பூ பூக்குதே – Part 3 90

என்று ஆரம்பித்து சற்றும் தொய்வில்லாமல் பாட.. குண்டூசி போட்டால் சப்தம் கேட்கும் அளவு அமைதி… அப்போது தான் பிரியா உள்ளே நுழைகிறாள் அவன் பாடிக் கொண்டிருப்பதை பார்த்தவள் என்னடா நீ பாடவும் செய்வாயா….அவன் குரலில் கட்டுண்டு கிடக்கும் தன் சகாக்களைப் பார்த்தாள்.. அவனை பார்த்தாள்.. கண்கள் மூடி உச்சமாய் பாடி கொண்டிருக்கும் அவனைப் பார்த்தாள்.. அவன் கண்களைப் பார்த்தவள் அதிர்ந்தாள்.. அவன் கண்களில் மெல்ல நீர் கசிய…ஆனாலும் பாடலை நிறுத்தாமல்.. அதிர்ந்தாள் பிரியா.. என்ன இது என் காதலன் கண்களில் நீர் ஏண்டா தங்கம் என்ன ஆச்சு உனக்கு மனசு பதறியது,,,

பாடல் முடிவில் .. அன்னையப் போல் ஒரு தெய்வம் இல்லை ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என உச்ஸ்ஸ்தனியில் முடித்த மாதவன்…போடியத்தில் தன் தலைய கவிழ்த்து கொண்டான் அவன் முதுகு குலுங்கியது மெல்ல மெல்ல விம்மும் சப்தம் மைக் மூலம் அந்த ஹால் முழுவதும் எதிரொலிக்க …பிரியா ஓட்டமும் நடையுமாய் போடியத்தின் அருகில் விரைந்தாள் மாதவன் அழுகிறான் என் தங்கம் ஏண்டா என்னடா ஆச்சு உனக்கு நீ விம்மி அழும் படி அப்படி என்ன இருக்கிறது அந்த பாட்டில் நல்லா தான பாடின.. என்னை மறக்க வைத்தாயே என் காதலா… மனம் பதற வந்தவள்….அங்கு கண்ட காட்சி…

மாதவன் போடியத்தின் மறைவில் முட்டி போட்டு அமர்ந்து தலை குனிந்து ஆனால் அவன் முதுகு குலுங்கியது.. பெருமூச்சு விட்டு மூக்கை உறிஞ்சியது ஒலி பெருக்கியில் அப்படியே அறைந்த மாதிரி….. எல்லோரும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போய்.. இருக்க பதறிய எம் டி மோகன் அருகில் விரைந்தார்..அதற்குள் பிரியா அவனை நெருங்கி மெல்ல அவன் தோளைத் தொட்டாள் அவனை மெல்ல அணத்தவாறு.

மாதவன் நிமிர்ந்தான்.. கண்கள் கலங்கி முகம் வீங்கி பிரியா பதறிப் போய் என்னடா என்ன ஆச்சு அவன் முகத்தை இரு கரங்களிலும் எடுத்து அவன் கலங்கிய முகத்தைப் பார்த்தாள்.. அப்படியே அவனை தன் மார்புடன் அணைத்து ஆறுதல் சொல்ல மனம் துடித்தது. ( போடியம் மறைவு தான் ) இருந்தாலும் எம்.டி மேடையில் இருந்ததால் தன்னை கட்டுப்டுத்திக் கொண்டாள் அவள்.. அதற்குள் எம்.டி அருகில் வர..பிரியா மெல்ல விலகினாள்…

எம் டி.. “என்ன மாதவா இப்படி .ஒரு எமோசன்… ம்ம்ம்ம் நல்ல பாடல் அப்படியே புல்லரிச்சு போச்சுப்பா அதுவும் அம்மாவைப் பற்றி.. என் அம்மா நியாபகமே எனக்கு வந்திடுச்சு.. என்ன உன் அம்மாவ நினச்சிட்டியா., வேனும்னா இங்க இருந்தே நேரா உன் ஊருக்கு போ அம்மாவைப் பார் அப்புறம் ஆபிஸ்க்கு வா என்ன ” அவனை தட்டிக் கொடுத்து சொன்னார்.

“இல்லை சார் என் அம்மா இப்ப இல்லை, அம்மா அப்பா இருவரும் ஒரு ஆக்சிடண்ட்ல ஒன்னா போய்….. ” முடிக்க முடியவில்ல அவனால்…விம்மல் வெடித்தது..

