கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 37 3

செல்வாவுக்கு ஒரு விஷயம், அதுவும் இதுமாதிரியான தப்பான விஷயம் ஒரு தெரிஞ்சிருக்குன்னா, அது சீனுவுக்கும் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்… சீனு, செல்வா வீட்டுல பிறக்காத பிள்ளை. தன் பர்சனல் விஷயங்களை மனசு விட்டு கலந்து பேசறதுக்கு சீனுவைத் தவிர செல்வாவுக்கு வேற யாரும் நெருங்கிய சினேகிதர்கள் கிடையாதே? அவங்க ரெண்டு பேருக்குள்ளவும், ஒளிவு மறைவே கிடையாதே? இந்த விஷயத்தை நிச்சயமா செல்வா சீனு கிட்ட டிஸ்கஸ் பண்ணியிருக்கணும். ஆனா சீனுவும் என் கிட்ட இதைப்பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லவேயில்லையே?

யெஸ்… ஐ காட் இட்… செல்வா குழம்பியிருந்தாலும், நிச்சயமா சீனுதான், அவன் தலையில ரெண்டு தட்டு தட்டி, இங்க வாடான்னு இழுத்துக்கிட்டு வந்திருக்கணும்…
“ சுகன்யாவுக்கு இதை நினைக்கும் போதே மிக்க அதிர்ச்சியாக இருந்தது. அவள் முகம் மெள்ள மெள்ள கருத்துக்கொண்டிருந்தது.
“சுகன்யா… உனக்கு ஆப்பு வெச்சவனை, உன் அத்தான்னு சொல்லி, முறைப்படி நீ செல்வாவுக்கு என்னை அறிமுகப்படுத்தினே? வெள்ளை மனசோட என் கையைப் பிடிச்சு அவன் எதிரிலேயே குலுக்கினே..! அன்னைக்கு உனக்கு உடம்பு சரியில்லே, அதனாலதான் நீ என் கிட்ட சரியா பேசலைன்னு எனக்கு விளக்கம் சொல்லி, எல்லார் எதிரிலேயும் என் கிட்டே ஸாரி சொன்னே..!!” உணர்ச்சி வசப்பட்ட சம்பத்தின் கண்கள் கலங்கத் தொடங்கின… அவனால் கோர்வையாகப் பேசமுடியாமல் தவித்தான்.

சுகன்யா… சம்பத்தை அறையணும்ன்னு உனக்கு தோணினது உண்மைதான். ஆனா இவன் உண்மையைச் சொல்லி அழறதை பாக்கும்போது… இவன்தான் முட்டாள்தனமா ஒரு தப்பு பண்ணா, அதுக்காக நீ ஏன் உன் தரத்தை தாழ்த்திக்கணும்? சுகன்யாவின் மனசு வேகமாக அவளுக்குள் பேசியது. சுகன்யா நீ அவன் சொல்றதை முழுசா, பொறுமையா கேளு. சட்டுன்னு கோபப்பட்டு நீ உன் வாழ்க்கையை சிக்கலாக்கிக்காதே. ஏற்கனவே ஒரு தரம் நீ செல்வாகிட்ட இப்படித்தான் கண்ணு மண்ணு தெரியாம எரிச்சல்பட்டு, அவன் உறவே வேணாம்ன்னு ஓடியிருக்கே. இப்பத்தான் அந்த சிக்கல் சரியாகி இருக்கு. திரும்பவும் சட்டுன்னு பொறுமையை இழந்து உன் காதல் வாழ்க்கையில, திருமண வாழ்க்கையில, மீண்டும் எந்த குழப்பத்தையும் உண்டு பண்ணிக்காதே? அவள் மனம் அவளை எச்சரித்தது.

“ப்ளீஸ்… சம்பத்… என்னை நீங்க சரியா புரிஞ்சுக்காம, ஏதோ தப்பு நடந்து போச்சு… அதுக்காக நீங்க உணர்ச்சி வசப்படாதீங்க… இப்ப அழாதீங்க நீங்க…” சுகன்யா அவன் கையை மெல்ல வருடினாள்.

