கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 19 7

“கண்ணு சுந்தரி … அன்னைக்கும் என் பேத்தி உன் கூடத்தான்ம்மா இருந்தா … அந்த ஒரு உரிமை உனக்கு இந்த வீட்டுல எப்பவும் நுழையறதுக்கான பாஸ்போர்ட்ம்ம்மா … எப்படியோ நேரம் வந்தாத்தான் எதுவும் நடக்கும்ம்மா … பழசெல்லாம் எதுக்கு இப்ப … நீ வந்துட்டே .. அதுவே எனக்குப் போதும் ….”

“மாமா, ஒரு நிமிஷம் எழுந்து இப்படி நில்லுங்களேன். அத்தை நீங்களும் இப்படி மாமா பக்கத்துல வந்து நில்லுங்க…”

“என்னங்க… உள்ளே கூடத்துக்கு வாங்க … இப்பத்தான் நான் சுவாமிகிட்ட விளக்கேத்தி வெச்சுட்டு வந்திருக்கேன். உள்ள வந்து குழந்தைகளை ஆசிர்வாதம் பண்ணுங்க.” மருமகளின் மனதில் ஓடிய எண்ணத்தைப் மின்னலாகப் புரிந்து கொண்டாள் மாமியார். சுகன்யாவின் கையை பிடித்துக்கொண்ட சுந்தரி, தன் வீட்டுக்குள் உரிமையுடன் தலை நிமிர்ந்து, பெருமிதத்துடன் நுழைந்தாள். சிவதாணுவும், கனகாவும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு மனதில் மகிழ்ச்சியுடன் சுந்தரியின் பின் வீட்டுக்குள் நடந்தனர்.

முதலில் சுந்தரி தன் மாமனார், மாமியார் கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்து எழுந்தாள். சிவதாணு, சிவாய நம … உதடுகள் முணுமுணுக்க அவள் நெற்றியில் விபூதியை ஒரு கீற்றாக பூசினார். குங்குமத்தை, தன் மருமகளின் நெற்றியில் வைத்த கனகா … நல்லாயிரும்மா நீ … சொல்லிக்கொண்டே தன் கழுத்தில் கிடந்த தாம்புகயிறு சங்கிலியை உருவி தன் மருமகளின் கழுத்தில் போட்டாள். கையிலிருந்து ஒரு ஜோடி வளையலையும் கழட்டி சுந்தரியின் கையில் பூட்டினாள்.

“அத்தை … இப்ப எதுக்கு இதெல்லாம் எனக்கு …”

“சுந்தரி, இங்க இருக்கறது எல்லாமே உங்களுக்குத்தான் … ஆனா இப்ப என் மனசு குளுந்து இருக்கும்மா … நான் குடுக்கறதை வேண்டாம்ன்னு நீ சொல்லாதேம்ம்மா” கனகா மனம் நெகிழ்ந்து பேசினாள்.

“சுகா … என்னடி பாத்துக்கிட்டு நிக்கறே; பெரியவங்க கால்லே விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கடி …”

“பாட்டி … எனக்கு என்ன குடுக்கப் போறீங்க நீங்க … எல்லாத்தையும்தான் அம்மா கழுத்துலயும், கையிலேயும் போட்டுட்டீங்களே?” சிரித்தவாறு நமஸ்காரம் செய்து எழுந்த சுகன்யா, தன் பாட்டியை கட்டிக்கொண்டு, கனகாவின் கன்னத்தில் ஆசையுடம் முத்தமிட்டாள். கனகா, சுகன்யாவை தன்னுடன் அணைத்துக்கொண்டவள் அவள் காதில் ரகசியம் சொன்னாள்… உனக்கு நான் நிறைய வெச்சிருக்கேன் … கவலைப்படாதே … இப்போதைக்கு இதுங்களை போட்டுக்கோ … தன் கழுத்தில் கிடந்த டாலர் செயினையும், ஒரு ஜோடி வளையலையும் கழட்டி அவள் கையில் கொடுத்தவள், தன் பேத்தியின் கன்னத்தில் ஆசையுடன் முத்தமிட்டாள். அவள் உச்சி முகர்ந்தாள்.

“சுகன்யா, ரெண்டு கையிலேயும் பை வெச்சிருந்தியே .. தாத்தாவுக்கு என்னம்ம்மா கொண்டாந்து இருக்கே?’

“தாத்தா … உங்களுக்கு பொங்கல், வடை பிடிக்கும்ன்னு … அம்மா செய்து கொண்டாந்து இருக்காங்க. சாப்பிடலாம் வாங்க தாத்தா …”

“கனகா … இனிமே உன் தயவு எனக்கு வேணாம்டி … என் மருமவ வந்துட்டா … எனக்கு பிடிச்சதை அவகிட்ட கேட்டு நான் சாப்பிட்டுக்கிறேன் … உப்பு இல்லாம, புளிப்பு இல்லாம, உறைப்பு இல்லாம, நீ பொங்கிப் போடறதுலேருந்து எனக்கு விடுதலை கிடைச்சாச்சு.”

“ஆமாம். நாளைக்கு திங்கக்கிழமை … உங்க மருமகளுக்கு ஸ்கூல் உண்டு… சுவத்து கீரையை வழிச்சு போடுடின்னு … நாளைக்கு திரும்பியும் நீங்க இந்த கனகாகிட்டத்தான் வரணும் … மனம் நிறைந்திருந்த கிழவி, கிழவரை கிண்டல் செய்து சிரித்தாள். சுந்தரியும் சுகன்யாவும் அவள் சிரிப்பில் சேர்ந்து கொண்டார்கள். அன்று சிவதாணுவின் வீட்டில் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது.

இன்னைக்கு ஞாயித்துக்கிழமை … சாயந்திரம் என் குழந்தைகளை ஒண்ணா நிக்க வெச்சு சுத்திப் போடணும் … என் கண்ணே பட்டுடக்கூடாது. கனகா தன் மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.

இரவு சாப்பாடு முடிந்தது. சுகன்யா நாடாக் கட்டிலை நடு மாடியில் விரித்தாள். மெல்லிய வாடைக்காற்று சிலு சிலுவென வீசிக்கொண்டிருந்தது. அடித்தக்காற்றில் அணிந்திருந்த நைட்டி உடலின் மேடு பள்ளங்களில் ஒட்டிக்கொண்டது. இன்னும் பத்து நாள்ல குளிர ஆரம்பிச்சிடும். இப்படி திறந்த வெளியில ஹாயா நிக்கறதோ, படுத்துக்கறதோ சிரமம்தான். காற்றில் பறந்த தன் முடிக்கற்றைகளை முகத்திலிருந்து ஒதுக்கி காதுக்குப்பின்னால் தள்ளிக்கொண்டாள்.

தோட்டத்திலிருந்து காற்றில் அடித்த துளசி, பவழமல்லியின் வாசம் அவள் நாசியைத் தாக்கி மனதில் அமைதியைத் தந்து கொண்டிருந்தது. கைப்பிடி சுவரில் சாய்ந்து கொண்டு கீழே தோட்டத்தை எட்டிப்பார்த்தாள் சுகன்யா. சுந்தரியின் வியர்வை தோட்டத்தில் வாழையாக குலைத் தள்ளி, முருங்கையாக காய்த்து, செம்பருத்தியாகவும், நந்தியாவட்டையும், மல்லிகையுமாக மலர்ந்திருந்தன.

எவ்வளவு பூ பூத்துக்குலுங்கினாலும், சுந்தரி ஒரு நாள் கூட தன் தலையில் சூடிக்கொண்டதில்லை. எல்லாம் அந்த தெரு கோடி பிள்ளையாருக்குத்தான் கிள்ளி மாலையாக்கி சமர்ப்பித்துக்கொண்டிருந்தாள். கடைசியில் அந்த கணேசரும், தன் கண் திறந்து குமாரை அவளிடம் திருப்பி அனுப்பிவிட்டார்.

அப்பா வந்துட்டார். அப்ப வினாயகர் கோட்டா முடிஞ்சுப் போச்சா? நவகிரகத்தை சுத்தற வேலையை அம்மா விட்டுடுவாளா? இனிமேலாவது அம்மா தன் தோட்டத்து மல்லியை தலையில வெச்சுக்குவாளா? அம்மா சாப்பிட்டுட்டு மாடிக்கு வரட்டும் … கேக்கிறேன்? சுகன்யாவின் முகத்தில் கேலிப்புன்னகையொன்று தவழ்ந்தது.