எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 1 37

அசோக் கூலாக சொல்லிவிட்டு, மெமரி ஸ்டிக்குடன் தன் அறைக்குள் புகுந்து கொண்டான். சற்றுமுன் கிஷோரை அவன் திட்டியதுபோல, இப்போது எல்லோரும் அவனை கேவலமாக திட்டினார்கள். ஆனால் அந்த திட்டெல்லாம் கண்ணாடி தடுப்பை கடந்து சென்று, அவன் காதில் விழ தவறின.

கிஷோர் ஆபீஸை அடைந்தபோது இரவு ஏழு மணி ஆகி இருந்தது. அவன் வந்தபோது நண்பர்கள் மூவரும் கண்ணாடி அறைக்குள் அமர்ந்து பிசினஸ் (?????) பேசிக்கொண்டிருந்தனர். அவசரமாக கதவை திறந்து உள்ளே நுழைந்த கிஷோர், நுழைந்ததுமே அசோக்கை பார்த்து ஆத்திரமாக கத்தினான்.

“ஏண்டா வெளக்கெண்ணை.. என்னடா பண்ணுன அந்த ஆளை..??”

“எந்த ஆளை..??” அசோக் தாழ்வான குரலில் பம்மினான்.

“நடிக்காத..!! அந்த பரந்தாமனை..??”

“அந்த ஆளை நான் என்ன பண்ணுனேன்.. நான்லாம் ஒன்னும் பண்ணல..!!”

“ப்ச்.. அப்புறம் ஏன் அந்த ஆளு எனக்கு ஃபோன் பண்ணி.. வண்டை வண்டையா திட்டுறான்..??”

“வண்டை வண்டையாவா..??”

“ஆமாம்..!!”

“என்னைய விடவா..??”

“ஆமாண்டா வெண்ணை..!!”

“சரி விடு.. ஏதோ கோவத்துல திட்டிருப்பான்.. சின்னப்பய.. மன்னிச்சு வுட்று..!!”

“மன்னிச்சு வுட்றவா..?? எவ்ளோ கூலா சொல்றான் பாரேன்.. திட்டு வாங்கினது நான்டா..!! சினி ஃபீல்ட்ல ஒரு காண்டாக்ட் புடிக்கிறதுக்கு, நான் எவ்ளோ கஷ்டப்படுறேன் தெரியுமாடா..?? நீ என்னடான்னா.. காலித்தனமா அந்த காண்டாக்டை காலி பண்ணிட்டு வந்திருக்குற..??”

“விட்ரா.. அந்த ஆளு காண்டாக்ட் இருக்குறது ஒண்ணுதான்.. இல்லாததும் ஒண்ணுதான்..!! அந்த மசுரு ஒன்லி லவ் சப்ஜக்ட்தான் எடுப்பாராம்.. திரில்லர்லாம் எடுக்க மாட்டாராம்..!! லவ் ஸ்டோரி சொல்லு.. லவ் ஸ்டோரி சொல்லுன்னு.. கொஞ்ச நேரம் என் உசுரை வாங்கிட்டான்..!! நல்ல ஆள்ட்ட கதை சொல்ல அனுப்பி விட்டடா என்னை நீ..!!”

“ஏய்.. அந்த ஆளு கேட்டதுல என்ன தப்பு..?? உன்கிட்ட லவ் ஸ்டோரி இருந்தா சொல்லிருக்கணும்.. இல்லனா மூடிட்டு வந்திருக்கணும்..!! எதுக்கு தேவை இல்லாம அந்த ஆள் பொண்ணை பத்திலாம் தப்பா சொன்ன..??”

“ப்ச்.. நான்லாம் அந்த பொண்ணை பத்தி எதுவும் தப்பா சொல்லல.. அந்த ஆளுதான் பெத்த பொண்ணுன்னு கூட நெனைப்பு இல்லாம.. திருட்டு சிறுக்கின்னு கேவலமா திட்டுனான்..!! நான் டீசண்டா ஒரு பொய் சொன்னேன்.. அவ்ளோதான்..!!”

Updated: June 3, 2021 — 3:03 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *