கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 20 6

வீட்டுக் கதவை பூட்டிக்கொண்டு வெளியில் வந்த, சுகன்யாவின் முகத்தில் பழுப்பு நிற கூலிங் கிளாஸ் ஏறியிருந்தது. நெற்றியில் பிந்தி காணமல் போயிருந்தது. அவள் ஆழ்ந்த சாம்பல் நிற ஜீன்சும், இள நீல நிற ஸ்லீவ்லெஸ் டாப்ஸும் அணிந்திருந்தாள். தோளிலிருந்து இறங்கிய சதைப்பிடிப்பான கைகளின் வெண்மை இளம் வெயிலில் மினுமினுக்க, காலிலிருந்த வுட்லேண்ட்ஸ் லெதர் ஷூ டக் டக்கென ஒலிக்க, தலை முடியை குதிரைவால் கொண்டையில் இறுக்கியிருந்தாள் அவள்.

‘ஏண்டி … இந்த டிரெஸ்சைப் போட்டுக்கிட்டு போறியே; உன் தாத்தா எதாவது நினைச்சுக்கப் போறார்டீ…??’

தன் பெண்ணின் தொடைகளோடு ஒட்டிக்கொண்டிருந்த இறுக்கமான ஜீன்சையும், அந்த இறுக்கம் அவள் இடுப்பிலும், இடுப்புக்கு கீழும் கொண்டு வந்த கவர்ச்சியையும், டாப்ஸில் மெலிதாக அசையும் அவள் மார்புகளையும் கண்டு, இந்த பொண்ணு ஏன் எதையும் ஒரு தரம் சொன்னா புரிஞ்சுக்க மாட்டேங்கறா… ? சற்றே அதிர்ந்தவளாக சுந்தரி முணுமுணுத்தப் போதிலும் தன் பெண்ணின் அழகு அவள் மனதுக்குள் ஒரு கர்வத்தையும் கொடுக்க, தன் உதடுகளை ஒரு முறை அழுந்த கடித்துக்கொண்டாள்.

‘நீ சும்மா இரும்மா! எல்லாத்துக்கும் பயப்படுவே! வண்டி ஓட்டறதுக்கு ஜீன்ஸ்தான் சவுகரியம்! நீ ஜீன்ஸ் போட்டா வேணா உன் மாமனார் ஏதாவது நெனைச்சுப்பார். நான் பேத்தி போட்டுக்கிட்டா தாத்தா ஒண்ணும் சொல்ல மாட்டார்..” சுகன்யா சிரித்துக்கொண்டே பட்டனை அழுத்தி ஸ்கூட்டரை விருட்டென கிளப்பினாள்.

“ஆமாண்டி … எனக்கு ஜீன்ஸ் ஒண்ணுதான் குறைச்சல்? .

“அம்மா … நிஜம்மா சொல்றேன்… நீ மட்டும் ஜீன்ஸ் போட்டுக்கிட்டு ரோடுல நடந்து போ … கும்பகோணம் பசங்க உன் பின்னாடி லைன்ல நிப்பானுங்க …” சுகன்யா ஓவென சிரித்தாள்.

‘சுகா, வாயை மூடிக்கிட்டு ரோடைப்பாத்து வண்டியை ஓட்டுடி நீ ..” சுந்தரி சலித்துக்கொண்டாள்

சிவதாணு பிள்ளை, தன் வழக்கமான யதாஸ்தானத்தை தவிர்த்து, காம்பவுண்டு சுவரில் சாய்ந்து நின்று, காலை வெயில் முகத்தில் அடிப்பதையும் பொருட்படுத்தாமல் கிழக்கை நோக்கிக் கொண்டிருந்தார். யந்திரமாக அவர் மனம் சிவ நாமத்தை உச்சரித்துக்கொண்டிருந்தது.

‘என்னங்க வெயில்ல என்னப் பண்ணறீங்க … கல்லை அடுப்புல போடட்டுமா?’ கனகா அவரருகில் சென்று நின்றாள்.

‘இப்பத்தாண்டி வந்து நின்னேன்!… குழந்தை வராளான்னு பாக்கிறேன் …’

‘எட்டு ஆவறதுக்குள்ள பசி … பசின்னு ஏலம் போடுவீங்க? …’ கனகா அவர் தோலை மெதுவாக உரிக்கத் தொடங்கினாள்.

“செத்த இருடி … சுகன்யா வந்துடட்டும் …?” அவர் அடிவயிறு கூவிக்கொண்டிருந்தது.

“வர்றவ நேத்து மாதிரி வீட்டுக்குள்ள வருவா … நீங்க நிழலா வந்து சேர்ல உக்காருங்க… எதுலயும் எதிர்பார்ப்பே இருக்கக்கூடாதுன்னு பண்ற உபதேசம் எனக்கு மட்டும்தான்!” கனகா அவர் கையைப்பிடித்து அசைத்தாள்.

‘சிவ சிவா .. சும்மா இரேண்டி கொஞ்ச நேரம் …என்னை அதிகாரம் பண்ணிக்கிட்டே இருக்கணும் உனக்கு?” மெதுவாக நடந்து ஈஸிசேரில் உட்க்கார்ந்து கொண்டார்..”

“ம்ம்ம் … என்னைச் சொல்லிட்டு நீ ஏன்டீ இப்ப வெயில்ல நிக்கறே? … அப்புறம் தலை சுத்துதுன்னு புலம்பறதுக்கா?”

“பேத்தி வரலேன்னுதானே நின்னுகிட்டு இருந்தீங்க …?”

“ம்ம்ம் …

“நீங்க செய்த வேலையை நான் கொஞ்ச நேரம் பாக்கறேனே?”

“அப்ப உனக்கும் சுகன்யா எப்ப வருவான்னு இருக்குதானே?”

“ம்ம்ம் …”

“அப்புறம் என்னை ஏன் கிண்டலடிச்சே?”

“மனசு கேக்கலைங்க … நேத்து அவ போனதுக்கு அப்பறம் … வீடே வெறிச்சுன்னு ஆயிடுச்சி” கிழவி முனகினாள். முனகியவள் அவர் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.

“ஆமாம் … இந்த வாரம் குமார் வந்தான்னா, மெட்ராஸ்ல வீடு பாத்துட்டானான்னு கேளுடி … குழந்தை இருக்கற வீட்டை காலிபண்ணிட்டு நம்ம கூடவே வந்து இருக்கட்டும்…”

“ஆகற கதையைத்தான் நீங்க எப்பவும் பேச மாட்டீங்களே?” கனகா கிழவரின் இடது காலை அமுக்கிவிட ஆரம்பித்தாள்.

“அப்படித் தப்பா என்னத்தைடி இப்ப நான் சொல்லிட்டேன்?”

“குழந்தை கல்யாணத்தை பண்ணிக்கிட்டு நம்ம கூட இருப்பாளா?”

“என்னடி சொல்றே நீ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *