எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 1 37

‘அப்போ என்னை விட்டு போகாத.. என்கூடவே இருந்துடு..!!’

‘அது என்னால முடியாது..!!’

‘அப்போ நீயே உன் கையால என்னை கொன்னுட்டு போயிடு..!!’

‘ஐயோ கடவுளே..!! என்னை ஏன் இப்படி சித்திரவதை செய்ற..?? எனக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது..!!’

ஹீரோயின் வானத்தை பார்த்து அலறினாள். அதற்கு மேலும் பொறுமை இல்லாத அசோக்,

“என்ன எழவெடுத்த படம்டா இது..??” என்று சப்தம் எழுப்பினான். உடனே நான்கு பேரும் திரையை விட்டு திரும்பி, இவனை பார்த்தனர். சாலமன் அசோக்குக்கு பதில் சொன்னான்.

“காதல் உல்லாசம்னு ஒரு புதுப்படம் மச்சி..!!” என்று இளிப்புடன் சொன்னான்.

“காதலு..?? உல்லாசமா..?? அப்புறம் ஏன் ‘ஓ’ன்னு ஒப்பாரி வச்சுட்டு கெடக்குறாய்ங்க..??”

அசோக் கிண்டலாக கேட்க, சாலமன் மட்டும் இல்லாமல் மற்றவர்களும் இப்போது பட்டென சிந்தனையில் மூழ்கினர். ‘ஆமாம்ல.. ஏன்..??’ என்பது மாதிரி பரிதாபமாக தலையை சொறிந்து கொண்டனர். சில வினாடிகள் சொறிந்தும் பதில் ஏதும் கிடைக்கவில்லை. அப்புறம் சாலமன்தான் முதலில் சுதாரித்துக் கொண்டு,

“அடப்போடா.. ஏடாகூடமா ஏதாவது கேட்டுக்கிட்டு..??” என்று சலிப்பாக சொன்னவாறு திரும்பி திரையை பார்க்க ஆரம்பித்தான். அவனோடு சேர்ந்து மற்றவர்களும்..!!

“ஹ்ம்ம்.. பதில் சொல்ல முடியாது.. எனக்கு தெரியும்..!! இப்படித்தான் எல்லாப்பயலும் என்ன எழவுனே தெரியாம, நானும் லவ் பண்றேன்னு, பண்ணிட்டு திரியிறாய்ங்க..!!”

“ஏய்.. போடா போடா.. இவரு பெருசா நாலு லவ்வு, ஏழு மேரேஜ் பண்ணுனவரு.. நமக்கு அட்வைஸ் சொல்றாரு.. போடா டம்மி பீஸு..!!” – இது வேணு

“போங்கடா.. உங்களை மாதிரிலாம் லவ் பண்றதுக்கு.. லவ் பண்ணாமலேயே இருக்கலாம்..!!”

“இருந்துக்கோ.. உன்னை யார் இப்போ லவ் பண்ண சொல்லி கெஞ்சுனது..??”

“ம்க்கும்..!! சரி.. அது கெடக்கட்டும்..!! ஆபீஸ் நேரத்துல.. இப்படி மொக்கைப்படம் பாத்துட்டு உக்காந்து இருக்கீங்களே.. வேலை எதுவும் இல்லையா..??”

“ஆமாம்.. பெரிய ஏவிஎம் ஸ்டுடியோ நடத்துறோம்.. வேலைலாம் கரெக்ட் டயத்துக்கு நடந்துடனும்.. போடா.. எல்லாம் நைட்டு பாத்துக்கலாம்..!!”

வேணுவின் பதிலில் அசோக் கடுப்பானான். சில வினாடிகள் அவர்களுடைய முதுகையே வெறுப்பாக பார்த்தான். அப்புறம் விறுவிறுவென நடந்து சிஸ்டத்தை நோக்கி சென்றான். அதில் செருகப்பட்டிருந்த மெமரி ஸ்டிக்கை படக்கென பிடுங்க, ஒளிர்ந்து கொண்டிருந்த ஸ்க்ரீன் இப்போது இருட்டானது. படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பட்டென டென்ஷன் ஆனார்கள்.

“ப்ச்.. டேய்.. மடக்..!! ஏண்டா இப்ப அதை எடுத்த.. பாத்துட்டு இருக்கோம்ல.. போடுடா..!!” – வேணு கோவமாக சொன்னான்.

“மச்சி.. க்ளைமாக்ஸ்டா.. இன்னும் கொஞ்ச நேரந்தான்.. ஸ்டிக்கை குடுடா.. ப்ளீஸ்..!!” – சாலமன் பாவமாக கேட்டான்.

“ஆமாண்ணா.. ப்ளீஸ்ண்ணா..!!” இரண்டு அல்லக்கை பசங்களும் கோரசாக கெஞ்சினார்கள்.

“போங்கடா.. போய் வேலையை பாருங்க போங்க..!!”

Updated: June 3, 2021 — 3:03 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *