எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 5 44

“ம்ம்.. ஒருவேளை..??” மீரா கண்களை உருட்டியவாறு கேட்டாள்.

“வே..வேணாம் விடு..!!”

“ப்ச்.. இப்போ சொல்லப் போறியா.. இல்ல பளார்னு ஒன்னு விடவா..??” மீரா திடீரென உக்கிரமாக, அசோக் மிரண்டு போனான்.

“இ..இல்ல.. சொல்லிடுறேன்..!!”

“சொல்லு..!!”

“ஒருவேளை உன் கைல காசு இல்லாம ஐ லவ் யூ சொல்லிட்டியோன்னு..”

சொல்லிவிட்டு அசோக் மிரட்சியாக மீராவை ஏறிட்டான். அவள் எரிந்து விழப் போகிறாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவளோ படுகூலாக இருந்தாள். கோக்கை எடுத்து ஒருமுறை உறிஞ்சிக் கொண்டவள், பிறகு கேஷுவலாக கேட்டாள்.

“என் அப்பாவுக்கு மொத்தம் மூணு புள்ளைங்கன்னு சொன்னேன்ல..??”

“ம்ம்..!!”

“அவருக்கு மொத்தம் சொத்து எவ்வளவுன்னு சொன்னனா..??”

“இ..இல்ல..!!”

“கொஞ்சம் கம்மி.. அறுபது கோடிக்கு கொஞ்சம் கம்மி..!!” மீரா அசால்டாக சொல்ல, அசோக் ஆவேன வாயை பிளந்தான்.

“மூணு பங்கு வச்சாலும்.. இருபது கோடிக்கு சொந்தக்காரி நான்..!! அந்த பிச்சைக்காசு நூத்தி நாப்பது ரூவாக்காக.. உன்கிட்ட ஐ லவ் யூ சொல்லிருப்பேன்னு நெனைக்கிறியா..?? ம்ம்..??” மீரா ஷார்ப்பாக கேட்க, அசோக் அவனையும் அறியாமல் தலையை இப்படியும் அப்படியுமாய் அசைத்தான்.

“சான்ஸே இல்ல..!!!”

“சந்தேகப்படுறல என்னை..??”

மீரா திடீரென முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு, சீரியஸ் குரலில் கேட்டாள். அசோக்கிடம் உடனே ஒரு பதற்றம். தேவையில்லாமல் சந்தேகப்பட்டு அவளை காயப்படுத்தி விட்டோமோ என்பது மாதிரியான குற்ற உணர்வு..!!

“ஹேய்.. மீரா.. அ..அப்டிலாம் இல்ல..”

“போ..!! நம்பாட்டி போ.. மனசுல சந்தேகத்தை வச்சுக்கிட்டு நீ என் கூட பழக வேணாம்..!! போ.. ரெண்டு நாள் சாப்பிட்டதுக்கு நான் காசு தந்துட்றேன்.. வாங்கிட்டு போ..!!” சொல்லிக்கொண்டே, மீரா ஹேண்ட் பேகை எடுக்க செல்ல அசோக் அவசரமாய் அவளை தடுத்தான்.

“ஐயோ.. என்ன மீரா இது.. நான் ஏதோ அறிவில்லாம..”

1 Comment

  1. Very interesting love storie,

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Comments are closed.