ஒரு இளம் மணப்பெண்ணின் காம உணர்வு – பாகம் 3 49

“ம்ம்.. சரி.. சாப்பிட்டுட்டு சொல்றேன்..!! ஆமாம்.. எப்போடி கத்துக்கிட்ட இதெல்லாம்..?”

“எல்லாம் என்கேஜ்மன்ட் ஆனப்புறந்தான்..!!”

“உன் புருஷனுக்கு புடிச்சிருக்கா.. நீ சமைக்கிறது..?”

“புடிக்கும்.. புடிக்கும்..!! மேரேஜ் ஆன சமயத்துல.. ஒரு பத்து நாள்.. இவர் சென்னை வந்துட்டாரு.. நான் மட்டும் தனியா மதுரைலதான் இருந்தேன்..!! அப்போத்தான்.. இவருக்கு என்ன புடிக்கும்னு என் மாமியார்கிட்ட இருந்து நெறைய கத்துக்கிட்டேன்..!! அவங்களும் இவதான் இனிமே புள்ளையை பாத்துக்கப் போறான்னு.. அவருக்கு புடிச்ச ஐட்டம்லாம்.. எந்த பக்குவத்துல பண்ணனும்னு நல்லா சொல்லித்தந்தாங்க..!! அதை வச்சுத்தான் சமாளிச்சுக்கிட்டு இருக்குறேன்..!! சாப்பிட்டுப் பாரு.. உனக்கும் புடிக்கும்..!!”

“எனக்கு புடிக்கிறது இருக்கட்டும்.. அவருக்கு புடிச்சிருந்தா சரிதான்..!!”

“புடிக்காமலா சாப்பிட்டுட்டு அப்டி பாராட்டுறாரு..?”

“ஓஹோ..? அப்படி என்ன பாராட்டுனாரு..?”

அவள் கேட்டதும் நான் பட்டென அமைதியானேன். அன்றொருநாள் அவர் பாராட்டியதை நினைவு கூர்ந்து, அந்த நினைப்பு தந்த மகிழ்ச்சியில் மிதப்பவளாய், சிலாகித்து சொன்னேன்.

“அவருக்கு நெத்திலி மீன்னா ரொம்ப பிடிக்கும் அன்பு.. ஒரு நாள் பண்ணிருந்தேன்.. சாப்பிட்டுட்டு.. ‘என் அம்மாவை விட நல்லா சமைக்கிறடி..’ன்னு மனசார சொன்னாரு.. அன்னைக்கு நான் எவ்ளோ சந்தோஷமா இருந்தேன் தெரியுமா..? எந்தப் பொண்டாட்டியுமே புருஷன் வாயில இருந்து அந்த வார்த்தையை கேட்க கொடுத்து வச்சிருக்கணும்..!!”

“ம்ம்.. நெத்திலி மீன் வறுத்துக் கொடுத்து வீட்டுக்காரரை மயக்கிட்ட போல..? எனக்கு என்ன சமைச்சு போட போற..?”

“ஹ்ஹ்ஹா.. உனக்காக ஸ்பெஷலாலாம் ஒன்னும் கெடயாது.. ஏற்கனவே சமைச்சு வச்சிருக்குறேன் அதுதான்..!! வத்தக்கொழம்பு.. அப்பளம்..!!”

“அதுவும் எனக்கு புடிச்ச ஐட்டந்தான்.. அது போதும் என்னை மயக்குறதுக்கு..”

“ஹ்ஹ்ஹா.. சரி.. சாப்பிடலாமா..?”

“ம்ம்.. சாப்பிடலாம்..!!”

அப்பளம் மட்டும் சட்டியில் போட்டு எடுக்க வேண்டி இருந்தது. அன்பரசியும் கிச்சனுக்குள் வந்துவிட, பழைய கதைகளை பேசி சிரித்துக்கொண்டே, அப்பளமும் வடகமும் சுட்டு எடுத்தோம். டைனிங் டேபிளில் எடுத்து வைத்தேன். இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தோம். அன்பரசி நிஜமாகவே என் சமையலில் அசந்து போனாள். நன்றாயிருக்கிறது என பாராட்டினாள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே, நான் திடீரென ஞாபகம் வந்தவளாய் சொன்னேன்.

“சாப்பிட்டுட்டு கொஞ்சம் வேலை வேற இருக்கு அன்பு.. அவருக்கு டிரஸ்லாம் எடுத்து வைக்கணும்..”

“எதுக்கு..?”

“அவர் நாளைக்கு ஊருக்கு கெளம்புறாரு..?”

“அவரா..? அவர் மட்டுமா போறாரு..? நீ போகலையா..?”

“இல்ல.. அவர் ஆபீஸ் விஷயமா போறாரு..”

“அடிக்கடி இந்த மாதிரி உன்னை தனியா விட்டுட்டு போயிடுவாரா..?”

“அடிக்கடி இல்ல.. ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை.. ஒரு ரெண்டு நாள் இல்ல மூணு நாள்..”

“உனக்கு வீட்ல தனியா இருக்குறது பயமா இருக்காதா..?”

“எனக்கு என்ன பயம்..? சுத்தி இவ்ளோ பேர் இருக்காங்க..? அதுலாம் ஒண்ணுல்ல..!!”

“ம்ம்ம்.. எந்த ஊருக்கு போறாரு..?”

“புனே..!!”

நான் சொன்னதும், புன்னகையுடன் சோற்றை விழுங்கிக் கொண்டிருந்த அன்பரசியின் முகம் பட்டென மாறியது. அதிர்ச்சியில் சுருங்கி கருத்துப் போனது. கையில் அள்ளிய சோற்றை அப்படியே தட்டில் போட்டாள். பிரம்மை பிடித்த மாதிரியான ஒரு பார்வை பார்த்தாள். எனக்கு எதுவும் விளங்கவில்லை. குழப்பமான குரலில் கேட்டேன்.

“ஏய்.. அன்பு.. என்னாச்சுடி உனக்கு திடீர்னு..?”

“அவங்க ரெண்டு பேரும் இப்போ புனேலதான் இருக்காங்க பவி..” அவள் மிகவும் இறுக்கமான குரலில் சொன்னாள்.

“யாரு..?” நான் புரிந்தும் புரியாத மாதிரி கேட்டேன்.

“அவங்கதான்.. எனக்கு தாலி கட்டுனவனும்.. என் கூட பொறந்தவளும்..!!”

“ஓ….!!!”

“போனவாரம் அவளோட ஃப்ரண்டுக்கு கால் பண்ணி சொல்லிருக்கா..!! அவ ஃப்ரண்டு எங்கிட்ட வந்து சொன்னா..!! ‘கன்னாபின்னான்னு திட்டி காலை கட் பண்ணிட்டன்க்கா’ன்னு..!!”

“ம்ம்ம்ம்.. அவங்களை அப்படியே விட்றப் போறியா அன்பு..?”

“வேற என்ன பண்ண சொல்ற..? எப்டியோ போய் தொலையுதுக..!!”

விரக்தியாக சொன்னவள், கொஞ்ச நேரம் எதுவுமே பேசவில்லை. நானும் அமைதியாக அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் ஒருமாதிரி வெறித்த பார்வை பார்த்தபடி, சோற்றை பிசைந்தவாறு அமர்ந்திருந்தாள். பின்பு திடீரென உடைந்து போன குரலில் பேச ஆரம்பித்தாள்.

“கால் நொறுங்கிப் போய் கெடந்தா பவி.. எந்திரிச்சு நிக்க கூட முடியாம.. ரெண்டு மாசம் படுத்த படுக்கையா கெடந்தா..!! அள்ளிப்போடுறது, மேல் தொடைச்சு விடுறதுன்னு.. அம்மா மாதிரி பாத்துக்கிட்டேன் அவளை..!! கூடப் பொறந்தவன்னுதான அதெல்லாம் பண்ணினேன்..? கூட்டிட்டு ஓடிப்போவான்னு கனவுல கூட நெனைக்கலை பவி..!!”

“ம்ம்ம்ம்..”

“சின்ன வயசுல இருந்து.. நான் ஆசையா எது வாங்கினாலும் அவ எடுத்துப்பா.. பொம்மை, பென்சில், சுடிதார், ஜிமிக்கி..!! இப்டி என் புருஷனையும் தூக்கிட்டு போவான்னு நான் நெனச்சே பாக்கலைடி..!! அவள்லாம் நல்லாவே இருக்க மாட்டா..!!”

“வி..விடு அன்பு..”

“அந்தாள் மேலயும் எனக்கு கோவம் இருக்கு.. ஆனா இவ பண்ணினதை நெனச்சா..” சொல்லும்போதே அவளுடைய விழிகள் ஆத்திரத்தில் சிவந்தன.

“போ..போதும் அன்பு.. அதையே நெனச்சுக்கிட்டு இருக்காம… சாப்பிடு..!!”

“என்னவோ போடி..!! மனுஷங்க மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சு..!!”

சலிப்பாக சொன்னவள் சாப்பிட ஆரம்பித்தாள். அவள் சகஜமாகிவிட்டதை உறுதி செய்து கொண்டு, நானும் நிம்மதியாக சாப்பிட ஆரம்பித்தேன். சாப்பிட்டு முடித்ததும் அவள் கிளம்பினாள். அப்போதுதான் எனக்கு இன்னொருமுறை அசோக்குடைய செல்லுக்கு முயன்றால் என்ன என்று தோன்றியது. இருவரும் பேசிவிட்டால் ஒரு வேலை முடிந்தது..!! மீண்டும் அவருக்கு கால் செய்தவள், நொந்து போனேன்..!! என்கேஜ்ட்..!!

“அய்யோ.. மறுபடியும் என்கேஜ்டா இருக்குடி..!!”

நான் சலிப்பாக சொல்ல, அன்பு இப்போது அப்படியே முகம் மாறினாள். நெற்றியை சுருக்கி ஒருமாதிரி கூர்மையாய் என்னை பார்த்தாள். சற்றே குறுகுறுப்பான குரலில் கேட்டாள்.

“இவ்ளோ நேரமா அப்டி யார்கூடடி பேசுறாரு..?”

1 Comment

  1. Nicely travelling..

Comments are closed.