இல்லை நான் இவ்வளவு நேரம் தூங்கியது கிடையாது.நேற்று தூக்கம் வருவதற்கு இஞ்செக்சன் போட்டாங்க , அதில் கொஞ்சம் அசந்து தூங்கி விட்டேன்.
இன்னும் கூட தூங்கு ,இந்த காஃபி குடித்து விட்டு கொஞ்சம் நல்லா தூங்கி எழு,
இல்லங்க நான் பார்த்து கொள்கிறேன்.நீங்க கிளம்புங்க ,உங்களுக்கு தேர்தல் வேலை நிறைய இருக்கும்.
என்னது கிளம்புவதா ? வாய்ப்பே இல்லை ,உனக்கு நன்றாக ஆகி வீட்டில் கொண்டு போய் விட்ட பிறகு தான் மற்ற வேலை எல்லாம்.அது எத்தனை நாள் ஆனாலும் பரவாயில்லை.கட்சி வேலை எல்லாம் பார்ப்பதற்கு ஆள் இருக்காங்க.
ரொம்ப நாள் எல்லாம் வெயிட் பண்ண வேண்டாம் சார் ,இன்றே டாக்டர் வந்தவுடன் நீங்க வீட்டிற்கு கூட்டி போகலாம் என்று சொல்லி கொண்டே சிஸ்டர் உள்ளே நுழைய,
வாங்க சிஸ்டர்,காலையில் காஃபி எல்லாம் ஆகி விட்டதா ?
இல்லை சார்,இதுக்கு மேல தான்.என்னம்மா ஸ்ருதி வலி எல்லாம் எப்படி இருக்கு ,
ம் பரவாயில்லை சிஸ்டர்,கீழே கை ஊன்றும் போது மட்டும் light ஆக வலிக்கிறது.
“அது போக போக சரி ஆகி விடும்.சரி உனக்கு இன்ஜெக்சன் போட வேண்டும் “என்று கூற ஸ்ருதி கையை நீட்டினாள்.
கையில் இல்லம்மா இடுப்பில் போட வேண்டும் ,சார் நீங்க வந்து இந்த துணியை தூக்கி பிடிங்க ,
“ஐயோ சிஸ்டர், நீங்க கையிலேயே போட்டு விட்டுடுங்க “ஷெட்டி அலற
சார் ,எந்த ஊசி எங்க போட வேண்டும் என்று எங்களுக்கு தெரியாதா ?அவங்களுக்கு ஏற்கனவே கையில் அடிபட்டு இருக்கு.இன்னோரு கையில் குளுகோஸ் ஏறிக்கொண்டு இருக்கு.வந்து புடிங்க சார்.
ஐயோ வேண்டாம் சிஸ்டர் ,அந்த dangerous area வை ஒரு தடவை பார்த்ததிற்கே இங்கே ஹாஸ்பிடல் வரை கொண்டு வந்து விட்டது.மறுபடியும் இன்னோரு தடவை பார்த்தால் அது எங்கே கொண்டு போய் விடுமோ தெரியாது.நீங்க இஞ்ஜெக்சன் எங்கே வேண்டும் ஆனால் போட்டுங்க ,ஆனால் இதில் என்னை மட்டும் கூட்டு சேர்க்காதீங்க என்று முணுமுணுத்து கொண்டே வெளியேறினான்.
ஸ்ருதி இதழில் மெல்லிய சிரிப்பு வந்தது.
உன் மேல நிறைய பாசம் வைத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன் ஸ்ருதி, நைட் முழுக்க அவர் தூங்கவே இல்லை.குளுகோஸ் ஒவ்வொரு தடவை முடியும் போது அவர் தான் சரியாக உன்னை பார்த்து கொண்டார்.
ஆமா சிஸ்டர் ,என் பெரியம்மா கிட்ட கிடைத்த அன்பை இவர்கிட்ட நான் பார்க்கிறேன் . ஆனா சரியான திருட்டு பையன் அவன்.
சரி ஸ்ருதி,டாக்டர் வந்தவுடன் உனக்கு டிரெஸ்ஸிங் பண்ணி அனுப்புவாங்க,கொஞ்ச நாளைக்கு தண்ணீ மட்டும் படாத மாறி இருந்து கொள்.குளிக்கும் போது துணி ஏதாவது கையில் சுற்றி கொண்டு தண்ணி படாத மாதிரி அடிபட்ட கையை வானத்தை நோக்கி தூக்கி வைத்து கொண்டு குளி.சரியா ?
சரிங்க சிஸ்டர்
சரி நான் வரேன்.
அப்பாடி injection போட்டாச்சு இப்போ உள்ளே போகலாம் என்று ஷெட்டி அடி மேல் அடி வைத்து உள்ளே வர,
டேய் வாடா இங்கே ,
என்னது டா வா ?
ஆமாடா வாடா இங்கே ,
அப்புறம் நானும் டி போட்டு கூப்பிடுவேன்
ஏண்டா நேற்று தானே இடுப்பை அந்த பிசை பிசைந்தாய்,இப்போ துணியை தூக்கி பிடிக்க மட்டும் அப்படியே நல்லவன் மாதிரி நடுங்கிற
“இங்கே பாரு ஸ்ருதி,அந்த danger zone area வை நேற்று கொஞ்சம் பார்த்ததற்கே நடக்க கூடாது எல்லாம் நடந்து விட்டது.இனியும் நான் risk எடுக்க தயார் இல்ல.இந்தா போய் ப்ரஷ் பண்ணிட்டு வா ” என்று டூத் பிரஷ்ஷில் paste வைத்து கொடுக்க,
இரு இரு உன்னை வீட்டில் போய் வச்சுக்கிறேன்.
நீ வீட்டில் வந்து என்ன வேண்டும் ஆனால் பண்ணி கொள்.பழைய மாதிரி நீ சிரித்து பேசி கொண்டு இருந்தால் அது மட்டும் போதும் எனக்கு.
அதுக்கு நீ கையை ,காலை வைத்து கொண்டு சும்மா இருக்கணும்டா போக்கிரி,
ஆமா ,எல்லாம் என்னையே குறை சொல்லு ,எதையாவது காட்டி சூடேற்றி விடுவது .அப்புறம் என்னை வந்து குறை சொல்வது என்று முணுமுணுக்க,
