வழிமறியவள் – Part 48 41

பார்த்துகிட்டு இருந்தான் சதிஷ்.

இவர்கள் உள்ள வருவதை சத்தம் கேட்டு உணர்ந்த சதிஷ்

மெதுவாக எழுந்து நிற்க,

நாங்க தாம்பா உனக்கு முன்னாடி நிக்கணும்.

நீ உட்கார். ஹசன் சொன்ன வார்த்தைகள்.

சதிஷ் அப்படியே உட்கார்ந்தான்.

இவர்களும் உட்கார,

கொஞ்ச நேரம் அமைதி.

பவித்ரா இருவரையும் மாத்தி மாத்தி பார்த்து கொண்டு இருந்தா.

ஹசன் தான் பேச ஆரம்பித்தார்.

தம்பி, உன் மன நிலைமை என்னால புரிஞ்சிக்க முடியுது.

தயவு செய்து என்னை மன்னிச்சிரு.

உன்னுடைய மௌனம், உன்னுடைய செய்கை

நான் பண்ணின தப்பை என்னை ரொம்பவே உணர்த்துது.

சதிஷ் பேச ஆரம்பிச்சான்.

ஒரு ஊருல ஒரு பணக்காரன் இருந்தான்.

அவன் வீட்டு பக்கத்துல ஒரு ஏழை விவசாயி வாழ்ந்துட்டு
வந்தான்.

ஒரு நாள்.

அந்த பணக்காரன் வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தான்.

வந்த விருந்தாளிக்கு விருந்து வைக்கணும்.

ஆனா, பணக்காரனுக்கு தன்னிடம் இருக்கிற ஆடு மந்தையில்

இருந்து ஆடு எடுத்து சமைக்க மனசு வரல.

அந்த ஏழை விவசாயி ஒரே ஒரு ஆடு வளர்த்தது வந்தான்.

அவனுக்கு அந்த ஆடு என்றால் உசிரு.

அது அவன் மடியில் படுத்து செல்லமா வளர்ந்தது.

இந்த பணக்காரன் தன்னுடைய வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு

அந்த ஏழை விவசாயி வளர்த்த ஆட்டை பிடிச்சி சமைச்சி

வந்த விருந்தாளிக்கு விருந்து வச்சான்.

வீட்டுக்கு வந்த ஏழை விவசாயி தன்னுடைய உயிருக்கு உயிரான

ஆட்டை காணாம துடிச்சு போய்ட்டான்.

ஏன் என்றால், அது அவனுக்கு உள்ள ஒரே ஒரு அன்பான ஆடு.

சதிஷ் சொல்லி முடிச்சி அழ ஆரம்பிக்க,

எதற்கும் கலங்காத ஹசன் கண் கலங்கினார்.

சதீஷை பார்த்து கரம் கூப்பி மன்னிப்பு கேட்ட

ஹசன், நான் ஆட்டை திருப்பி கொடுக்க தயாரா இருக்கேன்
தம்பி.

சதிஷ், உங்க மந்தையில் இருந்து நீங்க கொடுக்கிற ஆடு

வேண்டாம் சார்.

நான் பாசம் வச்ச என்னுடைய ஆடு செத்து போச்சி.

இந்த வார்த்தையை சதிஷ் வாயில் இருந்து வர

பவித்ரா துடிச்சிட்டா.

ஹசன், கொஞ்ச நேர மௌனத்திற்கு பிறகு,

நான் இப்ப என்ன பண்ணனும் தம்பி. சொல்லுங்க.

சதிஷ், நான் யாரையும் குற்றம் சொல்ல இங்க வரலை சார்.

நான் பாசம் வச்ச என்னுடைய ஆடு வேலி தாண்டினதினால்

வந்த பிரச்சனை.