“சுகா.. அன்னைக்கு நீ எந்த வித்தியாசமும் பார்க்காம, என் கிட்ட பாசமா, அன்பா பழகினே.. பழகிக்கிட்டு இருக்கே; என்னை நம்பி தனியா இவ்வளவு தூரம் வந்திருக்கே; உன் நடத்தையால, வெள்ளை மனசால, ஒரே ஸ்ட்ரோக்ல என்னை.. என் திமிரை.. என் அகம்பாவத்தை… என் அகங்காரத்தை சுக்கு நூறா நீ ஒடைச்சு எறிஞ்சிட்டே… அன்னைக்கு நான் வெக்கத்தால தலை குனிஞ்சு உன் முன்னாடி நின்னேன்.. இப்பவும் நிக்கறேன்…”

“அத்தான்… போதும்… நீங்க இதுக்கு மேல எதையும் சொல்லாதீங்க ப்ளீஸ்… எனக்கு தலை சுத்தற மாதிரி இருக்கு” சுகன்யா தன் தலையை இரு கைகளாலும் அழுத்திப் பிடித்துக்கொண்டாள்.. சம்பத் அழுவதையும் அவளால் நேராகப் பார்க்கமுடியவில்லை. என்னமாதிரி ஒரு இக்கட்டுல மாட்டிக்கிட்டு இருக்கேன் நான்? அவனைப் பார்ப்பதை தவிர்க்க நினைத்து அவள் தன் தலையை குனிந்து கொண்டாள்.

“அத்தான்.. அத்தான்னு நீ என்னை, நமக்குள்ள இருக்கற உறவை முதன்மைப்படுத்தி அழைக்கறப்ப, என் ஒடம்பு சிலுத்துப் போவுது. நீ என்னை செருப்பால அடிக்கற மாதிரி இருக்கு… இப்படிப்பட்ட பொண்ணையா நான் பழிவாங்க நெனைச்சேனேன்னு நான் என் உள்ளுக்குள்ள எரிஞ்சு போறேன்…” புலம்பிக்கொண்டிருந்தான், சம்பத்.

“சம்பத்… ம்ம்ம்.. அத்தான்…” சுகன்யாவும் உணர்ச்சிவசப்பட்டு பேசமுடியாமல் திணறினாள்.

“சுகன்யா, என் வாழ்க்கையில, பணத்தால எதையும் வாங்கிடமுடியும்ன்னு நம்பறவன் நான்; பணத்தால ஒரு பெண்ணுடலை சுலபமா அடையலாம்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தவன் நான்; என் கட்டான உடலால எவளையும் எளிதா வசியம் பண்ணிடலாம்ன்னு நினைக்கறவன் நான்..”

“ப்ச்ச்…ப்ச்ச்ச்”

“ப்ராண்டட் ட்ரெஸ் போடறதுனால, லேட்டஸ்ட் மொபைல் இருந்தா போதும், ஈஸியா இளம் பெண்களை சட்டுன்னு கவர்ந்துடலாம்ன்னு, அழகான ஃபிகர்களை கரெக்ட் பண்ணிடலாம்ன்னு, மனக்கோட்டை கட்டிக்கிட்டு, பைக்ல சுத்தி சுத்தி வந்தவன் நான்; என் அகங்காரத்துக்கு ஒரு எல்லையே இல்லாம வாழ்ந்தவன் நான்… ஆனா…” பேசுவதை ஒரு வினாடி நிறுத்தினான், சம்பத்.

“ப்ளீஸ்… அத்தான்… நீங்க எதுவும் சொல்லவேண்டாம்… உங்க மனசு எனக்கு நல்லாப் புரியுது…” சுகன்யா அவன் வலது தோளைத் தன் கையால் மென்மையாக வருடினாள்.

“சுகன்யா நான் ஒரு உண்மையைச் சொல்லித்தான் ஆகனும்.. அன்னைக்கு, சிவதாணு தாத்தா வீட்டுல, நான் உன்னை முதல் தரம் பாக்க வந்தப்ப, உன் உடம்பு மேல விழுந்த என்னோட அசிங்கமான பார்வையை சகிச்சிக்க முடியாம, நீ உன் மூஞ்சை திருப்பிக்கிட்டு உள்ளே போனேயே, அந்த நொடியில என் அகங்காரத்துக்கு மொதல் அடி விழுந்தது.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *