கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 13 7

சுகன்யா, குமாருக்காக காத்திருந்த போது, பைக்கில் ஒரு இளம் ஜோடி அவளை மெதுவாக கடந்து சென்றார்கள். பைக்கை ஓட்டிக்கொண்டிருந்தவன் தேவையில்லாமல் ப்ரேக் போட அவன் பின்னால் உட்க்கார்ந்திருந்தவள், விருட்டென அவன் முதுகில் தன் விம்மிய மார்புகள் உரச அழுத்தமாக அவனைக் கட்டிப்பிடித்தாள்.

“மெத்துன்னு இருக்குடி” அவன் சிரித்துக்கொண்டே சொன்னது சுகன்யாவுக்கு தெளிவாக கேட்டது. அந்த பெண் முகத்தில், இந்த சந்தர்ப்பத்தை, சடன் ப்ரேக்கை, எதிர்பார்த்து காத்திருந்தது தெளிவாக தெரிந்தது. அவர்கள் இருவரும் சாலையில் நடத்திய காதல் நாடகத்தை கண்ட சுகன்யா, தன் முகம் சிவந்து அவளைப் பார்த்து முறுவலித்தாள். அவளும் கல கலவென சிரித்துக்கொண்டே, சுகன்யாவை நோக்கி தன் கையை அசைத்தாள். லெட் தெம் பி ஹாப்பி; சுகன்யாவின் மனம் அவர்களை வாழ்த்தியது.

சட்டென சுகன்யாவுக்கு செல்வாவின் நினைவு மனசிலாடியது.
“அவன் பின்னாடி பைக்ல எத்தனை தரம் நான் உக்காந்து போயிருக்கேன்? ஒரு தரமாவது இந்த மாதிரி ப்ரேக் போட்டிருப்பானா? சரியான பொட்டை பயந்தாங்கொள்ளி. தன் வெக்கம் கெட்ட மனதில் எழுந்த ஆசையை எண்ணி, தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். இன்னேரம் செல்வா சாப்பிட்டிருப்பானா?இன்னைக்கு சாப்பாடு யார் கொண்டு போய் குடுத்து இருப்பாங்க?

” நேத்து அம்மா, சும்மா சும்மா அவன் கிட்ட பேச வேண்டாம்ன்னு சொன்னாங்க. நானும் அவன் கிட்ட பேசலை. அவன் தன் மனசுக்குள்ளே என்ன நினைச்சுக் கிட்டிருக்கான்? எட்டு மணி நேரம் ஒடம்பு நோவ உழைச்சுட்டு, ரெண்டு நாளா அவனைப் பாக்கறதுக்காக ஆஃபீசுலேருந்து நேரா ஹாஸ்பெட்டலுக்கு ஓடினேன். அப்படி ஓடறதுக்கு நான் என்னப் பைத்தியக்காரியா?”

“இப்ப அவனுக்கு உடம்பு தேறிடுச்சி; தனி ரூமுக்கு வந்தாச்சு; அப்படியும் அவன் எனக்கு ஒரு கால் கூட பண்ணல. என்னை கூப்பிட்டு ஒரு வார்த்தை ஆசையா எப்படி இருக்கேன்னு கேட்டா, கெட்டாப் போயிடுவான்? நான் அவனுக்கு கால் பண்ணலன்னா அவன் என்னைக் கூப்பிட்டு பேசக்கூடாதா?

“அம்மா சொல்றதும் சரிதான். என் மேல அவனுக்கு உண்மையிலேயே ஆசையிருந்தா என்னை ஒரு தரமாவது கூப்பிட்டு பேசியிருக்கணுமே? நேராப் பாக்கும் போது,
“சுகும்மா ஐ லவ் யூ வெரி மச்சுன்னு” பிட்டு போட வேண்டியது. எப்பவும் நான்தான் அவனுக்கு போன் பண்ணணுமா?

“ட்ரான்ஸ்பர் ஆகி பாண்டிச்சேரி போன செல்வா ஏற்கனவே இது மாதிரி நாலு நாள் வரைக்கும் என் கிட்ட பேசாம கல்லுளி மங்கனாத்தானே இருந்தான்? கடைசியா வெக்கம் கெட்டவ நான்தானே அவனைக் கூப்பிட்டு பேசினேன். எல்லா ஆம்பிளைகளும் இப்படித்தானா? காதலிச்சவதான் உருகி உருகி சாகணுமா?

“நான் சத்தியமா அவனை கூப்பிட்டு பேசப் போறது இல்லே. என் கிட்ட எப்ப பேசறானோ அப்ப அவனா பேசட்டும். அப்ப ஊதறேன் நான் அவனுக்கு சங்கு.” அவளுக்குள் ஒரு தேவையில்லாத பிடிவாதம் சட்டென எழுந்தது.

சுகன்யாவுக்குள் எழுந்த இந்த எண்ணம், அவள் பெண் ஈகோவுக்கு பட்டதாக நினைக்கும் அடியா? இல்லை பெண்களுக்கே உரித்தான தன் காதலன் மேல் இருக்கும் அளவுக்கு மேலான உரிமைப் பிரச்சனையா, இல்லை சாதாரணமான விளையாட்டுப் பிடிவாதமா, இல்லை அவள் அவனுடன் ஒரு ஊடல் நாடகம் நடத்த நினைக்கிறாளா? சுகன்யாவும் ஒரு பெண்தானே? இவ மனசை புரிஞ்சுக்கறது மட்டுமென்ன அவ்வளவு சுலபமா?

இப்படி எதுவுமேயில்லை எனில் இது தான், அவள் பெற்றோர் அனுபவித்த தனிமைதான் அவளுக்கும் விதிக்கப்பட்டிருக்கிறதா?
குமாரசுவாமி ஒரு பை நிறைய பழங்களும், சுந்தரிக்கு பிடித்த பால்கோவாவும், கூடவே அவளுக்கு மிகவும் பிடித்த மல்லிகைப் பூவையும் ஒரு நாலு முழம் வாங்கிக்கொண்டு வந்தார். அவர் கையிலிருந்த பூவைப் பார்த்ததும் சுகன்யாவுக்கு தன் தந்தையை கிண்டலடிக்கத் தோன்றியது.

“என்னப்பா … ஏற்பாடெல்லாம் பலமா இருக்கு” சுகன்யா நாக்கை நீட்டி தன் தந்தையை நோக்கி கண்ணடித்தாள்.

” நீ … என்னடா சொல்றே செல்லம் …” தன் மகளின் கிண்டல் இலேசாக புரிந்தும் புரியாதவர் போல் குமாரசுவாமி தன் முகத்தை வைத்துக்கொண்டிருந்தார். சுகன்யாவின் குறும்புத்தனம் அவரை விடுவதாக இல்லை.

“ம்ம்ம் … சின்னப் பாப்பா நீங்க … புரியாத மாதிரி நடிக்கிறீங்களே? பதினைஞ்சு வருஷம் கழிச்சு பொண்டாட்டியை பாக்கப் போறீங்க; கையில பழம், ஸ்வீட்டு, அதுக்கு மேல மல்லிகைப் பூ, எல்லாம் ஒரு செட்டப்பாத்தான் கிளம்பறீங்க” முகத்தில் கள்ளத்தனத்துடன் சிரித்த சுகன்யாவிற்கு அவர் பதிலேதும் சொல்லவில்லை.

ஆட்டோ நகர ஆரம்பித்ததும் சுகன்யா மீண்டும் ஆரம்பித்தாள்.
“அப்பா, அம்மாவுக்கு நான் போன் பண்ணட்டுமா? வீட்டுல பால் இருக்குமான்னு தெரியலை; அது மட்டும் தான் இப்ப குறைச்சலா இருக்கு உங்க கைல; வீட்டுல பால் இல்லன்னா வழியிலேயே அதையும் வாங்கிட்டு போயிடலாம்.” தன் நாக்கை குவித்து நீட்டி உரக்க சிரித்தாள்.

“கண்ணு, அப்பாவை ரொம்ப கிண்டல் பண்ணாதேடா; எனக்கு கூச்சமா இருக்கு. நான் உங்க அம்மாவுக்கு இதெல்லாம் ரொம்ப பிடிக்குமேன்னு வாங்கிட்டுப் போறேம்மா; உனக்கும் சேத்துத்தான் பூ, பழம், ஸ்வீட் எல்லாம் வாங்கியிருக்கேன். வீட்டுக்கு போய் முகம் கழுவி நீயும் உன் தலையில பூ வெச்சுக்கம்மா. மனசுல வேற எந்த எண்ணத்தோடும் நான் இதெல்லாம் வாங்கலடாச் செல்லம். அதுக்கெல்லாம், அப்பாவுக்கு வயசாகிப் போச்சும்மா.” குமாரசுவாமி நெளிந்த படியே சுகன்யாவைப் பார்த்து அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *