எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 4 51

“நான் வாயை பொளந்துட்டு உக்கார்றது இருக்கட்டும்.. நீ மொதல்ல வாயை மூடிட்டு சாப்பிடு..!!”

அசோக் சலிப்பாக சொல்லிவிட்டு அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான். ஸ்பூனால் கொஞ்சம் கொஞ்சமாய் பாஸ்தா அள்ளி வாய்க்குள் திணித்துக் கொண்டான். நண்பர்களை பார்ப்பதை தவிர்த்து, பார்வையை வேறெங்கோ செலுத்தியபடியே சாப்பிட்டான். மற்றவர்களும் இப்போது எதுவும் பதில் பேசவில்லை. அமைதியாக அவரவர் உணவை உண்ண ஆரம்பித்திருந்தனர்.

ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. சாலமன் மீண்டும் கேலியான குரலில் அசோக்கிடம் சொன்னான்.

“மானகெட்ட மாப்ள.. அந்த சால்ட் டப்பாவை கொஞ்சம் எடுக்குறியா..??” அவ்வளவுதான்.. அசோக் படுடென்ஷனாகிப் போனான்..!!

“த்தா.. சொல்லிட்டே இருக்குறேன்..!! மசுரு..!!”

என்று கத்தியவாறு உப்பு டப்பாவை எடுத்து சாலமனின் அடிவயிறை குறி பார்த்து எறிந்தான். சாலமன் அவசரமாய் கைகளை நகர்த்தி, அடி படாதவாறு அந்த டப்பாவை கேட்ச் பிடித்துக் கொண்டான்.

“ஹேய்.. ஏண்டா இப்படி டென்ஷன் ஆகுற..??” வேணு அசோக்கிடம் சீறினான்.

“பின்ன என்னடா..?? சும்மா சும்மா.. சொரணை கெட்டவன், மானம் கெட்டவன்னுட்டு..?? அதான் இன்னைக்கு அவ வந்தா போய் பேசுறேன்னு சொல்லிட்டேன்ல..?? அத்தோட விடுவீங்களா…??”

“ஆமாம்.. டெயிலி வர்றதுக்கு அவ என்ன ந்யூஸ் பேப்பரா..?? அவள்லாம் இனி வர மாட்டா.. அவ்வளவுதான்..!!” சாலமன் எரிச்சலாக கத்த, அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த கிஷோர் இப்போது வாயை திறந்தான்.

“ஏய்.. மேட்டர் தெரியாம பேசாதீங்கடா..!! அந்தப் பொண்ணு கண்டிப்பா வருவா..!!”

கிஷோர் அந்த மாதிரி அமைதியாக சொல்லவும், இப்போது மற்ற மூன்று பேரும் திரும்பி அவனுடைய முகத்தை குழப்பமாக ஏறிட்டனர். வேணுதான் அந்த குழப்பம் கலந்த குரலிலேயே கிஷோரிடம் கேட்டான்.

“எ..எப்படிடா சொல்ற..??”

“நம்ம பையனுக்கும் அந்தப் பொண்ணுக்கும் ஒரு Wi-Fi கனெக்ஷன் இருக்கு மச்சி.. நம்ம கண்ணுக்குலாம் தெரியாது அந்த கனெக்ஷன்..!!”

“பு..புரியலடா..!!”

“நான் அந்த பொண்ணை செலக்ட் பண்றதுக்கு முன்னாடியே.. நம்ம பையன் பலநாளா அவளை சைலண்டா சைட் அடிச்சிருக்கான்..!! உங்கள்ல யாருக்காவது தெரியுமா..?? ம்ம்..?? எனக்கும் இத்தனை நாளா தெரியாது.. எவ்வளவு பெரிய கேடின்னு பாரு இவன்..??”

“ஏய்.. இ..இவன் என்னடா சொல்றான்..??”

வேணுவும், சாலமனும் குழப்பமாய் அசோக்கை பார்த்தனர். அவனோ கிஷோரையே எரிச்சலாக முறைத்துக் கொண்டிருந்தான். இத்தனை நாட்களாக சங்கீதாவிடம் சொல்கிற விஷயங்கள்தான் கிஷோருக்கும் சென்றுவிடும். இன்று அம்மாவிடம் பேசிய விஷயமும் அவனை வந்து அடைந்திருக்கிறதே என்ற எண்ணத்தில் வந்த எரிச்சல் அது.

“என்னடா மொறைக்கிற..??” கிஷோர் அசோக்கை சீண்டும் விதமாய் கேட்டான்.

“உளறிட்டாங்களா உன்கிட்ட..??” அசோக்கின் குரலில் ஒருவித கடுப்பு கலந்திருந்தது.

1 Comment

  1. Varakkal thangal

Comments are closed.