எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 4 51

“டேய்.. ஆன்ட்டியை கொறை சொல்லாத.. அவங்க நெலமைல இருந்து கொஞ்சம் யோசிச்சு பாரு..!! இன்னைக்கு எங்கிட்ட பேசுறப்போ எவ்வளவு சந்தோஷமா பேசினாங்க தெரியுமா.. அவங்க இவ்வளவு சந்தோஷப்பட்டு நான் பாத்ததே இல்ல..!! அந்த பொண்ணை பத்தி விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டாங்க.. ‘என் புள்ளை அந்த பொண்ணை லவ் பண்றான் போல இருக்கு.. நீங்க ஃப்ரண்ட்ஸ் தடிப்பசங்கள்லாம் முடிஞ்ச வரை அந்த லவ்வுக்கு ஹெல்ப் பண்ணுங்கடா’ன்னு கேட்டுக்கிட்டாங்க..!!”

“லவ்வாஆஆ..????” வேணுவும் சாலமனும் வாயை பிளந்தனர்.

“ஏய்.. அதெல்லாம் ஒன்னும் இல்லடா..!!” அசோக் பலவீனமாக மறுத்தான்.

“இருக்கு மச்சி.. உனக்கும் அந்தப் பொண்ணுக்கும் ஏதோ ஒரு லிங்க் இருக்கு..!! அப்புறம் எப்புடி கரெக்டா அவளை நான் செலக்ட் பண்ணி காட்டனும்..??”

“ம்ம்ம்.. அப்புறம் எதுக்கு அவ கரெக்டா செருப்பை தூக்கி காட்டனும்..??”

“ப்ச்.. எல்லாத்துக்கும் ஏதாவது காரணம் இருக்கும்டா..!! நீ வேணா பாரு.. அவ கண்டிப்பா வருவா..!!’

“ம்.. ம்.. வந்தா பாத்துக்கலாம்..!!” அசோக் அசால்ட்டாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சாலமன் திடீரென உற்சாகமாக கத்தினான்.

“மச்சீஈஈ..!!!!”

“என்னடா..??”

“வந்துட்டா மச்சி.. வந்துட்டா..!!”

சாலமன் சொல்லவும், இப்போது அனைவரும் படக்கென திரும்பி அவன் பார்வை சென்ற திசையை பார்த்தார்கள். அங்கே அவள் வந்துகொண்டிருந்தாள். நேற்று மாதிரியே கூந்தலும், காதுவளையமும் காற்றில் ஆட.. குதிரை கணக்காக வந்து கொண்டிருந்தாள்..!! டி-ஷர்ட் ஜீன்ஸ்.. தோளில் பேக்.. கையில் ஒரு பெரிய பிளாஸ்டிக் ப்ளேட்.. அதன்மேல் ஒரு சிறிய உணவு ப்ளேட்..!!

அவளை பார்த்த மாத்திரத்திலேயே அசோக்கின் இதயம் கிடந்தது தாறுமாறாய் துடிக்க ஆரம்பித்திருந்தது. நாடித்துடிப்பு எல்லாம் கன்னாபின்னாவென்று எகிற ஆரம்பித்தது. ஆச்சரியம், சந்தோஷம், நிம்மதி, பயம் என பலவித உணர்வுகள் கலந்துகட்டி அவனை தாக்கின. பதித்த பார்வையை எடுக்க மனமில்லாமல், அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் இவர்களை கடந்து சென்றாள். ஓரமாக யாருமற்று கிடந்த அந்த டேபிளில் சென்று அமர்ந்து கொண்டாள். பேகை பக்கத்து சேரில் வைத்துவிட்டு, ப்ளேட்டை பார்த்து குனிந்து கொண்டாள்.

இவர்கள் நால்வரும் இன்னுமே அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்க, வேணுதான் முதலில் வாய் திறந்தான்.

“மச்சீஈஈ.. என்ன டைமிங்டா இது..?? சான்சே இல்ல போ..!! நீ சொன்னது நூத்துக்கு நூறு உண்மைடா.. இவனுக்கும் அவளுக்கும் ஏதோ ஒரு வயர்லஸ் நெட்வொர்க் இருக்குது மச்சி..!!”

“ஃபேக்ட்.. ஃபேக்ட்.. ஃபேக்ட்..!!” சாலமனும் ஆமோதித்தான்.

“ஏய்.. போடா.. போய் அவகிட்ட பேசு.. போ..!!” கிஷோர் அசோக்கை தூண்டினான்.

“ஆமாம் மச்சி.. போடா.. போய் பேசு.. எந்திரி..!!” வேணும், சாலமனும் கிஷோருடன் சேர்ந்து கொண்டார்கள்.

“ஹேய்.. எ..எனக்கு ஒரு மாதிரி இருக்குதுடா..!!” அசோக்கிற்கு நிஜமாகவே உதறலாக இருந்தது.

“ப்ச்.. ஒன்னும் வொர்ரி பண்ணிக்காத மச்சி..!! நீ சொன்ன மாதிரி.. நேத்து அவ ஏதோ பேட் மூட்ல இருந்திருக்காடா.. அதான் அப்படிலாம் நடந்துக்கிட்டா..!! இன்னைக்கு நல்ல மூட்ல இருக்கா.. தைரியமா போய் பேசு..!!” என்றான் வேணு.

“அவ நல்ல மூட்ல இருக்கான்னு உனக்கு எப்படி தெரியும்..??”

“எ..எல்லாம்.. ஒரு சில அறிகுறிகளை வச்சு சொல்றதுதான்..!! நேத்து அவ என்ன கலர் டி-ஷர்ட் போட்டுட்டு வந்தா..??”

“ப்ளாக்..!!”

1 Comment

  1. Varakkal thangal

Comments are closed.