எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 4 51

என்று அசோக்கை தோள்ப்பட்டையை பிடித்து அமுக்கி, வலுக்கட்டாயமாக அவனை கட்டிலில் அமர வைத்தாள். அருகில் இருந்த டவலை எடுத்து அவனுடைய தலையை, ஈரம் நீங்க துவட்டி விட ஆரம்பித்தாள்.

“அப்படியே ஈரத்தலையோட போக வேண்டியது.. அப்புறம் இருமலு காச்சலுனு வந்து நிக்க வேண்டியது..!!”

அம்மா அந்த மாதிரி அன்பான அர்ச்சனையுடன் தலை துவட்டிவிட, அசோக்குக்கு திடீரென குழந்தையாகிப் போன மாதிரியான உணர்வு..!! ‘மனதில் இருக்கும் குழப்பத்தை அம்மாவிடம் சொல்..’ என்று அந்த குழந்தை மனம் அவனை உந்தித் தள்ளியது. பாரதியின் கை அசைவுக்கு ஏற்ப, அவனது தலையும் அப்படியும் இப்படியுமாக ஆடிக்கொண்டிருக்க, அதனுடனே மெல்லிய குரலில் ஆரம்பித்தான்.

“மம்மீ..!!!”

“ம்ம்..!!”

“உன்கிட்ட ஒன்னு கேக்கணும்..!!”

“என்ன..??”

“அ..அந்தப் பொண்ணு இல்ல..” என்று இழுத்தான்.

“எந்தப் பொண்ணு..??”

“அ..அதான்.. அன்னைக்கு நீ கேட்டியே.. ‘இதுவரை யாருமே உன்னை அட்ராக்ட் பண்ணினது இல்லையா..’ன்னு.. அப்போ என் மனசுல பட்டுன்னு ஞாபகத்துக்கு வந்த பொண்ணு..!!”

அசோக் அந்த மாதிரி குழந்தை குரலில் குழைந்தவாறே சொல்ல, பாரதிக்கு சுரீர் என்று இருந்தது. மகன் பேசப் போகிற விஷயத்தின் தீவிரத்தை உடனடியாய் உணர்ந்து கொண்டாள். தலை துவட்டுவதை ஓரிரு வினாடிகள் நிறுத்தி வைத்திருந்தவள், இப்போது மீண்டும் அதை தொடர்ந்தாள். கவனம் முழுவதும் மகன் பேசப் போகிற விஷயத்தில் நிலைத்திருக்க, குரலில் மட்டும் அந்த ஆர்வத்தை காட்டிக்கொள்ளாமல் மிக இயல்பாக கேட்டாள்.

“ஓ..!! யாரு அவ..??”

“அவ பேர்லாம் தெரியாது மம்மி.. அவ கூட நான் பேசினது கூட கிடையாது..!!”

“ம்ம்.. அப்புறம்..??”

“நாங்க டெயிலி லஞ்ச் சாப்பிட போவோம்ல.. அந்த ஃபுட் கோர்ட்கு அவளும் வருவா.. அப்போ அவளை அடிக்கடி பாத்திருக்கேன்..!!”

“ஓ..!! சரி.. இப்போ அவளுக்கு என்ன பிரச்னை..??”

“ஐயோ.. அவளுக்கு ஒன்னும் பிரச்னை இல்ல மம்மி..!!”

“அப்புறம்..??”

“அ..அது.. எப்படி சொல்றது…?? ம்ம்ம்ம்…. அன்னைக்கு நீ சொன்னேல..?? ‘யாராவது பொண்ணை பாத்து.. அழகா இருப்பான்னு தோணிருக்கும்.. நல்ல பொண்ணா இருக்காளேனு தோணிருக்கும்.. பேசிப்பழகலாம்னு தோணிருக்கும்..’ அப்டின்னு மூணு விஷயம் சொன்னேல..??”

“ஆமாம்..!!”

“அந்த மூணுமே எனக்கு அவளை பாத்து தோணுச்சு மம்மி..!!”

“ம்ம். நல்ல விஷயந்தான..??”

“ஆ..ஆனா..”

“ஆனா..??”

“ஆனா.. இப்போ.. நேத்துல இருந்து.. மனசுக்குள்ள ஒரு சந்தேகம்..!!”

“என்ன சந்தேகம்..??”

“அந்த மூணு விஷயத்துல ரெண்டாவது விஷயம்..!!”

“எது..?? அந்தப் பொண்ணு நல்ல பொண்ணா இல்லையான்னா..??”

“அ..அப்படி சொல்ல முடியாது..!! அந்தப் பொண்ணு எனக்கு ஒத்து வருவாளா இல்லையான்னு..!!”

“ஓ.. ஏன் அப்படி நெனைக்கிற..??” பாரதி அப்படி கேட்கவும், அசோக்கும் ஏதோ ஒரு ஆர்வத்தில்

“செருப்ப எடுத்து இப்படி காட்டுறா மம்மி.. இப்படி.. இங்க.. மூஞ்சிக்கு முன்னாடி..!!”

என்று தன் முகத்துக்கு நேராக கை நீட்டிக்காட்டி சொல்லியே விட்டான். பாரதி சற்றே அதிர்ந்து போனாள்.

“யாரு..?? உன் மூஞ்சிக்கு முன்னாடியா..??” என்று அவள் அவசரமாய் கேட்கவும், அசோக் இப்போது சுதாரித்துக் கொண்டான்.

“ஐயையே.. எ..என் மூஞ்சிக்கு முன்னாடி இல்ல மம்மி..!! யா..யாரோ.. வேறொரு பையன்.. அவன் மூஞ்சிக்கு முன்னாடி..!! நான் கொஞ்சம்.. தூரமா இருந்து.. இதெல்லாம் பாத்துட்டு இருந்தேன்..!!”

“ஓ..!! அதுசரி.. அவ ஏன் அப்படி பண்ணினா..??”

1 Comment

  1. Varakkal thangal

Comments are closed.