எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 4 9

அசோக்கின் நண்பர்கள் அன்று முழுக்க செம குஷியில் இருந்தார்கள்..!! ‘மாட்டுனான்டா ஒரு மானஸ்தன்’ என்பது மாதிரியான குஷி..!! அன்று முழுதும் அந்த செருப்பு மேட்டரை சொல்லியே, அசோக்குக்கு வெறுப்பு மேல் வெறுப்பு ஏற்றினார்கள்..!! ‘கூந்தல் கருப்பு.. குங்குமம் சிகப்பு..’ பாடலை ரீமிக்ஸ் செய்து பாடி.. கடுப்பு மேல் கடுப்பு கூட்டினார்கள்..!! சாலமன் பாட..

“டி-ஷர்ட்டு கருப்பு..!!”

“ஆஹா..!!” வேணு ஒத்து ஊதினான்.

“அவ கையில செருப்பு..!!”

“ஓஹோ..!!”

“அடங்கிப்போச்சு.. பையன் கொழுப்பு..!!”

“ஓஹொஹோஹஹோ.. ஹோஹஹஹொஹோ..!!”

“ஹாஹாஹாஹாஹாஹா..!!”

கிஷோர் மட்டும் கிண்டலில் கலந்து கொள்ளாமல் சிரிக்க மாத்திரம் செய்தான். அன்று அவர்கள் காட்டில் அடைமழை என்பதை உணர்ந்து கொண்ட அசோக்கும், அமைதி காப்பதே நலம் என்று முறைப்போடு மட்டும் நிறுத்திக் கொண்டான். வாய் திறந்து வார்த்தைகள் எதுவும் சிந்தவில்லை. அசோக்கின் அமைதி அவர்களுக்கு மேலும் உற்சாகத்தையே தந்தது. சீண்டலும் கேலியும் தொடர்ந்தன.

அத்தனை எரிச்சலிலும்.. கிஷோர் கிண்டல் செய்யாமலிருந்தது.. அசோக்குக்கு ஒரு சிறு நிம்மதியை தந்திருந்தது..!! ஆனால்.. அன்று மாலை அவன் வீட்டுக்கு சென்றபோது.. அந்த சிறு நிம்மதியும் சீட்டுக்கட்டு கோபுரமாய் சரிந்து போனது..!! ‘அமைதியா இருக்கான் பாரு.. அவன்தான்டா என் நண்பன்..’ என்று கிஷோரை பற்றி நினைத்திருந்தான்..!! அப்புறந்தான் தெரிந்தது அவன் ஆப்பை வேறிடத்தில் வைத்திருக்கிறான் என்று..!!

“ஏண்டா.. ஒரு பொண்ணைப்பாத்து.. அவ கண்ணு அழகா இருக்கு, காது அழகா இருக்குன்னு சொல்லலாம்.. சிரிப்பு கூட அழகா இருக்குன்னு சொல்லிருக்கலாம்..!! போயும் போயும் அவ செருப்பு அழகா இருக்குன்னு சொன்னியாம்.. அவளும் செருப்பை கழட்டி ‘யா.. லுக் அட் மை ப்யூட்டிஃபுல் செப்பல்..’னு உன் மூஞ்சிக்கு முன்னாடி நீட்டுனாளாம்..??”

சங்கீதா சிரிப்பை அடக்கிக்கொண்டே கிண்டலாக கேட்டபோது.. அசோக்குக்கு அவள் மீது கோவம் வந்தது என்றால்.. கிஷோர் மீது கொலைவெறியே வந்தது..!! சங்கீதாவுக்கு தன் மீதிருந்த வெறுப்பை மறக்கடிக்கவே.. கிஷோர் அந்த செருப்புக்கதையை உபயோகித்திருக்கிறான் என்று புரிந்து கொண்டான்..!! தங்கையை சில வினாடிகள் முறைப்பாக பார்த்தவன்,

“ஒன்னு சேந்துட்டிங்களாக்கும்..??” என்றான் கடுப்பாக.

“ம்ம்… யெஸ்..!!” சங்கி இமைகள் மூடி, சைனீஸ் பொம்மை போல் தலையாட்டினாள்.

“ஹ்ம்ம்..!! இந்த செருப்பு மேட்டர்லாம் உன்னோட வச்சுக்கோ சங்கு.. டாடிட்டயோ மம்மிட்டயோ சொல்லிட்டு இருக்காத.. புரியுதா..??” கெத்தான குரலிலேயே கெஞ்சினான் அசோக்.

“ம்ம்ம்…!! அது.. அந்த பயம் இருக்கணும்..!!”

1 Comment

Add a Comment
  1. Varakkal thangal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *