ஐ லவ் யூ ஸோ மச்.. மாம்.. ! 72

அவளை பஸ் ஏற்றி விட்டு.. கொஞ்சம் கனத்த இதயத்துடன் என் அறைக்குத் திரும்பினேன். !!
ஹாஸ்டல் போனதும் எனக்கு போன் செய்தாள் லாவன்யா.
“மாம்.. நான் வந்துட்டேன்”
“குட்.. அவனை மறந்துட்டு தூங்க முயற்சி செய்”
“தேங்க்ஸ் மாம்”
“ம்ம்”
“அப்றம் மாம்”
“சொல்லுப்பா?”
“இது நம்ம வீட்டுக்கெல்லாம் தெரிய வேண்டாம். ப்ளீஸ்.. நமக்குள்ளயே இருக்கட்டும்”
“ஓகேப்பா.. நோ ப்ராப்ளம்..”
“குட்நைட் மாம்”
“குட்நைட்..”
இரவு ஒன்பது மணிக்கு.. நான் அறையில் இருந்து கிளம்பி.. பக்கத்தில் இருந்த பாருக்குப் போய் பீர் குடித்து விட்டு.. திருப்தியாக அறைக்குத் திரும்பி தூங்கினேன்.. !!
அடுத்த நாளில் இருந்து தன் மனதின் ஆறுதலுக்காக.. தினமும் என்னுடன் போனில் பேசினாள் லாவண்யாா. நானும் அவளுடன் கனிவாகப் பேசினேன். போனிலும்.. வாட்சப்பிலுமாக நாங்கள் நீண்ட நேரம் பேசிக் கொள்வோம்.. !!
இந்த நிலையில்.. நான்கே நாட்களில் அவள் என்னிடம் அந்த வார்த்தையைச் சொல்லி விட்டாள்.. !!
” ஐ லவ் யூ.. ஸோ மச் மாமா.. !!”
எனக்கு திகைப்பாக இருந்தது. அவள் சொன்னதை என்னால் எளிதில் நம்ப முடியவில்லை. அவள் காதல் தோல்வியடைந்து மிகச் சில நாட்கள்தான் ஆகியிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அவள் காதலனுடன் கட்டில்வரை போய் விட்டாள் என்பது எனக்கும் நன்றாகவே தெரியும். அப்படி இருந்தும் எப்படி இவளால் இப்படி ஒரு வார்த்தையை சொல்ல முடிந்தது என்று நான் குழம்பிப் போனேன். !!
அவள் ‘ ஐ லவ் யூ ‘ சொன்னாலும் அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் மறுக்கவும் இல்லை. !!

6 Comments

Add a Comment
  1. கதையை ஒரு சுவாரசியமாக எழுத உங்களால் மட்டுமே முடிகிறது.
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை வரவேற்கிறேன்.

  2. அருமை அருமை

  3. செம்ம யா இருக்கு பா
    அருமையான கதை
    படிக்க படிக்க ஸ்வாரசியம்

Leave a Reply

Your email address will not be published.