கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 19 3

“அப்புறம்ம்..”

“நடராஜன், அந்த பைசாவை … அதாம்மா நாம அட்வான்ஸ் கட்டினோமே … அந்த அமவுண்ட்டை என் பேங்க் அக்கவுண்ட்டுக்கு அனுப்பிச்சிட்டேன்னு சொன்னாரு …

“சரி ….
“ சுகன்யா ரகுவின் தோளில் சாய்ந்துகொண்டாள்.

“உன் அப்பாகிட்ட நான் பேசிட்டேன். இந்த வீக் எண்டுல நடராஜனையும் அவங்க குடும்பத்தையும் நம்ம வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டு இருக்கேன்.”

“ம்ம்ம் …”

“நடராஜன், தன் தம்பி கிட்டவும், மச்சான் கிட்டவும் உங்க கல்யாண விஷயத்தை ஏற்கனேவே பேசிட்டாராம். ஒரு நாள் டயம் குடுங்கன்னார். என் ஒய்ஃப் கிட்டவும் பைனலா பேசிடறேன். நாளைக்கோ இல்லை, நாளை மறு நாளோ, எனக்கு போன் பண்றேன்னு சொன்னார்.”

“சரி … மாமா…”

“ஏன் உற்சாகமில்லாம பேசறே?”

“ரகு, இவ இங்க வந்ததுலேருந்தே சிடு சிடுன்னு இருக்கா … என்னமோ, அங்க என் மாமியார் வீட்டுல ரொம்பவே சந்தோஷமா இருந்தா; திரும்பி வந்ததும் மூஞ்சை தூக்கி வெச்சுக்கிட்டு இருக்கா.” சுந்தரி குறுக்கில் பேசினாள்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லே மாமா”

“சும்மா… சும்மா செல்வா கிட்ட பேசாதடீ… இனிமே நாங்க எல்லாத்தையும் பாத்துக்கிறோம்ன்னு சொல்லி வெச்சிருந்தேன்; அவனும் என்ன காரணமோ, நாலு நாளா இவ கிட்ட பேசலை போலயிருக்கு; அதான் மூஞ்சை கோணலாக்கிக்கிட்டு எல்லார் மேலயும் எரிஞ்சு எரிஞ்சு விழறா!” சுந்தரி கேலியுடன் பேசினாள்.

“அம்மா நீ சும்மாயிருக்கமாட்டே… கொஞ்ச நேரம் உன் வாயை வெச்சுக்கிட்டு?”

“சுகா… நீயும் உன் அம்மாவும் உங்க சண்டையை ஆரம்பிச்சிடாதீங்க” ரகு சிரித்தார்.

“அடியே; நான் சும்மாத்தான் இருக்கேன்… நீ என்னப் பண்றேன்னு உனக்கே நல்லாத் தெரியும்; மாமா இங்க மாடி ரூம்ல படுத்துக்கறாராம். நீ நேரா நேரத்துல கீழ வந்து படு; இங்க பனியா இருக்கு; ஈரக்காத்து உஸ்ன்னு அடிக்குது; உடம்பை கெடுத்துக்காதே. சுந்தரி மாடியை விட்டு இறங்கினாள்.

***

“அம்மா…”

“….”

சுந்தரி அப்போதுதான் தூக்கத்தை தழுவ ஆரம்பித்து இருந்தாள்.

“எம்ம்மா…”

“என்னாடி… நீ தூங்கேண்டி சித்த நேரம். என்னையும் செத்த நேரம் தூங்க விடேன்.” சுந்தரி திரும்பி படுத்தாள்.

“அம்மா… சாரிம்ம்மா!” சுகன்யா தாயின் இடுப்பில் தன் கையைப் போட்டுக்கொண்டாள். அவளை நெருங்கி நெற்றியில் முத்தமிட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *