கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 14 12

“ஏண்டி, நீ உன் வயசுல உங்கப்பா அம்மாவை என்னமா சண்டைக்கு இழுத்தே? உன் பொண்ணு இப்ப உன்னை இழுக்கறா; ஹிஸ்டரி ரிபீட்ஸ் அவ்வளதானே?” குமார் சிரித்துக்கொண்டே சுந்தரியை சீண்டினார்.

“அப்பா .. அம்மாகிட்ட நான் வேணும்ன்னு சண்டைப் போட்டதே இல்லப்பா”

“நீ சும்மா இருடி; ஒரு வாரம் முன்னாடி, நானும் ரகுவும் இவளைப் பாக்கறதுக்கு இங்க வந்தோம். அன்னைக்குத்தான் இவங்களுக்குள்ள சண்டை நடந்திருக்கு; என்னை மறந்துடு; உனக்கும் எனக்கும் ஒத்து வராது; நீ ஒரு பயந்தாங்கொள்ளி; உங்கம்மா கூடவே போய் நீ இருடான்னு, அவன் கிட்ட வீராப்பா சொல்லிட்டு வந்துட்டா; அந்த பையன் தங்கச்சி இவளுக்கு போன் பண்ணா, நீ யாருடி நடுவுல நாட்டாமை; உங்க அண்ணனை எனக்கு யாருன்னே தெரியாதுன்னு அவளை வேற போட்டு வாங்கியிருக்கா உங்கப் பொண்ணு.”

“ம்ம்ம் … தமிழ் சினிமா கதை மாதிரி இல்ல போகுது நம்ம சுகா கதை”

“இவளால தொட்டு பழகனவனை எப்படிங்க அவ்வள சீக்கிரம் மறந்துட முடியும்? நாள் பூரா அழுது அழுது இவ மூஞ்சி வீங்கி போய் கிடக்குது. வீட்டுக்கு வந்த இவளைப் பாத்ததும் என் வயிறு அப்படியே பத்தி எரிஞ்சுது. என்னாடின்னு கேட்டா மெதுவா ஒண்ணு ஓண்ணா சொல்றா.”

“நம்ம ரகு, அந்த பையன் கிட்ட பேசி பாக்கறேன்னுட்டு, அவனை நம்ம வீட்டுக்கு இங்க வாப்பான்னு கூப்பிட்டான். நம்ம போறாத காலம், பாவம் அவன் இங்க வர்ற நேரம் பாத்து, வழியில ஒரு ட்ரக்ல அடிபட்டு, ரோடுல கிடந்து இருக்கான். போலீஸ் அவனை ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணிட்டு, நம்ம சுகன்யாவுக்கு தகவல் சொன்னாங்க. அவங்க அப்பன் ஆத்தா ஆஸ்பத்திரிக்கு போறதுக்குள்ள, இவ தட தடன்னு ஆஸ்பத்திரிக்கு ஓடி அவனுக்கு இவ ரத்தத்தை குடுத்து பொழைக்க வெச்சி, அம்பதாயிரம் பணத்தையும், ஆஸ்பத்திரியில அட்வான்ஸ்ஸா கட்டியிருக்கா..”

“இவளைத் தனியா அனுப்ப முடியுமா? நாங்க ரெண்டு பேரும் இவ கூடவே ஆஸ்பத்திரிக்கு போனோம். அவன் கண்ணை தொறந்து பாத்ததும், அவன் அம்மா இவளை பாத்து என் புள்ளையை நீ பொழைக்க வெச்சிட்டே! உனக்கு ரொம்ப நன்றி; ஆனா இங்கேயிருந்து நீ போயிடு. என் புள்ளையை என் கிட்ட முழுசா குடுத்துடுன்னு,, எங்க எதிர்லேயே கை எடுத்து இவளை கும்பிட்டு டயலாக் பேசினா. உங்கப் பொண்ணாச்சே? இவளும் ரோஷமா உன் புள்ளைக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லே. நான் அவனை உனக்கே தாரை வாத்து கொடுக்கறேன்னு உளறி கொட்டிட்டு வெளியில வந்துட்டா.”

“சும்மா இருடி நீ; அந்த காலத்துல நீ என்னை காதலிக்கறேன்னு காலையில சொல்லுவே; மதியானம் இல்லேன்னு சொல்லுவே; எத்தனை வாட்டி இந்த மாதிரி நீ பேசி பேசி, என்னை தாளிச்சு எடுத்து இருப்பே? எத்தனை வாட்டி திரும்பி வந்து ஐ லவ் யூன்னு சொல்லியிருப்பே? எல்லாம் உனக்கு மறந்து போச்சா? ரெண்டு நாளு, நான் உன் கிட்ட பேசாமா இருந்தா, எத்தனை பேரு மூலமா நீ தூது விட்டேங்கற கதையெல்லாம், நான் என் பொண்ணுகிட்ட சொல்லவா இப்ப? என் பொண்ணை நீ ஒண்ணும் கொறை சொல்ல வேணாம், சொல்லிட்டேன் … ஆமாம்.”

“ரெண்டு நாள் கூட இருந்து பாருங்க, அப்புறம் தெரியும் உங்க பொண்ணு லட்சணம்.”

“யம்மா … நீ சும்மா பேசாதே! … நானும் சொல்லிட்டேன்,” மீண்டும் சுகன்யா அவர்கள் பேச்சில் குறுக்கில் புகுந்தாள்.