எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 4 9

“சேச்சே.. அது என் நிக்நேம்..!! ஃப்ரண்ட்ஸ்லாம் அப்டித்தான் என்னை கூப்பிடுவாங்க…??”

“ஓ.. அப்போ.. அப்பா அம்மா வச்ச பேர்..??”

“மீரா..!!”

“வாவ்..!! நைஸ் நேம்..!! ஆக்சுவலா.. எனக்கு கூட கிருஷ்னு பேர் வைக்கனும்னுதான் என் தாத்தா ஆசைப்பாட்டாராம்.. ஐ மீன் கிருஷ்ணன்..!! அப்புறம் என் அம்மாதான் அடம்புடிச்சு அசோக்னு வச்சுட்டாங்க..!! ஹ்ம்ம்… மீரா அலையாஸ் மிச்சி.. லவ்லி.. நல்லாருக்கு..!! ம்ம்… என்ன படிச்சிருக்குற நீ..??”

“எஞ்சினியரிங்..!!”

“என்ன விஷயமா இங்க டெயிலி வர்ற..?? இங்க எங்கயும் வொர்க் பண்றியா..??”

“இல்ல..!! இ..இங்க.. ஆப்டெக் சென்டர் இருக்குதுல.. அங்க ஒரு கோர்ஸ் பண்ணிட்டு இருக்குறேன்..!!”

“ஓ..!! என்ன கோர்ஸ்..??”

“ம்ம்.. மாயா…!!!!”

“வாவ்.. அனிமேஷன் கோர்ஸ்ல..??”

“ஆ..ஆமாம்..!!”

“அனிமேஷன்ல இன்ட்ரஸ்ட் உண்டா..?? தேட்ஸ் நைஸ்..!! ஹ்ம்ம்… சென்னைதான் சொந்த ஊரா..??”

“இல்ல..!! பொறந்தது காரைக்குடில.. செட்டிலானது சென்னைல.. படிச்சது ஹைதராபாத்ல..!!”

“ஓ..!! அப்போ உனக்கு தெலுங்கு நல்லா தெரியுமா..??”

“ம்ம்.. தெரியும்..!! நோரு மூஸ்குனி அதுகு..!!”

“அப்படினா..??”

“வாயை மூடிட்டு மேல கேளுன்னு அர்த்தம்..!!”

“ஓ..!! சரிசரி.. சொல்லு..!!”

“எனக்கு ஒரு அண்ணன்.. ஒரு அக்கா.. ஒரு அப்பா.. ஒரு அம்மா..!!”

“ஹாஹா..!! அண்ணன் அக்கா ஓகே.. அப்பா அம்மா கூடவா அதே மாதிரி சொல்வ..??”

“ம்ம்..!! இப்போதைக்கு அவ்வளவுதான் என்னைப்பத்தி..!!”

“ஹ்ம்ம்.. எனக்கும் இப்போதைக்கு இவ்வளவு போதும்..!! அ..அப்புறம்.. இன்னொரு விஷயம் மீரா..”

“மிர்ச்சினு கூப்பிடேன்.. ப்ளீஸ்..!!”

“எ..எனக்கு மீரா பிடிச்சிருக்கே.. அப்படியே கூப்பிடுறேனே.. ப்ளீஸ்..!!”

“சரி.. உன் இஷ்டம்..!!”

“தேங்க்ஸ்..!!”

“சரி.. என்ன கேட்க வந்த..??”

“ஹ்ம்ம்.. அ..அது.. நான் சொன்னதை பத்தி ஏதும் யோசிச்சியான்னு கேட்க வந்தேன்..!!”

“என்ன சொன்ன..??”

“ஹையோ.. உன்னை லவ் பண்றேன்னு சொன்னேனேம்மா..??”

“அதுவா..?? ம்ம்ம்ம்.. என்ன சொல்றது.. நானும் லவ் பண்றதுக்கு எவனாவது கெடைக்க மாட்டானான்னுதான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..!!” அவள் அப்படி சொல்ல, அசோக் மிகவும் உற்சாகமானான்.

“ஓ.. இஸ் இட்..?? நீ என்னை லவ் பண்ணலாமே..?? அசோக் ரொம்ப நல்ல பையன் மீரா..!!”

“பாக்கலாம் பாக்கலாம்.. நீ எவ்வளவு தூரம் தாக்கு பிடிக்கிறேன்னு..!!”

“என்னது..????”

“ஐ மீன்.. நீ எவ்வளவு தூரம் நல்லா நடந்துக்குறேன்னு பாக்கலாம் சொன்னேன்..!!”

“கண்டிப்பா ரொம்ப நல்லா நடந்துப்பேன்.. என்னை மாதிரி ஒரு நல்ல பையனை நீ பாத்திருக்கவே மாட்ட..!!”

“ஓஹோ..?? ஓகே ஓகே..!!”

“சரி..!! இப்போ.. நாம கொஞ்சம் நம்மளை பத்தி தெரிஞ்சுக்கலாமா..??”

“எப்படி…??”

“நம்மோட இன்ட்ரஸ்ட்ஸ் ஷேர் பண்ணிக்கலாம்..!!”

1 Comment

Add a Comment
  1. Varakkal thangal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *