எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 4 51

“பேரகன் எந்தன் தோழன்.. எந்தன் தோழன் பேரகன்..!!”

“ஷ்ஷ்ஷ்ஷ்…. அந்த சேனலை மொதல்ல மாத்துங்க தாத்தா..!!”

என்று தாத்தாவிடம் எரிந்து விழுந்தான். பேரனையே ஓரிரு வினாடிகள் வியப்பாக பார்த்த தாத்தா, அப்புறம் சேனலை மாற்றினார். மாற்றப்பட்ட சேனலில் ஏதோ சீரியல் ஓடியது. அசோக் சற்றே நிம்மதியடைந்தவனாய்.. கண்களை மூடி.. தலையை சோபாவில் சாய்த்து.. அலைபாய்ந்த மனதை ஆசுவாசப்படுத்தலானான்..!! அரை நிமிடம் கூட ஆகியிருக்காது..

“இவனைலாம் செருப்பாலேயே அடிக்கணும்..!!” பாட்டி திடீரென வெறுப்பாக சொல்ல, இவன் பதறிப்போய் படக்கென நிமிர்ந்து அமர்ந்தான்.

“யா..யாரை சொல்ற பாட்டி..??” என்று பாட்டியை பார்த்து கலவரமாக கேட்டான்.

“இந்த செல்லம்மா புருஷனைத்தான் சொல்றேன்.. பாவிப்பய..!!” பாட்டி சீரியலில் வரும் கேரக்டரை சீரியஸாக திட்டினாள். அசோக் நொந்து போனவனாய் தலையை பிடித்துக் கொண்டான்.

இந்த மாதிரி ஆளாளுக்கு அசோக்கை போட்டு பாடாய் படுத்தி, அவனுடைய நிலையை மிகக் கவலைக்கிடமாய் ஆக்கி வைத்திருந்தனர். அவனுடைய மனது ஒருவித குழப்பத்தில் சிக்கி தவித்தது. ‘பேய் இருக்கா இல்லையா.. பாத்திருக்காய்ங்களா பாக்கலையா.. நம்பலாமா நம்பப்படாதா..?’ என்று வடிவேலுவுக்கு வந்த சந்தேகம் மாதிரி, அசோக்குக்கும் ‘அவ பொண்ணா பிசாஸா.. அவ மேல எனக்கு லவ் இருக்கா இல்லையா.. இதை கண்டின்யூ பண்ணலாமா வேணாமா..’ என்று சந்தேகம் வந்திருந்தது. ‘ஒரு நாள் பேசணும்னு நெனச்சதுக்கே செருப்பு லெவலுக்கு வந்துடுச்சே.. இதை கண்டின்யூ பண்ணினா எங்க போய் முடியும்னு தெரியலையே..??’

இந்த மாதிரி குழப்பமான எண்ணங்கள் அன்றைய அவனது தூக்கத்தை வெகுவாக பாதித்தன. சரியாக உறக்கம் இல்லாமல்.. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்..!!

அடுத்த நாள் காலை.. அசோக்கின் அறை..!! அசோக் அப்போதுதான் குளித்து முடித்து ஃப்ரெஷாக இருந்தான். ஆடை அணிந்து கொண்டிருந்தான். சட்டையை அணிந்து பட்டன்கள் இட ஆரம்பித்தபோது, அறைக்கதவு தட்டப்பட்டது. பட்டன் போடுவதை நிறுத்தி, பனியன் மூடிய மார்புடனே அசோக் சென்று கதவை திறந்தான். பாரதி வெளியே நின்று கொண்டிருந்தாள்.

“என்ன மம்மி..??”

“பால் இல்லடா.. காலைல பால் பாக்கெட் போடாமலே போயிருக்கான்.. என்னன்னு தெரியல..!! உனக்கு காபி வேணும்னா சொல்லு.. மம்மி கடைல போய் பால் பாக்கெட் வாங்கிட்டு வரேன்..!!”

“இல்ல மம்மி.. காபிலாம் ஒன்னும் வேணாம்.. நீ டிபன் ரெடி பண்ணு.. எனக்கு டைமாச்சு.. சாப்பிட்டு கெளம்புறேன்..!!”

“ம்ம்.. சரிடா..!!”

சொல்லிவிட்டு நகர நினைத்த பாரதி, எதேச்சையாக மகனின் தலையை பார்த்தாள். உடனே அவளுடைய முகத்தில் ஒருவித சலிப்பும் எரிச்சலும்..!! அறைக்குள் நுழைந்தவள், அசோக்கின் தலையில் ‘நறுக்’ என்று ஒரு குட்டு வைத்தாள்.

“ஆஆஆஆ..!!! என்ன மம்மி…??” அசோக் தலையை தேய்த்தவாறே கேட்டான்.

“பனை மரத்துல பாதி நிக்கிற.. தலை எப்படி தொவட்டனும் கூட தெரியாதா உனக்கு..??”

“அ..அதுலாம் நல்லா தொவட்டியாச்சு..!!”

“என்னத்த நல்லா தொவட்டுன.. ஒரே ஈரமா இருக்கு..!!” அசோக்கின் தலைமுடியை கலைத்து விட்டவாறே சொன்ன பாரதி,

“உக்காரு.. நான் தொவட்டி விடுறேன்..!!”

1 Comment

  1. Varakkal thangal

Comments are closed.