எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 1 192

“இல்ல ஸார்.. இதை அப்படி சொல்ல முடியாது.. நான் ஒன்னும் தகுதி இல்லாம ஆசைப்படல.. பெரிய ஸ்க்ரீன்ல கண்டிப்பா ஜெயிக்கமுடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..!! உண்மையை சொல்லப்போனா.. ஒன் இயர் முன்னாடி வரை எனக்கு சினி இண்டஸ்ட்ரி மேல எந்த ஈடுபாடும் இல்லாமத்தான் இருந்தது..!!”

“ஓ.. அப்புறம் எப்படி திடீர்னு..??”

“ஆக்சுவலா.. ஒன் இயர் முன்னாடி.. எங்க க்ளையன்ட் ஒருத்தருக்காக நான் ஒரு கான்சப்ட் சொன்னேன்.. அதை அவங்க ரிஜக்ட் பண்ணிட்டாங்க.. இருந்தாலும் எனக்கு அந்த கான்சப்ட் பிடிச்சிருந்ததால.. ஒரு செல்ஃப் இன்ட்ரஸ்ட்ல, அந்த கான்சப்டை ஷார்ட் ஃபில்மா ஷூட் பண்ணிணேன்.. யூட்யூப்ல அப்லோட் பண்ணினேன்.. நெறைய பேர் நல்லாருக்குன்னு சொன்னாங்க.. அதுல இருந்துதான் எனக்கு மூவிஸ் மேல இன்ட்ரஸ்ட் வர ஆரம்பிச்சது..!! அதுக்கப்புறம் நானே நெறைய கான்சப்ட்ஸ் யோசிக்க ஆரம்பிச்சேன்.. அப்பப்போ அதை ஷார்ட் ஃபில்ம்ஸா எடுத்து யூட்யூப்ல அப்லோட் பண்ணுவேன்.. எல்லாத்துக்குமே செம ரெஸ்பான்ஸ்..!! இதுவரை அஞ்சு ஷார்ட் ஃபில்ம்ஸ் எடுத்திருக்குறேன்.. அந்த ஷார்ட் ஃபில்ம்ஸ்லாம் பாத்தீங்கன்னா, என்னோட கனவுல ஒரு நியாயம் இருக்குன்னு உங்களுக்கே புரியும்..!! ப்ளீஸ் ஸார்.. ஒரு அஞ்சு நிமிஷம்.. அந்த டிவிடி கொஞ்சம் பாருங்களேன்..!!” அசோக்கின் குரலில் மெலிதான கெஞ்சல் ஒளிந்திருந்தது.

“ஹாஹா.. இதைப்பாத்து நான் என்ன தம்பி பண்ணப் போறேன்..?? என்னை பொறுத்தவரை ஷார்ட் ஃபில்ம்ஸ் வேற.. சினிமா வேற..!! எனக்கு இந்த பாஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ், ராசியான ஆர்டிஸ்ட், இமேஜ், பொடலங்கா, கத்தரிக்கா.. இதுலலாம் நம்பிக்கை இல்ல தம்பி..!! நான் அறிமுகப்படுத்தின ரெண்டு டைரக்டரும் புதுப்பசங்கதான்.. உங்கள மாதிரி சினிமால எந்த அனுபவும் இல்லாதவங்கதான்..!!”

“ம்ம்.. தெரியும் ஸார்.. அதான் நானும் ஒரு நம்பிக்கையோட வந்திருக்கேன்..!!”

“எனக்கு சப்ஜக்ட்தான் தம்பி முக்கியம்.. எந்த மாதிரி ஸ்டோரி வச்சிருக்கீங்க, எந்த மாதிரி புதுபுது ஐடியாஸ் வச்சிருக்கீங்க.. அதுதான் எனக்கு முக்கியம்..!! டெக்னாலாஜி பத்தி நீங்க ஒன்னும் வொர்ரி பண்ணிக்க தேவை இல்ல.. அதுக்கெல்லாம் ஆள் வச்சுக்கலாம்..!! சப்ஜக்ட் பத்தி சொல்லுங்க தம்பி.. நீங்க சொல்ற ஸ்டோரி எனக்கு பிடிச்சிருந்தா.. கண்டிப்பா உங்களை வச்சு படம் எடுக்குறேன்..!!”

பரந்தாமன் அப்படி சொன்னதும், கொஞ்ச நேரமாக தளர்ந்து போயிருந்த அசோக் இப்போது மீண்டும் உற்சாகமானான். முதுகில் யாரோ குத்தியது மாதிரி நிமிர்ந்து அமர்ந்தான். லேசாக தொண்டையை செருமிக்கொண்டு, கொஞ்சமாய் எச்சில் கூட்டி விழுங்கிக்கொண்டு, மெல்ல ஆரம்பித்தான்.

“இ..இது.. இது ஒரு ஹாரர் த்ரில்லர் சப்ஜக்ட் ஸார்..!! ஒரு மலையடிவாரத்துல இருக்குற கிராமத்துல நடக்குற மாதிரிதான் இந்தக்கதையை நான் யோசிச்சு வச்சிருக்கேன்..!! ஒரு ரெய்னி ஸீசன்ல.. சுத்தி பச்சை பசேல்னு மரமும், செடியுமா.. எந்த நேரமும் மழையும், இடியுமா.. ஒரு அழகான, அமானுஷ்யமான பேக்ட்ராப்ல.. அடுத்தடுத்து சில கோரமான சாவுகள் நடக்குது.. அந்த சாவுகளுக்கு பின்னாடி இருக்குற ஷாக்கிங் மிஸ்ட்ரியை சொல்றதுதான் இந்தக்கதை..!! தங்களோட பூர்வீக பங்களாவை விக்கிறதுக்காக, அந்த கிராமத்துக்கு வர்ற ஹீரோ அண்ட் ஹீரோயினோட வியூலதான் மொத்த கதையும் நகருது.. ஒரு ஸ்டேஜ்ல, அங்க நடக்குற மர்மமான சம்பவங்களுக்கும் தங்களுக்கும் ஒரு லிங்க் இருக்குன்னு.. அவங்களுக்கு தெரியவருது.. உண்மை என்னன்னு கண்டுபிடிக்க ரெண்டு பேரும் ட்ரை பண்றாங்க..!! அந்த உண்மை என்ன.. அதை எப்படி கண்டுபிடிச்சாங்க.. அதுக்கப்புறம் அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு சொல்றதுதான் மீதி கதை..!!”

கதைச்சுருக்கத்தை முதலில் சொல்லி அவரை தயார் படுத்தி விட்டதாக எண்ணிய அசோக், அடுத்து ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு காட்சியாக அவருக்கு நெரேட் செய்ய நினைத்தான். முதல் காட்சியை அவனுடைய மனக்கண்ணில் நிறுத்தி, அதை அவருக்கு உரைக்க முற்பட்டான்.

“படம் ஆரம்பிக்கிறப்போவே ரொம்ப த்ரில்லிங்கா ஷாக்கிங்கா ஆரம்பிக்கிறோம் ஸார்.. ஃபர்ஸ்ட் ஸீன்லயே..” அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவனை இடைமறித்து,

Updated: June 3, 2021 — 3:03 am