எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 5 44

“ஹ்ஹ்ம்ம்.. என்ன விஷயம்னு இப்போ எனக்கு கொஞ்சம் புரியுது..!! உன் குழப்பம் போறதுக்கு பாட்டி ஒன்னு சொல்லட்டுமா..??”

“என்ன..??”

“காதலை பத்தியும், காதலிக்கிறவங்கள பத்தியும்.. காதலை சொல்றதுக்கு முன்னாடி தெரிஞ்சுக்குறதை விட.. காதலை சொன்னதுக்கப்புறம் தெரிஞ்சுக்குறதுதான் அதிகம்..!! அப்படி காதலை புரிஞ்சுக்கிட்டவங்கதான் உலகத்துல அதிகம் பேர்..!!” பாட்டி அவ்வாறு தனது அனுபவப்பாடத்தை மிக எளிமையாக சொல்ல, அவளுடைய மகன் மணிபாரதி தன் அம்மாவை புன்னகையுடன் ஆமோதித்தார்.

“ம்ம்.. கரெக்டா சொன்னம்மா..!!” என்றவர் உடனே மகனிடம் திரும்பி,

“ஏண்டா.. இன்னைக்கு காதலை சொன்னதுக்காக, நாளைக்கே உனக்கு கல்யாணம்ன்ற மாதிரில நீ பேசுற..?? இப்போ என்ன ஆகிப் போச்சு..?? ரெண்டு பேரும் பேசுங்க.. பழகுங்க.. ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கங்க.. காதல்னா என்னன்னு நல்லா தெரிஞ்சுக்கங்க..!! அப்புறமா.. கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு உங்களுக்கு தோணுறப்போ, எங்ககிட்ட வந்து சொல்லுங்க.. நாங்க அந்தப் பொண்ணோட ஃபேமிலி கூட பேசி.. எந்த பிரச்னையும் இல்லாம உங்க கல்யாணத்தை முடிச்சு வைக்கிறோம்..!! அவ்வளவுதான.. அதுக்கு ஏன் உனக்கு இவ்வளவு கொழப்பம்..?? மனசை போட்டு அலட்டிக்காம.. நல்லா சந்தோஷமா இருடா..!! ம்ம்… சாப்பிடு.. சாப்பிடு..!!”

உலகத்திலேயே மிக மிக சிறிய பிரச்சினை அதுதான் என்பது போல.. மிக மிக சிம்பிளான தீர்வு ஒன்றை சொல்லி.. அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மணிபாரதி..!!

சந்தோஷத்தை வெளிப்படுத்தியதோடும், அசோக்கை சமாதானப் படுத்தியதோடும் மட்டும், வீட்டில் இருப்பவர்கள் திருப்தி அடைந்து விடவில்லை. ஆளாளுக்கு அவர்களுக்கு தெரிந்த வகையில், அசோக்கின் காதலுக்கு டிப்ஸ் கொடுத்தனர்..!!

“அந்தப் பொண்ணை அடிக்கடி வெளில கூட்டிட்டு போ.. அவ ஏதாவது ஆசைப்பட்டு கேட்டா யோசிக்காம வாங்கிக்குடு..!! இப்போ காதலிக்க ஆரம்பிச்சாச்சு.. இன்னும் காசை பாத்துக்கிட்டு கஞ்சப் பிசினாரியா இருக்காத..!! உன்னை நம்பி ஒரு பொண்ணு.. அவ வாழ்க்கையை உன்கிட்ட ஒப்படைக்க நெனைச்சிருக்கா.. அவளை சந்தோஷமா வச்சுக்க வேண்டியது உன் பொறுப்பு..!! புரியுதா..??” அசோக்கின் தலையில் நறுக்கென்று குட்டியவாறே சொன்னாள் பாரதி.

“இதுலாம் டாடி எழுதுனதுலயே பெஸ்ட் ரொமாண்டிக் நாவல்ஸ்டா அசோக்.. இத்தனை நாளா உனக்கு இதுலாம் பிடிக்காம இருந்திருக்கலாம்.. இப்போ படிச்சு பாரு.. ரசிகர்கள் ஏன் என்னை காதல்க்கதை சக்கரவர்த்தி அப்டின்னு புகழ்றாங்கனு புரிஞ்சுப்ப..!! ஏகப்பட்ட ரொமான்ஸ் டிப்ஸ்.. எக்கச்சக்கமா கொட்டி கெடக்கும்.. உனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்..!!” ஒரு நாற்பது ஐம்பது நாவல்களை கைகொள்ளாமல் அள்ளிவந்த மணிபாரதி, அசோக்கின் கட்டிலில் இறைத்து சென்றார்.

“ஜஸ்ட் பிஃப்ட்டித்ரீ ருபீஸ்.. ஒரே ஒரு நம்பர் மட்டும் சூஸ் பண்ணிக்கலாம்.. அந்த நம்பரோட மட்டும் அன்லிமிட்டட் ஃப்ரீ டாக்டைம்..!! பேசலாம் பேசலாம்.. பேசிக்கிட்டே இருக்கலாம்..!! நானும் கிஷோரும் இந்த ப்ளான்தான் யூஸ் பண்றோம்.. உனக்கும் அண்ணிக்கும் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்..!! ட்ரை பண்ணிப்பாரு..!!” அதற்குள்ளாகவே மீராவை உறவு கொண்டாட ஆரம்பித்திருந்த சங்கீதா, ஏதோ ஒரு மொபைல் நெட்வொர்க் கம்பனியின் ப்ளானை, இலவசமாக மார்கெட்டிங் செய்தாள்.

“இதை சாதாரண வளையம்னு நெனைக்காத.. உங்க ரெண்டு பேரோட நெருக்கத்துக்கு இது ஒரு சனியன்.. இதை கழட்டி எடுத்தாத்தான், பின்னாடி உக்கார்ற அவளுக்கு பிடிமானம் இருக்காது.. பேலன்ஸ்க்கு உன்னை புடிச்சுப்பா..!!”

“இதை சாதாரண வளையம்னு நெனைக்காத.. உங்க ரெண்டு பேரோட நெருக்கத்துக்கு இது ஒரு சனியன்.. இதை கழட்டி எடுத்தாத்தான், பின்னாடி உக்கார்ற அவளுக்கு பிடிமானம் இருக்காது.. பேலன்ஸ்க்கு உன்னை புடிச்சுப்பா..!!”

அசோக்கின் பைக் பின் சீட்டுக்கு அருகே இருந்த அந்த ஸ்டீல் வளையத்தை, ஸ்பானர் உதவியுடன் கழட்டிக்கொண்டே தாத்தா கண்ணடித்தார். அசோக்கோ நெற்றியை பிசைந்து கொண்டான்.

1 Comment

  1. Very interesting love storie,

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Comments are closed.