கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 20 11

“ம்ம்ம் …”

சிவதாணு நீளமாக ஒரு பெருமூச்சை விட்டவாறு தன் கண்களை மூடிக்கொண்டவர் தன் வலது கையால் தலையைத் சொறிந்து கொண்டார். கனகா தன் தலையை முடிந்துகொண்டு சுற்று சுவர் அருகில் வந்து சுகன்யா வரும் வழியைப் பார்க்க ஆரம்பித்தாள்.

“உன் பேத்தி வர்றாளாடி…?”

“பேத்தி வரலே; பேண்ட் – ஷர்ட், ஷூவோட இப்ப ஸ்கூட்டர் ஓட்டற பேரனே வந்தாச்சு …”

க்றீச்ச்ச் … வேகமாக வந்த சுகன்யா, வீட்டு சுற்று சுவரை ஒட்டி ஸ்கூட்டரை நிறுத்தினாள். ம்ம்ம் … இந்த ட்ரெஸ்ல …
“சுட்டும் விழி சுடரே … சுட்டும் விழி சுடரே” ன்னு பாட்டு பாடிக்கிட்டு டேன்ஸ் ஆடுவாங்களே, படம் பேர் ஞாபகத்துல வரலே; அந்த பாட்டுல வர்ற பொண்ணு மாதிரியில்லா இருக்கா என் பேத்தி! … சுகன்யாவை ஜீன்ஸில் பார்த்த கனகாவின் வாயெல்லாம் பல்லாகியது.

“சிவ சிவா … என்னடிச் சொல்றே ..” சிவதாணு தன் கண்களை விழித்தார்.

“கண்ணு … வண்டியை காம்பவுண்டுக்குள்ளே ஏத்தி நிழல்ல நிறுத்திடும்மா…” சுகன்யா வீட்டுக்குள் நுழைய, கனகா பின்னால் நின்று குரல் கொடுத்தாள்.

“சரி பாட்டீ …
“சாரி’ தாத்தா … அம்மாவை ஸ்கூல்ல விட்டுட்டு வர்றேன்; கிளம்பறதுக்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சி …

“அதனால என்னம்மா?”

“நீங்க சாப்டீங்களா இல்லையா?” சுகன்யா தாத்தாவின் கைகளை பற்றிக்கொண்டாள்.

“இல்லம்ம்மா … உனக்காகத்தான் வெய்ட் பண்றோம்…”

ம்ம்ம் … குழந்தை ஜாதகத்துல ராகு ஏழுல இருக்கான் … ஏழுக்குடையவன் லக்னத்துல இருக்கான். மனதுக்குள் சட்டென மின்னலடிக்க – சிவதாணுவின் மங்கிய கண்கள், சுகன்யாவின் தலையிலிருந்து கால் வரை ஒரு முறை தங்கள் பார்வையை வீசின. சிவ சிவா … எப்போதும் போல அவர் மனம் உணர்ச்சிகளின்றி முனகியது.

“பாட்டி … நீங்க ரெண்டு பேரும் சாப்பிட வேண்டியதுதானே?”

என் மேல எவ்வளவு பாசமிருந்தா, நான் வரேன்னு சொன்னதுக்காக, பாட்டி வெயில்ல நான் வர்ற வழியைப் பாத்துக்கிட்டு நிப்பாங்க? நினைத்தவளின் மனம் சந்தோஷத்தில் பூரித்தது. எவ்வளவு ஆசையிருந்தா,எனக்காக வயசானவங்க சாப்பிடாம காத்துகிட்டு இருக்காங்க? அவங்களை இப்படி தேவையில்லாம காத்திருக்க வெச்சிட்டோமே? இந்த நினைப்பு மனதுக்குள் வந்ததும், சுகன்யாவின் உள்ளம் சற்றே குற்ற உணர்ச்சியுடன் வருந்தவும் தொடங்கியது.

ம்ம்ம்… நடந்தது ஒரு நிகழ்ச்சி. அந்த ஒண்ணே எனக்கு மகிழ்ச்சியையும், வருத்தத்தையும் ஒரு சேரக் கொடுக்குதே? அப்படின்னா மகிழ்ச்சின்னா என்ன? இதைப் பத்தி தாத்தாக்கிட்ட சாப்பிட்டதும் ஆற அமர கேக்கணும்; சுகன்யா மனதுக்குள் யோசிக்கத் தொடங்கினாள்.

சிவதாணுவும், கனகாவும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். சுகன்யா அவர்களுக்கு சூடாக தோசை வார்த்து போட்டுக் கொண்டிருந்தாள்.

“கனகா, குருமா நல்லாருக்குடி …கசா கசா, தேங்கா எல்லாம் அரைச்சு ஊத்தி, அமிர்தமா பண்ணியிருக்கா உன் மருமவ … இன்னொரு ஸ்பூன் போட்டுக்கோம்மா …”

“போதுங்க … குழந்தைக்கும் கொஞ்சம் மிச்சம் வைங்க … குருமாவை நீங்களும் திட்டமா தொட்டுக்குங்க; சும்மா குடிக்காதீங்க … அப்புறம் ஜீரணம் ஆகலே! எனக்கு நெஞ்சை கரிக்குதுன்னு என் உயிரை எடுக்காதீங்க…”

“பாட்டி … நல்லாயிருந்தா சாப்பிடட்டும் பாட்டி … நீங்களும் ஊத்திக்கோங்க … எனக்கு இட்லி – தோசைக்கு மிளகாய் பொடிதான் ரொம்ப பிடிக்கும் …”