எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 4 9

“பண்ணிக்கலாமே..??”

“கேள்வியை நான் கேட்கவா.. நீயே கேட்கிறாயா..??”

“நீயே கேளு..!!”

“ஹ்ம்ம்.. ஓகே…!! ம்ம்ம்… உன்னோட ஃபேவரிட் மூவி எது..??”

“ம்ம்… டைட்டானிக்..!!”

“குட்..!! ஃபேவரிட் பொலிட்டிகல் லீடர்..??”

“ம்ம்… சோனியா..!!”

“நைஸ்..!!”

அசோக் அதன்பிறகும் மீராவை நிறைய கேள்விகள் கேட்டான். எல்லாமே அவளுடைய ஆசை, ஆர்வம், லட்சியம் பற்றிய கேள்விகள். அவளும் எல்லா கேள்விகளுக்கும், அமைதியாக பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டே இருந்தாள். அப்புறம் எதேச்சையாக மணிக்கட்டை திருப்பி பார்த்தவள், அவசரமாக சொன்னாள்.

“ஹேய்.. எனக்கு ரொம்ப டைமாச்சுபா.. நான் கெளம்புறேன்..!!”

“ஐயையோ.. இப்படி பொசுக்குனு எழுந்து போனா என்ன அர்த்தம்..??”

“வேற என்ன பண்ணனும்..??”

“நான் திரும்ப உன்னை காண்டாக்ட் பண்ணனும்னா எப்படி பண்றது..?? அட்லீஸ்ட் உன் ஃபோன் நம்பராவாது கொடுத்துட்டு போகலாமே..??”

“ஓ.. அட்லீஸ்ட் ஃபோன் நம்பரா..?? இரு.. தர்றேன்..!!” என்றவள், குனிந்து தனது பேகில் எதையோ தேடினாள். அப்புறம் அசோக்கிடம் திரும்பி,

“ம்ம்.. கையை நீட்டு..!!” என்றாள்.

அசோக் தனது கையை நீட்டினான். அவள் பட்டென்று அந்த கையை பற்றினாள். பேகில் இருந்து எடுத்த பால்பாயிண்ட் பேனாவால், அவனுடைய உள்ளங்கையில் கிறுக்க ஆரம்பித்தாள். அசோக்கிற்கு என்னவென்று சொல்ல முடியாத மாதிரியான ஒரு உணர்ச்சி..!! முதன்முறையாக அவளுடைய ஸ்பரிசம்.. அவளுடைய தளிர்க்கைகளின் மென்மை.. தனது உள்ளங்கையில் ஏற்பட்ட ஒரு குறுகுறுப்பு.. அவளுடைய நெருக்கத்தால் அவளிடம் இருந்து கிளம்பிய வாசனை..!! ரத்த ஓட்டம் படக்கென சொடுக்கிவிடப்பட்டிருக்க.. ஒருமாதிரி சொக்கிப்போய் அமர்ந்திருந்தான்..!!

“ம்ம்.. இதுதான் என் நம்பர்.. ஓகேவா..??”

அவள் எழுந்து கொள்ள முயல, அசோக் இப்போது உடனடியாய் சுதாரித்துக்கொண்டான். அவசரமாய் அவளை தடுத்து நிறுத்தினான்.

“ஹலோ ஹலோ.. ஒரு நிமிஷம்..!!”

“எ..என்ன..??”

1 Comment

Add a Comment
  1. Varakkal thangal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *