கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 20 6

“என்னடா கண்ணு … தூங்கறவளை எழுப்பி இப்ப எதுக்கு சாரி சொல்றே?”

“நேத்து… தேவையேயில்லாம உன்கிட்ட கோவப்பட்டேன் …”

“ம்ம்ம்ம்….”

“என் மேல உனக்கு கோவம் இல்லையேம்மா?”சுகன்யாவின் குரல் தழுதழுப்பாக வந்தது.

“சீ … சீய்… பைத்தியம் .. இப்ப எதுக்கு அழுவறே? என் செல்லத்து மேல நான் கோபப்படுவேனா? எனக்கு புரியலையா? செல்வா கிட்டேருந்து உனக்கு கால் வரலை. அந்த கோவத்துல நீ எங்கிட்ட ஏதோ நேத்து உளறினே? நான் அதை எப்பவோ மறந்துட்டேன்.”

“சாரிம்மா…”

“நேத்தைக்குத்தானே செல்வா வீட்டுக்கு வந்திருக்கான். நாளைக்கு அவனே உனக்கு கால் பண்ணி பேசுவான் பாரு! இப்ப நீ நிம்மதியா தூங்கு.

“சரிம்மா” முனகிய சுகன்யா தன் தாயை நெருங்கி அவளை அணைத்துக்கொண்டாள்.

‘சுகா, நீ லஞ்ச்க்கு என்னப் பண்ணப் போறேம்மா?’

திங்கள் காலை, சுந்தரி தன்னுடைய ஸ்கூலுக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தாள். ஊதா நிற புடவையும் , அதற்கேற்ற மேச்சிங் ரவிக்கையும் அணிந்து, நிலைக்கண்ணாடியின் முன் நின்று, தன் புடவை மடிப்புகளை சீராக்கிக் கொண்டிருந்தாள். கைகளில் அணிந்திருந்த வளையல்கள் தங்கள் இருப்பை கிணுகிணுத்து, அவள் காதுகளில் இனிமையாக ஒலித்துக்கொண்டிருந்தன.

“நான் தாத்தா வீட்டுக்கு கிளம்பிக்கிட்டு இருக்கேன். ரெண்டு நாளைக்கு அங்கேயே இருக்கப் போறேன். நீ வீட்டைப் பூட்டிக்கிட்டு உன் சவுகரியப்படி எப்ப வேணா கிளம்பும்மா…’ சுகன்யா தனக்குத் தேவையான துணிகளை ஒரு சிறிய ட்ராவல் பேகில் அடுக்கிக்கொண்டிருந்தாள்.

‘என்னடி … இது? வருந்தி வருந்தி கூப்பிட்டாலும், யார் வீட்டுக்கும் போகாதவ, இன்னைக்கு நீயா வெளியில கிளம்பறேங்கறே? பேத்திக்கு ரொம்பத்தான் பாசம் பொங்குது தாத்தா மேலே?”

‘அதான் புரியலைம்மா … அவங்க ரெண்டு பேரு கூடவே இருக்கணும் போல இருக்கும்மா எனக்கு..?

‘சரி சரி … இந்த ஆட்டமும் பாட்டமும் எத்தனை நாளைக்குன்னு பாக்கிறேன்! … அப்ப வீட்டு சாவியில ஒரு செட் வெச்சுக்கறியா.. நீ?

‘ம்ம்ம் … மாமா எங்கே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *