எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 4 9

வாங்கி சென்ற ஐட்டங்களை அவளிடம் சென்று கொடுத்தான். அவள் ஆர்வமாக அதை பிரித்து உண்ண ஆரம்பித்தாள். பிஸ்ஸாவை ஒரு கவ்வு.. பரிட்டோவை ஒரு கடி.. கோக்கை ஒரு குடி.. கலந்துகட்டி அடித்தாள்..!! அசோக் அவள் சாப்பிடுவதையே பாஸ்தா மென்றுகொண்டு, பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

“எனக்கும் உன்னை ஞாபகம் இருக்கு..” அவள் அசை போட்டுக்கொண்டே திடீரென சொன்னாள்.

“வாட்..??”

“இல்ல.. நானும் உன்னை இங்க அடிக்கடி பாத்திருக்கேன்.. உன்னை நல்லா எனக்கு ஞாபகம் இருக்குன்னு சொன்னேன்..!!” அவள் அவ்வாறு சொன்னதும், இப்போது அசோக்கிடம் ஒரு திடீர் உற்சாகம்.

“ஓ..!! இஸ் இட்..??” என்று வாயெல்லாம் பல்லாக கேட்டான்.

“ம்ம்..!! நல்ல பையன் மாதிரி இருக்கான்னு தோணும்.. அப்புறம்..”

“ம்ம்..?? அப்புறம்..??”

“நல்லா ஸ்மார்ட்டா இருக்கான்னு தோணும்..!!” சொல்லிவிட்டு அவள் கண்சிமிட்ட, அசோக்குக்கு ஜிவ்வென வானத்தில் பறப்பது மாதிரி இருந்தது.

“நெ..நெஜமாவா சொல்ற..??”

“உனக்கு நம்புறதுக்கே கஷ்டமா இருக்குல..??” அவளுடைய வார்த்தையில் இருந்த குறும்பை உணராமல், அசோக்கும்

“ம்ம்.. யெஸ்..!!!” என்று இளித்தான்.

“பட்.. அதுதான் உண்மை.. நானும் உன்னை சைட் அடிச்சிருக்கேன்..!!”

“ஓ..!!” அசோக் வாயை பிளந்தான்.

“இதுலாம் தப்பு இல்லையா..??”

“ஐயோ.. இதுல என்ன தப்பு இருக்கு..?? நீ சைட் அடிக்க நான் குடுத்து வச்சிருக்கணும்.. நீ எவ்ளோ வேணா என்னை சைட் அடிச்சுக்கோ.. எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல..!!”

“ப்ச்.. நான் அதை சொல்லல..!!”

“அப்புறம்..??”

“யாரு என்னன்னு தெரியாம சைட் அடிக்கிறது என்னவோ சகஜந்தான்.. ஆனா.. என்னை பத்தி எதுவுமே தெரியாம.. என்னை லவ் பண்றேன்னு சொல்றியே..?? அதை கேட்டேன்..!! தப்பு இல்லையா..??”

“எதுவே தெரியாம வர்றதுக்கு பேருதான் காதல்.. எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு வந்தா அதுக்கு பேரு கால்குலேஷன்..!!”

“ஓ..!! இது ஏதோ விக்ரமன் படத்துல வர்ற டயலாக்தான..??”

“ஐயையோ.. இது என்னோட ஒரிஜினல் டயலாக்.. நான் தமிழ்ப்படம் பாக்குறதே இல்ல.. அதுவும் விக்ரமன் படம் பாக்குறதே இல்ல..!!”

“ம்ம்ம்.. அப்போ.. என்னை பத்தி எதுவுமே உனக்கு தெரியவேணாம்.. அப்படியா..??”

“அடடடா.. தெரிஞ்சுக்கனும்பா.. அதுக்காகத்தான இவ்வளவு கஷ்டப்பட்டு பேசிட்டு இருக்கேன்..??”

“ஓ..!! அப்போ.. என்கூட பேசுறது உனக்கு கஷ்டமா இருக்கு.. இல்ல..??”

“ஷ்ஷ்.. என்னால முடியல..!! இப்படி குண்டக்க மண்டக்க கேட்டா.. நான் என்ன சொல்றது..??” அசோக் பரிதாபமாக கேட்க,

“உன்னை பத்தி சொல்லு..!!” அவள் பட்டென சொன்னாள்.

“ஆங்..??”

“மொதல்ல உன்னை பத்தி சொல்லு.. அதுக்கப்புறம் நான் என்னைப் பத்தி சொல்றேன்னு சொன்னேன்..!!”

“என்னை பத்தி சொல்றதுக்கு என்ன இருக்கு..?? பேரு அசோக்.. வயசு இருபத்தஞ்சாகுது.. பொறந்து வளந்ததுலாம் சென்னைதான்.. விஷுவல் கம்யூனிகேஷன் முடிச்சிருக்கேன்.. ஃப்ரண்ட்ஸோட சேர்ந்து ஒரு அட்வர்டைஸிங் பிஸினஸ் பண்றேன்.. ஏதோ கடவுள் புண்ணியத்துல பிஸினஸ் நல்லபடியா போயிட்டு இருக்கு..!!”

“ம்ம்.. அசோக்கா உன் பேரு..?? நைஸ் நேம்..!!”

“ஹ்ஹ.. பிடிச்சிருக்கா..?? ஓகே.. உன் பேரு என்னன்னு தெரிஞ்சுக்கலாமா..??”

“உன் ஃபேமிலி பத்தி சொல்லு.. அப்புறம் சொல்றேன்..!!”

“ஃபேமிலி பத்தியா..?? அப்பா கனரா பேங்ல கரன்சி கவுண்ட் பண்றாரு.. அம்மா வீட்டுலையே கரண்டி உத்தியோகம் பாக்குறாங்க.. தங்கச்சி படிச்சு முடிச்சுட்டு வீட்டுல சும்மா இருக்குறா.. நல்லா சாப்பிடுவா, நல்லா தூங்குவா.. முழிச்சிருக்குறப்போ பாதி நேரம் பாடுவா.. மீதி நேரம் என்கூட சண்டை போடுவா..!! அப்புறம்.. தாத்தா பாட்டி.. ரெண்டு நாய்க்குட்டிங்க.. அவ்ளோதான் என் ஃபேமிலி..!!”

“ம்ம்.. இன்ரஸ்டிங் ஃபேமிலி..!!”

“ம்ம்.. வேற என்ன என்னைப் பத்தி தெரிஞ்சுக்கணும்..??”

“நீ போட்ருக்குற இந்த ஷர்ட்.. என்ன ப்ராண்ட்..??” அவள் திடீரென அவ்வாறு கேட்க,

“லீ..!! ஏன் கேக்குற..??” அசோக் குழப்பத்துடனே பதில் சொன்னான்.

“பேன்ட்..??”

“லீவைஸ்..!!”

“கால்ல போட்ருக்குற ஷூ..??” அவள் சற்றே தலையை சாய்த்து அவனுடைய காலை பார்த்தவாறே கேட்க,

“லீ கூப்பர்..!! ஏன் இதுலாம் கேக்குற..??” அசோக் புருவத்தை நெறித்தான்.

“லீ.. லீ.. லீ..!! எல்லா லீ’ஸ்மே காஸ்ட்லீஸ்.. இல்ல..??”

“ம்ம்..!! ஆமாம்..!!”

“அதுக்காகத்தான் கேட்டேன்..!!” அவள் சொன்னதை அசோக்கால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

“புரியல.. கொஞ்சம் எக்ஸ்ப்ளயின் பண்றியா…??”

“உனக்கு இப்போ எக்ஸ்ப்ளயின் பண்ணனுமா..?? இல்ல என்னை பத்தி சொல்லனுமா..??” அவள் அவ்வாறு கேட்கவும், அசோக் சற்றே குழம்பினான்.

“ச..சரி.. உன்னை பத்தி சொல்லு..!! உன் பேர் என்ன..??”

“ம்ம்ம்… மிர்ச்சி..!!” அவள் சொல்ல, அசோக் மெலிதாக அதிர்ந்தான்.

“மிர்ச்சியா..???? அப்டிலாமா பேர் வைப்பாங்க..??”

1 Comment

Add a Comment
  1. Varakkal thangal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *