எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 1 37

பரந்தாமன் குறிப்பிட்ட மாதிரி ‘பாலாஜி அட்வர்டைசிங்’ ஒரு புளியங்கொம்பு..!! விளம்பர உலகில் பழம் தின்று கொட்டை போட்ட நிறுவனம். பல முன்னணி நிறுவனங்களும், மாடல்களும் அவர்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்கள். ‘பாலாஜி அட்வர்டைசிங்’குக்கு பெரிய அளவு பட்ஜட்டுகளுடனான காண்ட்ராக்ட்கள் வந்து குவிந்தாலும், சில சின்ன பட்ஜெட் ப்ராஜக்டுகளும் வரும். தொழில் நோக்கோடு பார்க்கையில் சில ப்ராஜக்டுகளை அவர்களால் தவிர்க்க இயலாது. ஒத்துக் கொள்வார்கள். ஆனால்.. அந்த மாதிரி ஒப்பந்தங்களுக்கு அசோக்கின் கம்பனியை உபயோகப்படுத்திக் கொள்வார்கள். அதுவும் முழு வேலையையும் தராமல் ‘பிச்சு பிச்சு’ தருவார்கள்..!!

அசோக்கின் கம்பனி செய்யும் வேலைகள் என்றால்.. வெள்ளை வேஷ்டி கட்டிக்கொண்டு சரத்குமாரோ, சாய்குமாரோ.. வாயெல்லாம் பல்லாக குறுக்கும் மறுக்கும் நடப்பதை.. டிஜிட்டல் கேமராவில் ஷூட் செய்ய வேண்டும்.. ஷூட் செய்ததை தங்கள் லேபுக்கு கொண்டுவந்து, க்ளையன்ட் குறிப்பிட்ட நொடிகளுக்கு மிகாமலும், குறையாமலும் எடிட் செய்ய வேண்டும்.. சரத்குமார், சாய்குமாரின் வேஷ்டி சட்டைகளுக்கும், பளிச்சிடும் பற்களுக்கும்.. விஷுவல் எஃபக்ட்ஸ் கொடுத்து.. அதன் வெண்மையை, கண்ணைப்பறிக்கும் வகையில் என்ஹான்ஸ் செய்யவேண்டும்.. ‘சல்யூட்.. ராம்ராஜுக்கு.. சல்யூட்..!!’ என்பது மாதிரியான ஜிங்கில்களை, வீடியோவுடன் பொருத்தமாக மிக்ஸ் செய்யவேண்டும்.. வீடியோவின் இறுதி வடிவத்தை, ஒரு டிஸ்கிலோ, சிப்பிலோ போட்டு.. ‘பாலாஜி அட்வர்டைசிங்’குக்கு டெலிவர் செய்ய வேண்டும்..!!

பரந்தாமனின் BP’யை எகிற வைத்து வேடிக்கை பார்த்த அசோக், மீண்டும் ஆபீசுக்கு வந்து சேர அரை மணி நேரம் ஆனது. ஆபீசில் கிஷோர் மட்டும் இல்லை. ‘நாளைக்கு ஷூட்டிங் இருக்கு..’ என்று நேற்றே அசோக்கிடம் சொல்லியிருந்தான். அசோக் உள்ளே நுழைந்தபோது, மீதி நான்கு பேரும் எடிட்டிங் ரூமில் அமர்ந்திருந்தார்கள். சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பெரிய ஸ்க்ரீன்களில் ஒன்றில், ரிலீஸ் ஆகி இரண்டு மாதங்கள் ஆகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் ஒரு சினிமா ஓடிக்கொண்டிருந்தது. ஹீரோவும், ஹீரோயினும் கிளிசரின் அப்பிய கண்களுடன் நாதழதழக்க வசனம் பேசிக்கொண்டிருக்க.. இவர்கள் நான்கு பேரும் நாற்காலியில் அமர்ந்து, வாயைப் பிளந்து வைத்தவாறு.. அசோக் வந்ததைக்கூட கவனிக்காமல், திரையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்..!!

‘ப்ளீஸ் ப்ரியா.. என்னை விட்டு போயிடாத.. ப்ளீஸ்.. நீ இல்லனா, அப்புறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன்..!!’

‘ப்ளீஸ் ஷிவா.. நான் போய்த்தான் ஆகணும்.. என்னை புரிஞ்சுக்கோ ப்ளீஸ்..!!’

‘இல்ல.. நான் உன்னை போக விடமாட்டேன்..!! நீ எனக்கு வேணும் ப்ரியா.. என் லைஃப் புல்லா நீ எனக்கு வேணும்..!!’

‘ப்ளீஸ் ஷிவா..!! கையை விடு ப்ளீஸ்.. நான் போகணும்..!!”

‘போ ப்ரியா.. போ..!! ஆனா.. போறதுக்கு முன்னாடி எனக்கும், என் காதலுக்கும் ஒரு முடிவு சொல்லிட்டு போ..!!’

‘என்ன முடிவு சொல்ல சொல்ற என்னை..??’

‘எதுக்கு என் லைஃப்ல வந்த..?? எதுக்கு எங்கிட்ட சிரிச்சு சிரிச்சு பழகின..?? காதல்னா என்னன்னே தெரியாம.. நான் சந்தோஷமா சுத்திட்டு இருந்தேன்.. ஏன் என் மனசுல காதல்ன்ற ஆசையை வளர்த்த..?? கனவுல மிதக்க வச்ச..?? இப்போ எல்லாத்தையும் கைகழுவிட்டு போற..?? எப்படி ப்ரியா.. எப்படி உனக்கு மனசு வந்தது.. சொல்லு ப்ரியா..!!’

‘ஷிவா ப்ளீஸ்.. வார்த்தையால என்னை கொல்லாத..!! நீ இப்படி கண்ணீர் வடிச்சுக்கிட்டு எங்கிட்ட கெஞ்சுறதை நெனச்சா.. எனக்கு இதயமே வெடிச்சிடும் போல இருக்கு..!! அழாத ஷிவா.. ப்ளீஸ்.. அழாத..!!’

Updated: June 3, 2021 — 3:03 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *