ஹூ ஆம் ஐ – Part 1 203

“டேய் பசங்களா, இங்கே மிச்ச காலேஜ் மாதிரி வருஷம் முழுக்க ராகிங் எல்லாம் பண்ண மாட்டோம். இன்னைக்கு ஒரு நாள் மட்டும் சும்மா ஜாலிக்கு உங்களை வெல்கம் பண்ண மட்டும் தான் இது. ராகிங் ஏதும் இல்லைன்னு சீனியரை எவனாச்சும் மதிக்கல அப்படினா சும்மா விட மாட்டோம்”

அப்போது மாடியில் இருந்த சீனியர்கள் அனைவரும் கீழே நின்று கொண்டு இருந்த எங்கள் மீது குளிர்ந்த நீரை கொட்டினர். அதன் பிறகு தூக்கமே போய்விட மீண்டும் ரூமிற்கு வந்து தூங்குவதற்குள் விடிந்து இருந்தது.

அரைகுறை தூக்கத்துடனே முதல் நாள் வகுப்பிற்கு சென்று வந்தேன். அம்மா சொன்னது போல் கருகருவென்று இருந்த எனது தலைமுடியை மட்டும் இல்லை ஆறடியில் இருந்த என்னையும் பார்த்தும் எவளும் மயங்கவும் இல்லை என்னிடம் கண்டுகொள்ளவும் இல்லை. அம்மா சொன்னதை நினைத்து பார்க்கும் போது சிரிப்பு தான் வந்தது. முதல் நாள் என்பதால் வகுப்புகள் ஒன்றும் பெரிதாக நடக்க வில்லை.

கல்லூரி முடிந்து ஹாஸ்டல் வந்த போது காலியாக இருந்த இன்னொரு பெட்டில் பாக் இருந்தது.

பாத்ரூமில் இருந்து முகத்தை துடைத்து கொண்டே வெளியே வந்தான் என்னுடைய ரூம் மேட்.

“ஹாய், ஐ அம் கார்த்திக்” கையை நீட்டினான்.

“அருண்”

“நான் கோயம்புத்தூர், நீ”

“நான் மதுரை பக்கத்தில ஒரு வில்லேஜ்”

“இங்கே படிக்கிறது எல்லாம் எல்லாம் பெரிய பணக்கார பசங்க அதனாலே ஓவரா சீன் போடுவாங்க அதனால வில்லேஜ்னு எல்லாம் சொல்லாதே அப்புறம் மதிக்கவே மாட்டானுங்க”

“ஹ்ம்ம்ம் சரி”

“நான் உன்னை ஒன்னும் தப்பா நினைக்க மாட்டேன் ஏன்னா நானும் வில்லேஜ் தான், எங்க அப்பன் என்னை கோயம்புத்தூர்ல ஹாஸ்டல்ல சேர்த்து விட்டான், அதுல கொஞ்சம் இப்படி சிட்டி பசங்க மாதிரி மாறியாச்சு”

“ஆமா கார்த்திக், நீ எந்த டிபார்மென்ட்”

“மெக்கானிக்கல், நீ”

“கம்ப்யூட்டர் சயன்ஸ்”

“மச்சகாரன்டா நீ. வழக்கத்தை விட இந்த வருஷம் நெறய பிகர் இருக்குன்னு எல்லாரும் பேசிக்கிட்டாங்க. என்ன உன்னோட டேஸ்டுக்கு ஏதாச்சும் இருக்கா”

“பசங்களே என்னை கண்டுக்கல இதுல பொண்ணுங்க எப்படி”

“இவங்க எல்லாம் ஆளு போடுற டிரஸ், ஷூ எல்லாம் பார்த்து பழகுற பசங்க. என்னோட பாண்ட் சர்ட் எல்லாம் உனக்கு எப்போ வேணும்னாலும் எடுத்து போட்டுக்கோ. ஜட்டி மட்டும் வேண்டாம் மச்சி” சிரித்தான்.

“ஹாஹாஹா தேங்க்ஸ்”

“ஆமா நேத்து ராத்திரி தூங்கவே விட்டு இருக்க மாட்டானுங்களே”

“ஆமா, ஆமா ஜட்டியோட நிக்க வச்சி எல்லார் தலை மேலேயும் ஜில்லுன்னு தண்ணிய ஊத்திட்டானுங்க”

“இங்கே முதல் நாள் ராத்திரி ஜட்டியோட நிக்க வைப்பானுங்க அப்படின்னு தெரியும், அதனாலே தான் நான் டைரெக்டா காலேஜ் வந்துட்டு இப்போ தான் ஹாஸ்டல் வந்தேன்”

“உனக்கு எப்படி தெரியும் இதெல்லாம்”

2 Comments

    1. Radha mail ku reply

Comments are closed.