கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 37 6

சம்பத் என் போட்டோவை ஏன் அவன் பர்ஸில வெச்சிருக்கான்? இதுக்கு என்ன அர்த்தம்…? அவன் ஏதோ மனசு விட்டு பேசணும்ன்னு சொன்னானே? அவன் எங்கிட்ட என்ன சொல்ல விரும்பறான்..? உடனடியாக அதைத் தெரிந்து கொள்ள அவள் மனம் துடித்தது.

சம்பத் மெல்ல தன் கையிலிருந்த காஃபியை உறிஞ்சி அவசரமில்லாமல் குடிக்க ஆரம்பித்தான். காஃபி நிஜமாகவே சுவையாக இருந்தது. அவன் முகத்தில் ஒரு அசாதாரண அமைதி குடிகொண்டிருக்க, பார்வை தொடுவானத்துக்கும் அப்பால் நிலைத்திருந்தது.

சம்பத் தன் கையிலிருந்த சுகன்யாவின் போட்டோவை ஒரு முறை உற்றுப் பார்த்தவன், திரும்பவும் போட்டோவை வெகு பத்திரமாக, தன் பர்ஸுக்குள் செருகி, அதை தன் ட்ரவுசர் பாக்கெட்டில் நுழைத்துக் கொண்டான். ஒரு நீளமான பெருமூச்சு அவன் அடிவயிற்றிலிருந்து கிளம்பி வெளிவந்தது.

“சொல்லுங்க சம்பத், என்னமோ முக்கியமான விஷயம் பேசணும்ன்னு சொன்னீங்க…?

“சுகன்யா… என் மனசுல இருக்கறதை சுருக்கமா ஒரு வரியில எப்படி சொல்றதுன்னு எனக்குத் தெரியலை? சம்பத் சுகன்யாவின் முகத்தை ஆழ்ந்து நோக்கினான்.

தன் மனதை, தன் மனதில் உள்ள காதலை ஒரு பெண்ணிடம் சொல்ல எந்த ஆணும், எப்போதும், ஏன் தயங்குகிறான்? பெண் மறுத்துவிடுவாள் என்ற பயமா? மறுப்பை எதிர்கொள்ள தயக்கமா? சம்பத்தும் தன் மனதுக்குள் முதல் முறையாக ஒரு பெண்ணின் முன் பேசமுடியாமல் தவிப்பதை, தன் தயக்கத்தை நினைத்து சிரித்துக்கொண்டான். மனதின் சிரிப்பு உதடுகளிலும் வந்தது.

“அத்தான்… எதுவும் சொல்லாம இப்படீ என்னைப் பாத்து சிரிச்சா அதுக்கு என்ன அர்த்தம்?” சுகன்யா தன் பொறுமையை இழந்து கொண்டிருந்தாள்.

“ஸாரி சுகா… நான் உன்னைப்பாத்து சிரிக்கலை… நான் என்னையே, என் நிலைமையை நெனைச்சு சிரிச்சுக்கறேன்…”

“ப்ளீஸ்… நேரமாவுது… நீங்க சொல்ல நினைக்கறதை சீக்கிரம் சொல்லுங்க..” சுகன்யா சற்றே எரிச்சலைடைந்தாள். அவள் குரலில் அந்த எரிச்சல் லேசாக வெளிவந்துவிட்டது.

“அயாம் சாரி சுகா.. அயாம் பாதரிங்க் யூ… என் பேச்சு உனக்கு வினோதமா படலாம்.. ஆனா நான் சொல்றதெல்லாம் நிஜம்… உண்மை… முழுமையான சத்தியம்… நான் விளையாட்டுக்காக உன் கிட்ட பேசல..” சம்பத் நீண்ட பீடிகையுடன் மெல்லிய குரலில் பேசத் தொடங்கியவன், மீண்டும் தயங்கினான், பேசுவதை பாதியில் நிறுத்திவிட்டு, தொடுவானத்தையும் எதிரில் ஓடிக்கொண்டிருந்த முடிவில்லாத தண்டவாளத்தையும் மவுனமாக மாறி மாறி பார்க்க ஆரம்பித்தான்.

“சம்பத்… நீங்க சொல்ல வந்ததை சொல்லாமா, எதுக்காக இப்ப தண்டாவளத்தை அளந்துகிட்டு இருக்கீங்க…? வீ ஆர் கெட்டிங் டிலேய்ட்…யூ நோ… நீங்களும் இன்னைக்கு பெங்களூருக்கு கிளம்பணும் இல்லையா?”

சுகன்யா தன் கையிலிருந்த பேப்பர் கப்பை மெல்ல கசக்கிக்கொண்டே எழுந்தாள். வாட்சில் நேரத்தைப் பார்த்தாள். மணி காலை எட்டைத் தொட்டிருந்தது.

“ப்ளீஸ்… சுகன்யா… ரெண்டு நிமிஷம் உக்காரேன்…” சம்பத்தின் குரலில் லேசான நடுக்கமிருந்த போதிலும், அவன் குரலில் இருந்த ஆளுமையை மீற முடியாமல் சுகன்யா தன் கையிலிருந்த காலி கப்பை பக்கத்திலிருந்த குப்பைக் கூடையில் வீசிவிட்டு, அவனருகில் வந்து உட்க்கார்ந்தாள்.

“சுகன்யா… உன் அன்புக்கோ, பாசத்துக்கோ நான் சுத்தமா லாயக்கில்லதவன். இது எனக்கு நல்லாத் தெரியும்… ஆனா இந்த நிமிஷம், உன் கிட்ட முழு மனசோட நான் மன்னிப்பு கேட்கிறேன்…” சுகன்யாவின் கைகளை சட்டென சம்பத் பற்றிக்கொண்டான். சீரியஸாக பேசிக்கொண்டிருக்கிறான் என்பது அவன் குரலில் இருந்த வறட்சியிலும், கரகரப்பிலும் அவளுக்குப் புரிந்தது.

“ம்ம்ம்…” முனகினாள் அவள்.

சம்பத் பேசிய பேச்சின் அர்த்தம் சுகன்யாவுக்கு முழுமையாகப் புரியவில்லை. அவனுக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல், சுகன்யா அவன் முகத்தையே மவுனமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் சற்று நேரம் முன்வரை கொப்பளித்துக் கொண்டிருந்த இனிய புன்னகை மட்டும் மெல்ல மெல்ல காணாமல் போனது.

“சுகன்யா… நீ என்னை மனசார மன்னிச்சுட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லும்மா… அப்பத்தான் நான் இன்னைக்கு நிம்மதியா பெங்களூருக்குப் போக முடியும்… இல்லேன்னா என் மனசுக்குள்ள இருக்கிற குற்ற உணர்ச்சி என்னை மொத்தமா திண்ணு தீத்துடும்…”

“நீங்க பேசறது எதுவுமே எனக்கு நிஜமா புரியலை… நீங்க பண்ண தப்பு என்ன? நான் எதுக்கு உங்களை மன்னிக்கணும்?” சுகன்யா குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள்.