கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 37 6

“அத்தான்… போதும்.. நிறுத்துங்கன்னு சொல்றேன் நான்?” சுகன்யாவுக்கு மனதுக்குள் இலேசாக ஒரு இனம் தெரியாத பயம் எழுந்தது.

“அதுக்கப்புறம், நீ என்னை உன் அத்தான்னு, செல்வாகிட்ட அறிமுகம் பண்ணப்ப, நான் அவனை தப்பா பேசினது எதையுமே தன் மனசுல வெச்சுக்காம, சிரிச்சுக்கிட்டே செல்வா, என் கையைப்பிடிச்சு குலுக்கினப்ப, என் தலைமேல இன்னொரு பலமான அடி விழுந்தது… என் அகங்காரத்து மேல விழுந்த ரெண்டாவது அடி அது..”

“ப்ச்ச்ச்…ப்ச்ச்ச்..” சுகன்யா அவளையும் அறியாமல் பச்சாதாபத்துடன் சூள் கொட்டிக்கொண்டிருந்தாள்

“உன்னை மாதிரி ஒரு பெண்ணோட மனசை என்னை மாதிரி அயோக்கியனால, மளிகை சாமான் வாங்கற மாதிரி, வெலை கொடுத்து வாங்கமுடியாதுங்கறது, இந்த ரெண்டு மூணு நாள்ல எனக்கு நல்லாப் புரிஞ்சுப்போச்சு….”

“இப்ப எதுக்கு நீங்க இந்த அளவுக்கு ஃபீல் பண்றீங்கன்னு எனக்குத் தெரியலை…?” சுகன்யா அவள் உட்க்கார்ந்த இடத்திலிருந்து எழுந்து நின்றாள். தனது இடமும் வலமும் ஒரு முறைப் பார்த்தாள்.

சம்பத்தின் குரல் தழுதழுத்தது. அவன் குரலில் இருந்த தழதழப்பை உணர்ந்த சுகன்யா ஒரு கணம் ஆடிப்போனாள். நின்றிருந்த இடத்திலிருந்தே, அவள் தன் ஓரக்கண்ணால் அவனை நோக்கினாள். கண்கள் குளமாகி, கன்னங்கள் கோணிக்கொண்டு, மூக்கு நுனி துடிக்க, பேசமுடியாமல், விசும்பிக்கொண்டு, உட்கார்ந்திருந்தான், சம்பத்.

“சம்பத்… இப்ப எதுக்காக நீங்க இப்படி உணர்ச்சி வசப்படறீங்க? நான் சொல்றதை கேளுங்க… அத்தான்… ப்ளீஸ்… கூல் டவுன்…”

சுகன்யாவை நான் பழிவாங்க நினைசேன்; செல்வாவை, அவளுக்கு எதிராக உசுப்பினேன்.. இதெல்லாம் தெரிஞ்சப் பின்னும், இவ என்னை
“அத்தான்னு’
“அத்தான்னு’ கூப்பிடறாளே…? சம்பத் உள்ளத்தில் வெட்கினான். அவன் உடல் குன்றிப் போனது. அவன் உடல் சிலிர்த்து நடுங்கினான்.

“சுகன்யா… நீ ஒரு மனுஷனடான்னு, கோபமா ஒரு தரம் என்னை திட்டேன்?” சுகன்யாவிடம் முறையிட்டான், சம்பத்.

“ஏனோ தெரியலை… ஐ ஸ்வேர்… உங்க மேல எனக்கு கோவமே வரலை… அத்தான்… உங்களைத் திருப்தி படுத்தணுங்கறதுக்காக இப்படி நான் பேசலை… என்னை நீங்க நம்புங்க… உங்க மனசுல இருக்கற குற்ற உணர்ச்சியை தயவு செய்து சுத்தமா இப்பவே, இங்கேயே, தொடைச்சி தூரப்போடுங்க…” சம்பத்தின் தோளை ஆதுரமாக சுகன்யா தட்டிக்கொடுத்தாள்.

“தேங்க்ஸ் சுகன்யா…” கண்களைத் துடைத்துக்கொண்ட சம்பத்தின் பார்வை வெகு தூரத்தில் ஒரு புள்ளியில் நிலைத்து நின்றிருந்தது. சில வினாடிகள் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தவன், மெல்ல திரும்பி சுகன்யாவைப் பார்த்தான். அவள் வலது கையை தன் கையால் பற்றிக்கொண்டான். அவள் முகத்தை ஏக்கத்துடன் ஒரு நொடி பார்த்தான். தன் மனதில் சுகன்யாவிடம் தனக்குள் தோன்றியிருக்கும் காதலை சொல்லிவிட அவன் முடிவெடுத்தான்.

