எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 5 44

“ஹேய்.. ஏண்டா அப்படி சொல்ற..??” கிஷோர் சட்டென அசோக்கிடம் கேட்டான்.

அசோக் இப்போது தன் மனதில் இருந்த குழப்பத்தை நண்பர்களிடம் தெளிவாக எடுத்துரைத்தான். பேச ஆரம்பிப்பதற்கு முன்பே மீரா அவனை கலாய்த்தது.. அப்புறம் பரிட்டோ வாங்கி தந்தால்தான் மேற்கொண்டு பேசுவேன் என்றது.. பில்லுக்கு பணம் கேட்டதும், திடீரென ஐ லவ் யூ சொன்னது..!! நேற்று அவர்களிடம் சொல்லாத அந்த விஷயங்களை எல்லாம், இப்போது விளக்கமாக சொன்னான். நம்பர் தந்திருக்கிறாளே என்ற நம்பிக்கை கூட நேற்று இரவே தகர்ந்து போனது என்று புலம்பினான்.

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட நண்பர்கள் மூவரும், சிறிது நேரம் பலத்த யோசனையில் இருந்தனர். அசோக்குக்கு ஏதாவது ஒருவகையில் உதவ முடியாதா என்று தீவிரமாக தின்க் செய்தனர். ‘புரிஞ்சுக்க முடியாத கேரக்டரா இருக்காடா..’ என்று அசோக் சலிப்பாக சொன்னதை அனைவரும் ஆமோதித்தனர். ‘ஹேய்.. ஒருவேளை அவ கெளம்புற அவசரத்துல தப்பான நம்பர் குடுத்திருக்கலாம் மச்சி.. நீயா எந்த ஒரு முடிவுக்கும் வந்துடாத..’ என்று சொல்லிப் பார்த்தனர். பிறகு அவன் சமாதானம் ஆகாததை கண்டதும், ‘சரி மச்சி.. நீ ரொம்ப ஃபீல் பண்ணாத.. அதான் நாங்கலாம் இருக்கோம்ல.. இன்னைக்கு அவ வந்தான்னு வச்சுக்கோ.. ரெண்டுல ஒன்னு கேட்டுடலாம்.. சரியா..??’ என்று அசோக்கை தைரியமூட்டினார். என்ன செய்யலாம் என்று நான்கு பேரும் ஒரு திட்டம் தீட்டினர்..!!

அன்று மதியம்..

அவர்கள் நால்வரும் அந்த ஃபுட்கோர்ட்டுக்குள் புகுந்தபோது.. மீரா ஏற்கனவே வந்திருந்தாள்..!! வழக்கம் போல ஒரு கார்னர் டேபிளை பிடித்திருந்தவள்.. தனியாக அமர்ந்து, தட்டில் இருந்த ரோட்டியை தாக்கிக் கொண்டிருந்தாள்..!! வேணுதான் அவளை முதலில் கவனித்தான்..!!

“மச்சி.. யார்னு பாரு அங்க..!!”

என்று வேணு சொன்னதும், மற்ற மூவரும் மீராவை பார்வையால் தேடிப் பிடித்தனர். நன்றாக முழுங்கிக்கொண்டிருந்த அவளை.. நான்கு பேருமே தூரத்தில் இருந்தவாறு முறைத்து பார்த்தனர்..!! தங்களுக்குள் ஒருமுறை ஒருவர் முகத்தை ஒருவர் திரும்பிப் பார்த்துக் கொண்டனர். இதே ஃபுட் கோர்ட்டில் மீரா ஒரு ஆளை பளார் பளார் என்று கன்னத்தில் அறைந்து விரட்டிய சம்பவம், அவர்கள் அனைவருடைய மூளையையும் அந்த நொடியில் க்ராஸ் செய்திருக்க வேண்டும். தலையை சிலுப்பி வலுக்கட்டாயமாக அந்த நினைவை விரட்டி அடித்தனர். பிறகு வீரசிங்கங்கள் போல.. நால்வரும் பேரலலாக நடந்து.. மீராவை நோக்கி சென்றனர்.. அவள் அமர்ந்திருந்த டேபிளை சூழ்ந்து கொண்டனர்..!!

தலையை நிமிர்த்திய மீரா முதலில் அசோக்கைத்தான் பார்த்தாள்.. உடனே அவளுடைய முகம் விளக்கு போட்ட மாதிரி ப்ரைட் ஆனது..!!

“ஹாய்…” என்று உற்சாகமாக கத்தியவள்,

“மிஸ்டர்.. மிஸ்டர்..”

என்று எதையோ மறந்தவள் போல இழுத்தாள். நான்கு பேருமே அவளை இன்னும் கடுமையாக முறைக்க ஆரம்பிக்க, அசோக்தான் கடுப்பை அடக்க முடியாமல் கேட்டுவிட்டான்.

“அசோக்..!!!! என் பேர் கூட அதுக்குள்ள மறந்து போச்சா..??”

1 Comment

  1. Very interesting love storie,

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Comments are closed.