கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 14 12

“அப்புறம், அவர் ஃப்ரெண்ட் சீனுன்னு இருக்கான், அவன் நீயெல்லாம் ஒரு மனுஷனாடா? இருட்டாயிடுச்சே; நீ அந்த பொண்ணை லவ் பண்றன்னு சொல்றே; அட்லீஸ்ட் வீட்டுக்கு பக்கத்துலயாவது கொண்டு போய் விட வேணாமான்னு திட்டினதுக்கு அப்புறம் எனக்கு போன் பண்ணி, நான் பன்னது தப்பும்மா .. சாரிம்மாங்கறாரு.”

“இவருக்காக தினம் ஆஃபீசுலேருந்து, ஈவினிங் ஆஸ்பத்திரிக்கு ஒடறேன். ஏன் ஓடறேன்; இப்படி இருக்கற ஒருத்தனுக்காக நான் ஓடறேன்; அதான் ஏன்னு எனக்கும் புரியலை. நீ எப்படிம்மா இருக்கேன்னு ஒரு வார்த்தை கேக்கலை; நேத்துலேருந்து ஒரு போன் பண்ணலப்பா எனக்கு; அவருக்கு என் மேல ரொம்ப ஆசைப்பா; ஆனா அதை வெளியில சொல்லலைன்னா; அவரோட பிரியம் எனக்கு எப்படிப்பா தெரியும்?” சுகன்யாவின் குரல் கம்ம ஆரம்பித்தது.

குமாரசுவாமி ஒரு வினாடி அவள் பேசியதை கேட்டதும் வாய்விட்டு சிரித்தார். பின் கேட்டார்.
“உன் சொல்வாவோட முழு பேரு என்னம்மா?”

“தமிழ்செல்வன்..ம்பா … நீங்க எதுக்குப்பா நான் சொன்னதெல்லாத்தையும் கேட்டுட்டு சிரிக்கறீங்க”

“நானும் காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். உங்கம்மாவும் நீ சொன்ன அத்தனை குறையும் என் மேல சொல்லியிருக்கா; உங்கம்மாவை கேட்டுப்பாரு; உண்டா – இல்லையான்னு; அதான் எனக்கு சிரிப்பு வருது?”

“ஆமா … என் குழந்தையை ஏன் இப்ப அழுவ வெக்கறீங்க? உங்க கதையை இப்ப எவன் கேட்டான்?” சுந்தரி அவரை தன் கண்ணை உருட்டி பார்த்து முறைத்தாள். முறைத்துக் கொண்டே அவரிடம் சாய் கோப்பையை நீட்டினாள்.

“உன் ஆளோட அப்பா பேரு என்னடா செல்லம்? அவர் என்ன பண்றார்? சுந்தரி கொடுத்த டீயை வாங்கி அவர் ருசித்து உறிஞ்ச ஆரம்பித்தார்.

“சுந்தரி … சாய் நல்லா இருக்குடி … ஏலக்காய் நசுக்கிப் போட்டியா?” சொன்னவர் தன் பெண்ணின் காதில் மெதுவாக கிசுகிசுத்தார். இப்ப இந்த டீயைப் பத்தி நான் எதுவும் சொல்லலேன்னா, உங்கம்மா என் கிட்ட முறுக்கிக்குவா … என் வயசு அம்பது … உன் செல்வா வயசு இருபத்தஞ்சு…” குமார் மீண்டும் சிரித்தார்.

“கட்டிக்கிட்ட பொம்பளைகிட்ட எப்படி பேசணும்; அதுவும் எந்த நேரத்துல பேசணும்; எப்படி பேசக்கூடாது; என் மனைவியோட விருப்பங்கள், எதிர்ப்பார்ப்புகள்; என்னன்னு மெதுவாத்தான் எனக்கு புரிஞ்சுது; சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட, மே பீ ருட்டீன் இஷ்யூஸ், ஒரு தலையாட்டல், அவளை அப்ரிஷியேட் பண்ற மாதிரி; ஒரு சின்ன புன்முறுவல்; இந்த யுக்திகள், தந்திரங்கள், இதெல்லாம் கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் கழிச்சுத்தாம்மா எனக்கும் புரிஞ்சுது; உன் செல்வாவும் இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா புரிஞ்சுக்குவாம்மா.”

“மே பீ அவன் செல் – சிம் கெட்டுப் போய் இருக்கலாம்; ஆஸ்பத்திரியில இருக்கான்; ரீ சார்ஜ் பண்ண வேண்டி இருக்கலாம். ஏன் … இன்ஸ்ட்ருமெண்ட் கூட திருடு போயிருக்கலாம்; உங்கிட்ட பேச நினைக்கும் போது வேற யாராவது கூட இருந்திருக்கலாம்… வெய்ட் … பொறுத்துப் பாரு; நேத்துத்தான் அவனைப் பாத்து பேசியிருக்கே; கூட இருந்து இருக்கே; முழுசா ஒரு நாள் ஆகலே; அதுக்குள்ள அவன் உன் கிட்ட பேசலேன்னு கோபப்பட்டா எப்படி? ம்ம்ம்… டோண்ட் வொர்ரி! இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் கவலைப்பட்டு, உன் வாழ்க்கையின் இனிமையான நேரத்தை வீணாக்கிடாதே.”

“சரிப்ப்பா”

“அம்மா சொல்ற மாதிரி, நீ மட்டுமே நெருங்கி நெருங்கி போனாலும் அவனுக்கு உன் மேல ஒரு சலிப்பு வந்துடும்; நம்ம சுகன்யாதானே … இட்ஸ் ஓ.கே அப்படின்னு எடுத்துக்குவான்; பழக பழக பாலும் புளிக்கும்ன்னு ஏன் சொல்றாங்க? நம்ம உடம்புக்கு வெய்யிலோட சூடு தேவை; அதுக்காக வெயில்ல நின்னு உடம்பை சுட்டுக்கறதா?கூடாது; வாழ்க்கையில புத்தர் சொன்ன மிடில் ஆஃப் த ரோட் ஆட்டிட்யூட் வெச்சுக்கணும்”

“இப்ப நீங்க அவ காதுல என்னைப் பாத்து பாதது என்ன முணுமுணுக்கிறீங்க?” சுந்தரி போலியான கோபத்துடன் அவர்களை நெருங்கினாள்.