‘சுகன்யா… ஐ லவ் யூ..” சம்பத் மெல்ல தன் மனதை அவளுக்குத் திறந்து காட்டினான்.

“அத்தான்… என்ன சொல்றீங்க நீங்க…!!?? என் தலை மேல இப்படி ஒரு குண்டைத் தூக்கி ஏன் போடறீங்க…? இந்த அதிர்ச்சியை என்னாலத் தாங்க முடியலே..! சுகன்யா பதட்டத்துடன் கூவினாள். தன் வாயடைத்துப் போய், பேச்சு மூச்சில்லாமல், ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்த சுகன்யா, மேலும் ஏதோ சொல்ல நினைத்து வாயைத் திறந்த போதிலும், அவள் குரல் தொண்டையிலேயே சிக்கிக்கொண்டு வெளியில் முழுமையாக வரவில்லை.

“நிஜம்மாத்தான் சொல்றேன் சுகன்யா… என் மனசு உன்னை நேசிக்க ஆரம்பிச்சிடிச்சி..” சுகன்யாவின் முகத்தை சம்பத் கண்ணிமைக்கால் பார்த்துக் கொண்டிருந்தான். சுகன்யாவின் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களை புரிந்து கொள்ளாமல் அவன் மெல்லிய குரலில் மேலும் பேச ஆரம்பித்தான்.

“அயாம் வெரி ஹாப்பி சுகன்யா…”

இவனுக்கு நான் என்ன பதில் சொல்றது? இவனுக்கு எப்படி என் மன நிலைமையை புரிய வெக்கறது?” சுகன்யா கடமைக்காக அவனுக்கு
“ம்ம்ம்…’ என பதிலளித்த போதிலும், அவள் மனசுக்குள் வெகுவாக குழம்பி போயிருந்தாள்.

“சுகா.. இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என் மனசு ரொம்ப ரொம்ப இலேசா இருக்கு. என் கிட்ட அன்போட பேசற, உரிமையோட என் மனசை புரிஞ்சுக்கிட்டு பேசற, அழகான ஒரு இளம் பொண்ணோடு உக்காந்து இருக்கறதே எவ்வளவு பெரிய சுகங்கறது எனக்கு இப்பத்தான் புரியுது!!” சுகன்யாவிடம் தான் செய்த தவறை சொல்லி மன்னிப்பு கேட்ட பின், தன் மனதிலிருக்கும் காதலை அவளிடம் சொல்லிய பின், தன் மனது இலவாகியிருக்க சம்பத் குரலில் பதட்டமில்லாமல் பேசிக்கொண்டு போனான்.

“அத்தான்.. உங்களுக்கு என்ன கொறை? நீங்க எந்தவிதத்துல யாருக்கு கொறைச்சல்…? நான் கருப்பா இருக்கேன்னு நீங்க ஏன் இப்படி ஒரு தாழ்வு மனப்பாண்மையோட இருக்கீங்க.? நிறையப் படிச்சு, நல்ல வேலையில இருக்கற நீங்க இப்படி ஒரு எண்ணத்தை உங்க மனசுக்குள்ள வெச்சிருக்கலாமா…? அதை மொதல்ல விடுங்க…!!” சுகன்யா அவனிடம் ஆதரவாக அவன் மனதுக்கு இதமாகப் பேசினாள்.

“தேங்க் யூ சுகன்யா…”

“என்னைப் போய் நீங்க அழகுன்னு சொல்றீங்க… உண்மையைச் சொல்லப்போனா, என்னைவிட அழகா, என்னைவிட அதிகமா படிச்சு, என்னை விட அதிகமா சம்பாதிக்கற பொண்ணுங்க, நல்லப் புத்திசாலித்தனம் உள்ள பொண்ணுங்க, இந்த ஊர்லேயே எவ்வளவோ பேரு இருக்காங்க.. அவ்வளவு ஏன்..? நம்ம சொந்த பந்தத்திலேயே நல்லப் பொண்ணுங்க இருக்காங்க…” சுகன்யா நிதானமாக, அவனிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

“பீளீஸ்.. சுகா, அவங்க யாருமே… என்னைக்குமே என்னோட மனசுக்கு பிடிச்ச
“சுகன்யா’வா ஆக முடியாது… இதை நீ புரிஞ்சுக்கணும்.”