மூன்று தினம் 1 146

என் வேலையை முடித்துவிட்டு இரவினில் மக்கள் அதிகம் நடமாடும் அந்த முக்கிய சாலையில் வண்டியில் மிதமான வேகத்தில் வந்துக் கொண்டிருந்தேன். வண்டியில் வரும் போது அந்த வாகன நெரிசல்களுக்கிடையே பஸ் ஸாப்பில் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்லும் பெண்கள் வழக்கமாக செல்லும் பேருந்துக்காக காத்திருந்தனர். இது அன்றாட பார்க்கும் சாதாரண நிகழ்வு தான்.

பேருந்துக்காக காத்திருக்கும் பெண்களின் கூட்டத்திற்கு எதிரே அந்த பெண் வாகன நெரிசலில் ரோட்டை கடக்க முடியாமல் எதிர்புறத்தில் தான் செல்லும் பேருந்து வருகிறதா என்று ஒரு பார்வையும் பார்த்துக் கொண்டாள். ஆனால் அன்று அவளின் துர்திஷ்டம் போல ரோட்டை கடந்து வருவதற்குள்ளாகவே அவள் செல்லும் பேருந்து எதிர்புறத்தில் இருந்த பஸ்ஸாப்பில் வந்து நின்றது. இவள் சாலையில் செல்லும் வாகனங்களுக்கிடையே புகுந்து வருவதற்குள் அவள் செல்லும் பேருந்து அவளை விட்டு விலகி ஆட்களை ஏற்றிக் கொண்டு அவளை கடந்து சென்றது.

அந்த பெண்ணை பார்த்துக் கொண்டே இருந்ததில் சிக்கல் விழுந்தது கூட தெரியாமல் இருந்தேன். பின்னால் இருக்கும் அவசர பேர் விழிகள் ஹாரன் சத்தம் போட்டு அடித்ததும் தான் நிஜ உலகில் வந்து வண்டியை கிழம்பி அந்த சிக்கனலை தாண்டி அவளை பார்த்துக் கொண்டே அந்த பஸ்ஸாப்பை நோக்கி வண்டியை ஒட்டினேன். அந்த பெண்ணுக்காக ஒன்றும் செல்லவில்லை. நான் செல்லும் வழியும் அது தான். தூரத்தில் இருந்து அந்த பெண்ணை பார்க்கும் போது அங்கிருந்த விளக்கு வெளிச்சத்தில் ஏற்கெனவே பரிச்சயம் ஆன முகம் மாதிரி தான் தெரிந்தது. அவள் யாராக இருக்கும் என்று யோசித்து கொண்டே வண்டியை மெதுவாக ஓட்டினேன். அவள் ஒருவழியாக எல்லா வாகனங்களையும் கடந்து வந்து அந்த பஸ்ஸாப்பில் நின்றாள். அவள் முகத்தில் ஒருவித பயம் தொற்றி கொண்டிருந்தது.

அந்த பெண்ணை நோக்கி செல்ல செல்ல அந்த பெண்ணின் முகம் ஏற்கெனவே மனதில் பதிந்த முகமாக தான் தெரிந்தது. ஆனால் சட்டென்று நினைவுக்கு வராமல் அழகலித்து கொண்டிருந்தது. அவளை நெருங்கியதும் அவள் யார் என்று மூளைக்கு பிடிபட்டு சொன்னது. அவள் வேற யாரும் இல்லை. என் ஊரில் இருக்கும் நன்கு பரிச்சியமான லாவாண்யா தான்… அவள் தான் வழக்கமாக செல்லும் பேருந்தை விட்டு விட்டு என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு வித பயந்த மன நிலையோடு நின்று கொண்டிருக்கிறாள்.

வண்டியை அவள் பக்கத்தில் போய் நிறுத்தியதும் கெல்மெட் போட்டு இருந்ததால் யார் என்று தெரியாமல் பயந்து பின்வாங்கினாள். அவளின் நிலையை புரிந்து தலையில் மாட்டியிருந்த கெல்மெட்டை கலட்டி நான் யாரென்று புரிய வைக்க என் முகத்தை காட்டினேன். அவள் உடனே சுதாரித்து,

ஐயோ அண்ணா, நீங்களா எனக்கு தலைல கெல்மெட் மாட்டியிருந்ததால ஆள் யாருனு அடையாளம் தெரியல.. அதான்.. என இழுத்துக் கொண்டே பேசினாள்..

பரவாயில்ல.. இங்க நின்னுட்டு இருக்க..

ஆமாண்ணா. இன்னிக்கு சம்பளம் நாள்.. அதான் லேட் ஆகிடுச்சு.. சம்பள பணம் வாங்கிட்டு வரதுக்குள்ள நம்ம ஊருக்கு போற கடைசி பஸ் போய்டுச்சு. என்ன பண்றது தெரியாம நின்னுட்டு இருந்தேன். நல்ல வேளையா நீங்க வந்து வயித்துல பால் ஊத்துனிங்க… இல்லைனா என்ன பண்ணிருப்பேன் தெரியாது என மூச்சு விடாமல் பேசிக் கொண்டிருந்தாள் லாவண்யா..

அவள் எப்போதும் இப்படி தான் பேச ஆள் கிடைத்தால் போதும் தன்னை மறந்து தன் வேலையை மறந்து தான் இருக்கும் இடத்தை மறந்து பேசிக் கொண்டே இருக்கும் கள்ளகபடமற்ற பெண். அவளுக்கும் திருமணம் வயது வந்து சில ஆண்டுகள் ஆகி இன்னும் திருமணம் ஆகாமல் தான் இருக்கிறது. அதற்கு அவளது குடும்ப சூழ்நிலையும் காரணம். அவளது குடும்பத்தில் அதிகம் தேவையில்லாமல் சந்தேகத்தை இவள் மீது காட்டுவார்கள். அதற்கு காரணம் அவள் வீட்டின் பக்கத்தில் இருக்கும் அவளது தோழி வேறொரு சாதி பையனை காதலித்து வீட்டை விட்டு ஓடி போய் திருமணம் செய்துக் கொண்டாள். அந்த விசயம் ஊர் முழுவதும் பரவியதில் இருந்து இவளது பெற்றோரும் இவள்மீது அதீத கவனம் என்கிற பெயரில் அளவுக்கு அதிகமாக சந்தேகத்தை வைத்துவிட்டனர்.

அதை நேரடியாக வெளிக்காட்டாமல் அவ்வப்போது கேள்விகளால் துழைத்து எடுப்பார்கள். நேரம் தவறி வீட்டுக்கு சென்றால் காதில் கேட்க முடியாத வார்த்தைகள் அவள் காதில் வந்து விழும்.. அந்த பயத்தில் தான் என்ன செய்ய போகிறோம் என்ற யோசனையில் பஸ்ஸாப்பில் பரிதவிப்புடன் நின்று இருக்கிறாள்.. என்னை பார்த்தும் அவளின் மனத்துக்குள் ஒரு மட்டற்ற நிம்மதி.. அது மட்டுமில்லாமல் அவள் முகத்தில் ஒரு ஆனந்த ஒளிவட்டமும் தெரிந்தது.