கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 14 12

“என்னப்பா … இப்படி ஒரு கேள்வி கேக்கறீங்க; அவரை நான் மனசார நேசிக்கிறேன்ம்பா!”

“சாரிம்மா … உனக்கு என் கேள்வி பைத்தியகாரத்தனமாப் பட்டிருக்கலாம். நீ அவனுக்கு உன் ரத்தத்தை குடுத்தேன்னு அம்மா சொன்னாங்க; அவன் இடத்துல நீ இருந்திருந்தா, அவனும் உனக்கு தன்னோட ரத்தத்தை கொடுத்து உன்னை காப்பாத்தனும்னு துடிச்சிருக்கலாம். அவன் மேல உனக்கு இருக்கற நேசம், பாசம், காதல், எல்லாம் சரி; நீ படிச்ச பொண்ணு. நீ பேப்பர்ல, ஏதாவது மெகசீன்ல படிச்சிருக்கலாம் … இல்லன்னா யார் மூலமாவது உனக்குத் தெரிஞ்சிருக்கலாம்.”

“இப்பல்லாம் ஒரு ஆணும், பெண்ணும் ஒரே வீட்டுல சேர்ந்து இருக்கறாங்க; எல்லாத் தேவைகளையும் பரஸ்பரம் ஒருத்தருக்கு ஒருத்தர் பூர்த்தி பண்ணிக்கறாங்க; தங்களுடைய ஆசைகளை ஒருத்தர் கிட்ட ஒருத்தர் ஷேர் செய்துக்கறாங்க. கல்யாணமான தம்பதிகளைப் போல படுக்கையையும் பகிர்ந்துக்கறாங்க; ஆகற செலவையும் தங்களுக்குள்ள டிவைட் பண்ணிக்கறாங்க.”

“கொஞ்ச நாள் கழிச்சு, ஒருத்தரோட எதிர் பார்ப்புகளை அடுத்தவரால பூர்த்தி செய்ய முடியலேன்னா, அவர்களுக்கு நடுவுல முரண்பாடுகள் அதிகமாக இருந்தால், சத்தமில்லாமா ரெண்டு பேரும் வேற வேற திசையை பாத்துக்கிட்டு போறதுங்கற கான்செப்ட் இப்ப நம்ம ஊர்லேயேயும் வளர ஆரம்பிச்சு இருக்கு.”

“இவர்கள் நடுவிலும் காதல், பாசம், நேசம், பற்று, பிடிப்பு, காமம் எல்லாம் இருக்கு … என்ன இந்த ஏற்பாட்டுல எமோஷனல்
“பாண்டிங்” கொஞ்சம் குறைவா இருக்கலாம். இது நம்ம சமூகத்தால இன்னும் முழுமையா அங்கீகரிக்கப்படாத ஒரு விஷயமா இருக்கு. இவங்கள்லேயே, சில ஜோடிகள் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமாகவும் வாழறாங்க.”

“காதலிக்கும் போது ஒருத்தருக்கு அடுத்தவரோட குறைகள் சட்டுன்னு தெரியறது இல்லை. ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்டு ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து வாழறப்ப, உடம்பு மேல இருக்கற கவர்ச்சி கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிக்கறப்ப, கணவனுக்கு தன் மனைவிகிட்ட இருக்கற குறைகளும், மனைவிக்கு தன் புருஷனோட குறைகளும் புரியும் போது, தினசரி வாழ்க்கையில உரசல்கள் ஆரம்பிக்கும்.”

“இந்த காலத்துல ரெண்டுபேரும் வேலைக்கு போறாங்க; அதனால ஒவ்வொரு காரியத்துலேயும் ரெண்டு பேரும் பங்கெடுத்தே ஆகணுங்கற நிர்பந்தம் இருக்கு. அதனால வீட்டுல எல்லா காரியங்களையும் ஆரம்பத்துல நீயே செய்ய வேண்டிய சூழ்நிலை வரலாம்.”

“அப்பா … எது எப்படியிருந்தாலும் செல்வா இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நெனைச்சுக் கூட பாக்க முடியலைப்பா. அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு, முறையான, அண்டர்லைன் பண்ணிக்குங்க, முறையான ஒரு வாழ்க்கையை வாழணும்ன்னுதான் நான் அவர் கூட பழகறேன்.”

“அவரும் அந்த எண்ணத்துலத்தான் என் கூட பழகிக்கிட்டு இருக்கார். ஆனா சில நேரங்கள்ல, இப்பவே அவர் மேல எனக்கு சட்டுன்னு கோபம் வருது. அவருடைய சில குணங்கள் எனக்கு சுத்தமா பிடிக்கலைப்பா. இதை சொல்லிக்காட்டி நான் அவர்கிட்ட சண்டை போட்டிருக்கேன்.”

“ம்ம்ம் ….”

“அவரால எந்த விஷயத்துலேயும், சட்டுன்னு ஒரு முடிவுக்கு வரமுடியலைப்பா. எல்லாத்துக்கும் பயப்படறார்ப்பா. இப்படி பண்ணா அவங்க என்ன நினைப்பாங்க … அப்படி பண்ணா இப்படி ஆயிடுமோ? எப்பவும் குழம்பிக்கிட்டேதான் இருப்பார்.”

“அவரோட அம்மாவை கேக்காம எந்த காரியத்தையும் அவரால செய்ய முடியாதுப்பா. அவருக்கு அவர் அம்மா மேல கண்டிப்பா ஆசையிருக்கும். இதை நான் தப்புன்னு சொல்லலை. எனக்கும்தான் என் அம்மா மேல அளவில்லாத பிரியம் இருக்கு. ஆனா ஒரு விஷயம் எனக்கு பிடிக்கலைன்னா, அம்மாகிட்ட நான் பட்டுன்னு சொல்லிடுவேன். தன் மனசுல இருக்கறதை தன் அம்மாகிட்ட சொல்லக்கூட பயப்பட்டா எப்படிப்பா? எல்லாத்துக்கும் மேல, அவரா எதையும் இனிஷியேடிவ் எடுத்து செய்யறது இல்லேப்பா.

“ம்ம்ம் … எனி எக்ஸாம்பிள்”

“என் அம்மா நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் குடுக்கலைன்னா, நாம என்ன பண்றதுன்னு அப்பப்ப கேக்கிறார். இந்த கேள்வியை அவர் இது வரைக்கும் நூறு தரம் என் கிட்ட கேட்டாச்சு. நானும் அத்தனை தரம் பதில் சொல்லியாச்சு.”

“நீ என்ன பதில் சொன்னே?”