வழிமறியவள் – Part 48 41

எனக்கு வேறு ஆடு வாங்க பிடிக்கில.

நான் இங்கையே உங்க கூட இருந்துகிறேன்.

எனக்கு ஒரு வேலை போட்டு கொடுங்க.

அது போதும்.

ஹசன், தம்பி, என்னுடைய ஆட்டு மந்தையில் இருந்த

ஆயிரம் ஆட்டை பார்க்கிலும் உன்னுடைய ஆடு ரொம்பவே

உசத்தியான நல்ல அழகான ஆடு.

நீ அதை கவனிக்காம வெளியே போனதால்தான் உன் ஆடு

வேலி தாண்டி விட்டது.

அதனால் தான் நான் திருடவேண்டிய தாகி விட்டது.

மறுபடியும் மன்னிப்பு கேட்கிறேன்.

நீ உன்னுடைய ஆட்டையே விட்டு கொடுத்திருக்க.

அதற்கு ஈடாக நான் என்ன செய்யமுடியும்.

நீ வேலை கேட்டு இருக்க.

வேலை கேட்ட உனக்கு நான் இப்போதைக்கு வேலை தர

முடியாத நிலையில் இருக்கேன்.

சதிஷ், அவரை நிமிர்ந்து பார்க்க

ஹசன், என்னுடைய கம்பனி நிர்வாகம் முழுவதும் நான்

உனக்கே கொடுக்கிறேன்.

நீ நல்ல படிச்சிருக்க.

கண்டிப்பாக உன்னால் என் கம்பனியை நிர்வாகம் பண்ண
முடியும்

என்று நான் நம்புகிறேன்.

சதிஷ் தன் காதில் விழுகிற வார்த்தைகளை நம்ப முடியாம

அவரை பார்க்க

சதிஷ் இரு கரம் கூப்பி அவருக்கு நன்றி சொன்னான்.

குப்பை மேட்டில் உள்ளவனுக்கு கோபுர வாழ்க்கை என்று
சொல்வார்களே

அந்த மாதிரி சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த

சதீசுக்கு இந்த அதிர்ஷ்டம்.

இந்த அதிர்ஷ்டம் தன் மனைவி பவித்ராவால் தனக்கு
கிடைக்கிறது.

ஆனால் தன் மனைவி தன்னிடம் இல்லை.

இதைத்தான் கண்ணை விற்று சித்திரம் வாங்கினான்

ஹசன், என்ன தம்பி, சம்மதமா.

சதிஷ் எழுந்து அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற

ஹசன் அவனை மனப்பூர்வமா ஆசீர்வதித்தார்.

அதன் பிறகு அங்கு நிலைமை சிறிது சகஜமானது.

ஹசன், பவித்ரா உன் பக்கத்துல வந்தாளாம்,

கிட்ட வராதேன்னு சொன்னியாமே.

சதிஷ், ஆமா சார்,

ஹசன், முதல்ல சார்னு சொல்றதை விடு.

நான் உன்னை தம்பி, தம்பின்னு சொல்றேன்,

நீ சார் சார் னு சொல்றே

அண்ணன்னு கூப்பிடு

சதிஷ், சரிங்க அண்ணா.