“ஓஓஓஓஓஓ ஐ ம் சாரி…மாதவா.. எனக்கு தெரியாதுப்பா… உன் வருத்தம் புரியுது… நல்லா இரு.. மை பாய் நல்லா இருப்ப உன் அம்மா ஆசீர்வாத்தில…….” சொன்னவர் த்ன் கண்களைத்துடைத்துக் கொண்டார்…..பிரியா அப்படியே உறைந்து போய் நின்றாள்…என்னடா சொல்லுற இவ்வளவு சோகத்த மனசுல வச்சிக்கிட்டு தான் இப்படி சிரிச்சு சிரிச்சு… எல்லார் கிட்டயும் பேசுறியா.. என் கிட்ட கூட சொல்லலையேடா நீ..ஏன் ஏன்.. அவனைப் பார்த்தபடி இருந்தவள்.. மெல்ல அவன் கைய பிடிச்சு அழுத்தினாள். உனக்கு நான் இருக்கிறேன் என்பது மாதிரி, அந்த பூக்கரங்களின் ஸ்பரிசம் மெல்ல அவனை தேற்ற அவள் முகத்த ஏறிட்டு பார்த்தான்…மெல்ல எழுந்தான்…

தான் இருப்பதை உணர்த்தும் பொருட்டு எம்.டி மெல்ல செருமி..மோகனிடம் இருந்து மைக்க மெல்ல வாங்கி.. ” எல்லாரும் ஒரு நிமிடம் எழுந்து மோகனின் அம்மா அப்பா ஆத்மா சாந்தி அடைய மெளனமாக எழுந்து நில்லுங்கள் ” சொல்ல அப்படியே ஒரு நிமிடம் கழிந்தது…..

சில நிமிட மெளனமாய் கழிய எம்.டி.. மெல்ல தன் கைகளத் தட்டினார் …..

” இந்த கைதட்டல் மாதவனுக்கு.. மை பாய் உனக்கு எல்லாம் நல்ல விதமா நடக்கும் கவலைப்படாதே.. சியர் அப் மை பாய்.. எல்லாம் கடந்து போகும்..இதுவும் நல்லதே நடக்கும்.” பேச்சு வாக்கில் மெல்ல இருவரையும் வாழ்த்தும் விதமாக..

அவருக்கு அப்பட்டமாக தெரிந்தது.. ப்ரியா அவனை விரும்புகிறாள்.. அவள் பதறி ஓடி வந்தது இன்னும் அவர் கண்ணை விட்டு அகலவில்லை…நல்ல ஜோடி.காதாலாய் . இருக்கும் பட்சத்தில் நானே நடத்தி வைக்கனும் இவங்க கல்யாணத்த.. மனசிற்குள் நினைத்துக் கொண்டார்..மற்றவர்களும் .கைதட்டலில் இணைய அந்த சின்ன அரங்கம் அதிர்ந்தது……பிரியா அவனை மெல்ல கைய பிடித்து வெளியே கூட்டிச் சென்றாள்.. அனைவரின் பார்வையும் அவர்கள் மேல் பட.. சற்றும் அதை பற்றி கவலை படதவளாய்.. அவன் கைய பிடித்து இழுத்துச் சென்றாள் பிரியா…ஒரு முடிவுடன்.

ஹாலின் ஓரத்தில் நின்ற சூப்பர்வைசர் கதவை திறந்து விட.. அவர்களுடன் நடந்தவன் அன்று அவர்கள் சாப்பிட்ட அறைய திறந்து விட்டான்..இப்போது இவருக்கு ( மாதவனுக்கு) தேவை தனிமை.. என்பதை உணர்ந்து.. பிரியாவிடம்…

மேடம்.. அவரை கொஞ்சம் சமாதான படுத்துங்கள்.. இப்பதைக்கு இது உங்கள் அறை, காபி கொண்டு வரட்டுமா ” சொல்லிய படி கதவை மெல்ல மூடியவனிடம் சாவியை வாங்கிக் கொண்டு ம்ம்ம் அனுப்புங்க சொல்லியவள் மெல்ல கதவை மூடினாள் ஆட்டோ லாக் ….

மாதவன் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்திருக்க அவன் அருகில் சென்று நின்றவள் மெல்ல அவன் தலைய கோதிவிட்டாள். அதுவரை தன்னை கட்டுப்படுத்தி வைத்திருந்த மோகம் மீண்டும் தன் முகம் சிவக்க கண்கள் பனிக்க தாரை தாரையாய் கண்ணீர் விட்டான்.. பதறிய பிரியா….என்னங்க .. இது சின்னப்புள்ளையாட்டம் ம்ம்ம் நீங்க நீங்க…அழழாமா.. என் கண்னா … அழழாமா.. ம்ம்ம் சொல்லு ” கேட்டபடி நின்று கொண்டே தன் தலைய மெல்ல தனக்காய் இழுத்து தன்னுடன் இறுக்க அவன் தலைய இருகரங்களால் அணத்து…கொண்டாள்..

2 Comments

  1. Super… enjoyed….

  2. பூ…. பூத்துடுச்சி.. அருமையான காதல் கவிதை…

Comments are closed.