற தைரியம் இல்லை! சொல்லப் போனா வளர்ந்த குழந்தை அவ!

சொன்ன சிவாவையே, அன்பாய் பார்த்த விஜய், நிவேதா, ரொம்ப லக்கிடா!

அஞ்சலி மட்டும் என்ன? அவளும் லக்கிதான்! ஆனா, நாமதான் லக்கி இல்லாம போயிட்டோம்…

அதென்னவோ உண்மைதான்! பாரேன், அவிங்ககிட்டயே, அடி வாங்கிட்டு, அவிங்களுக்காகவே, ஃபீல் பண்ணிட்டு இருக்கோம்?!