எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 1 37

“மச்சி.. இதுலாம் உனக்கு புரியாது.. நீயும் ஒரு பொண்ணை லவ் பண்ணினாத்தான்.. எங்கபக்கம் இருக்குற நியாயத்தை உன்னால புரிஞ்சுக்க முடியும்..!! பண்ணிப்பாருடா.. எங்க கஷ்டம் உனக்கும் புரியும்..!!”

“ஹாஹா.. நான்லாம் லவ் பண்ணினேன்னா.. உங்களை மாதிரி பண்ண மாட்டேன் மச்சி..!!”

“அப்புறம்..??”

“வேற.. வேற.. வேற மாதிரி பண்ணுவேன்..!!” விஜய் மாதிரி அசோக் ஸ்டைலாக சொன்னான்.

அதற்குமேல் அவனிடம் என்ன பேசுவது என்றே புரியாமல், மற்றவர்கள் அமைதியாகினர். கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்த அசோக், அப்புறம் அவனே ஆரம்பித்தான்.

“சரி.. அந்தக்கதைலாம் அப்புறம் பேசிக்கலாம்..!! தண்ணியடிக்க போலாமா இன்னைக்கு.. நான் ட்ரீட் தர்றேன்..!!”

“என்னடா மச்சி திடீர்னு..??”

“இன்னைக்கு என் பர்த்டேடா..!!” அசோக் கூலாக சொல்ல, எல்லோர் முகத்திலும் இப்போது திடீர் மலர்ச்சி.

“டேய்.. என்னடா நீ.. இவ்ளோ சாதாரணமா சொல்லிட்டு இருக்குற..?? ஹேப்பி பர்த்டேடா மச்சி..!!!!” எல்லோரும் அவனுடைய கையை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.

“ஹ்ம்ம்.. பர்த்டேயும் அதுவுமா.. ஒரு புல்டாக்கு என்னை டென்ஷன் பண்ணிட்டான் மச்சி..!!”

“ஹேய்.. நான் என்னடா பண்ணினேன்..??” கிஷோர் அவசரமாக, பரிதாபமாக கேட்க,

“உன்னை சொல்லலடா.. அந்த பரந்தாமன் டாகை சொன்னேன்..!! செம டென்ஷன்.. இன்னைக்கு கண்டிப்பா தண்ணி போட்டே ஆகணும்..!!”

“ஏய்.. இப்படி திடீர்னு சொன்னா எப்படிடா..??” வேணு சலித்துக் கொண்டான்.

“ஏன்.. உன் ஆளுட்ட பெர்மிஷன் கேக்கணுமா..??”

“ம்ம்..!!”

“போ போ.. போய் கேளு போ..!!”

அசோக் சொன்னதும், வேணு செல்போனை எடுத்துக்கொண்டு கிளம்பினான். இப்போது கிஷோரும் தனது செல்போனை எடுக்க,

“ஏய்.. என்னடா.. நீயும் பாத்ரூம் போறதுக்குலாம் அவகிட்ட பெர்மிஷன் கேட்க ஆரம்பிச்சுட்டியா..??”

“ஹிஹி.. பாத்ரூம் போறதுக்கு தேவை இல்ல மச்சி.. பாருக்கு போறதுன்னா.. சொல்லிட்டுத்தான் போகணும் மச்சி..!!”

இளிப்புடன் சொல்லிவிட்டு செல்கிற கிஷோரையே அசோக் எரிச்சலாக பார்த்தான். இப்போது சாலமனும் செல்போனை எடுத்துக்கொண்டு கிளம்ப, அசோக் உச்சபட்ச கடுப்பானான்.

“டேய்.. அவனுகதான் லவ் பண்ற பொண்ணுககிட்ட பெர்மிஷன் கேக்க போறானுக..?? நீ எங்க போற.. உனக்குத்தான் பிரேக்கப் ஆயிடுச்சுல..??”

“இல்ல மச்சி.. எதுக்கும் கேட்டு வைக்கிறேன்.. ப்யூச்சர்ல யூஸ் ஆனாலும் ஆகலாம்டா..!!” சாலமன் பாவமாக சொன்னான்.

“அடப்பாவி..!!!!”

“அவ வேணா.. ஒரு நல்ல காதலியா இல்லாம இருக்கலாம் மச்சி.. ஆனா.. நான் நல்ல காதலன் மச்சி.. நான் நல்ல காதலன்..!!” அழுகிற குரலில் சாலமன் சொல்ல,

“கிழிஞ்சது..!! போடா.. போய்த்தொலைடா..!!” என்று தலையில் அடித்துக் கொண்டான்.

அப்புறம் அவர்கள் ஆளாளுக்கு பெர்மிஷன் கேட்டு திரும்பும் வரை, அசோக் கடுப்புடன் காத்திருந்தான். பிறகு எல்லோரும் ஆபீஸுக்கு தாழிட்டு கிளம்பினார்கள் அருகிலேயே இருக்கும் ஒரு பாருக்கு சென்று, இஷ்டம்போல் மது அருந்தினார்கள். திரவ உணவு அருந்திவிட்டு.. திட உணவும் அருந்த நினைத்தார்கள். அவர்கள் எப்போதும் மதிய உணவு அருந்துகிற ஃபுட் கோர்ட்டிற்கு, இரவு உணவு அருந்த வந்து சேர்ந்தார்கள். அவரவருக்கு பிடித்த ஐட்டங்களை ஆர்டர் செய்து வாங்கிக்கொண்டு, மூலையில் கிடந்த டேபிள் ஒன்றை ஆக்கிரமித்துக்கொண்டு, ஆர்டர் செய்த ஐட்டங்களை வயிற்றுக்குள் அனுப்ப ஆரம்பித்தனர்.

எல்லோரும் நல்ல போதையில் இருந்தனர். பேச்சு எங்கெங்கோ சென்று சுற்றி மீண்டும் காதலில் வந்து அமர்ந்தது. அப்போதுதான் சாலமன் அசோக்கிடம் மெல்ல கேட்டான்.

“நீ ஏன் மச்சி யாரையாவது லவ் பண்ணக்கூடாது..??”

“என்னடா நீங்க.. ஆளாளுக்கு லவ் பண்ணு லவ் பண்ணுன்னு சொல்றீங்க.. திடீர்னு நான் யாரைப்போய் லவ் பண்றது..?? லவ் பண்றதுக்கு பொண்ணு வேணாமா..?? அதுவும் எனக்கு பிடிச்ச மாதிரி பொண்ணா இருக்கணும்..??”

Updated: June 3, 2021 — 3:03 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *