ஆனா என்ன சொல்லுங்க சாமி ,என்று ஊர் தலைவர் கேட்க ,
அந்த பெண்ணுக்கு மாங்கல்ய தோஷம் மற்றும் குழந்தை பிறப்பதில் கண்டம் இருக்கு .
அதுக்கு பரிகாரம் எதுவும் இருக்கா சாமி,
இந்த இரண்டு பிரச்சினை தீர வேண்டும் என்றால் நாம் வழக்கமாக செய்யும் பரிகார பூஜை இன்றே செய்ய வேண்டும் என்று வேலன் சாமியாடி ஆடி கொண்டே கூறினான்.
ஷெட்டியும் ஸ்ருதியும் அடுத்து என்ன நடக்க போகிறது என்று ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்து கொண்டு இருந்தார்கள் .
ஊர் தலைவரின் மனைவி ஸ்ருதி அருகே வந்து ,உன் தாலியை கழற்றி கொடும்மா,
ஐயோ கட்டிய தாலியை எப்படி கழட்டுவது என்னால் முடியாது ,ஸ்ருதி மறுக்க
இது தாலி பிரித்து கோர்க்கிற சம்பவம் மாதிரி தாம்மா ,உன் தாலியை அம்மன் கழுத்தில் அணிவித்து பின்பு உன் கழுத்தில் கட்டி விட்டு விடுவோம் என்று கூற
ஸ்ருதி ஷெட்டியை திரும்பி பார்க்க,
நான் அப்பவே சொன்னேன் ,போய் விடலாம் என்று , கேட்டியா இப்போ அவஸ்தை படு என்று மனதிற்குள் சிரித்து கொண்டான்.
ஸ்ருதி தன் கழுத்தில் உள்ள தாலியை கழற்றி கொடுத்தாள்.
அம்மன் பாதத்தில் முதலில் தாலியை வைத்த பின் ஸ்ருதி தாலியை அம்மன் கழுத்தில் அணிவித்து ஏதோ மந்திரங்கள் முணுமுணுத்து பூஜை செய்தனர்.
பின் தாலியை ஸ்ருதியை நோக்கி எடுத்து கொண்டு வர ,வாங்கி கொள்ள ஸ்ருதியை கையை நீட்டினாள்.ஆனால் தாலியை அவள் கைகளுக்கு கொடுக்காமல் அவர்களை கடந்து செல்ல ஸ்ருதி அதிர்ச்சி அடைந்தாள்.
பின் ஷெட்டியிடம் கொடுத்து “நீங்கள் உங்கள் மனைவி கழுத்தில் இந்த தாலியை இப்பொழுது கட்ட வேண்டும் என்று பூசாரி கூறினார்.
இதை கேட்டு இருவருமே ஒரு கணம் அதிர்ந்து போனார்கள்.
சீக்கிரம் தாலியை கட்டுங்க ,நல்ல நேரம் முடிய போகுது ஊர் தலைவர் கூற,
எங்களுக்கு தான் ஏற்கனவே கல்யாணம் செய்து ஆகி விட்டதே ,இப்போ பெண்கள் யாரும் கட்டி விட முடியாதா ஷெட்டி கேட்க ,
இல்ல ஐயா,இப்போ இந்த தாலியை நீங்க தான் எங்க அம்மன் முன்னாடி கட்டி ஆகனும்,அது தான் பரிகாரம்.நீங்க ரெண்டு பேரும் கணவன் மனைவி தானே ஏன் இப்படி தயங்குறீங்க
இந்த ஒரு கேள்வி ஷெட்டிக்கு மீண்டும் பயத்தை உண்டு பண்ண ,தாலியை எடுத்து கொண்டு ஸ்ருதி நோக்கி சென்றான்.
கவலைபடாதீங்க உங்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் வர விட மாட்டேன் என்று கூறியது ஸ்ருதி மனதில் ஓடியது.
அங்கு இருந்த வாத்தியங்கள் முழங்க ஸ்ருதி கழுத்தில் ஷெட்டி மூன்று முடிச்சு போட ,ஸ்ருதி கண்களில் நீர் துளிர்த்தது.
ம்ம் அடுத்து சாமி பிரசாதம் எடுத்து வாங்க ,
இப்போ மாங்கல்ய தோஷம் நிவர்த்தி ஆகி விட்டது.அடுத்து குழந்தை பிறப்பதற்கு உண்டான கண்டம் அதையும் நிவர்த்தி பண்ணி விடுவோம். ஊர் தலைவர் அதன் வழிமுறையை சொல்ல,
அதை கேட்டு ஷெட்டி ,ஸ்ருதி இருவரும் ஒரு சேர இது எங்களால் முடியாது என்று
கூறினார்கள்.
அந்த இக்கட்டான நேரத்திலும் எங்கிருந்தோ ஒரு பட்டாம்பூச்சி பறந்து வந்து ஸ்ருதி இதழில் உட்கார்ந்து பூ என்று நினைத்து தேனை அருந்த தொடங்கியது.
அப்படி என்ன அது வழிமுறை ?ஏன் அதை இருவரும் மறுத்தார்கள்?
அடுத்தடுத்து வந்த சம்பவங்கள் இயந்திரத்தனமாக நடக்க,ஸ்ருதியால் ஏதும் மறுக்க இயலவில்லை.
நெற்றியில் குங்குமம் வைக்க சொன்னார்கள்,மாலை மாற்ற சொன்னார்கள் , தாலியில் பொட்டு வைக்க சொன்னார்கள்.யாவும் இயல்பாகவே நடைபெற்றன.
ஆனால் அடுத்து அவர்கள் செய்ய சொன்ன சம்பவம் இருவரையுமே முடியாது என்று கூற வைத்தது.
ஊர் தலைவர் ,இந்த பிரசாதத்தை அவங்களுக்கு ஊட்டுங்க
சரியென்று அவன் கையில் எடுத்து ஊட்ட முற்பட,
“கையால் அல்ல ,உங்கள் வாயில் நன்றாக மென்று உமிழ் நீரோடு கலந்து ,பின்பு இதழோடு இதழ் பொருத்தி ,உங்கள் வாயில் இருந்து அவங்க வாயில் ஊட்ட வேண்டும்.
“இது எப்படிங்க முடியும் ,அதுவும் இத்தனை பேர் முன்னாடி எங்களால் முடியாது” ஸ்ருதி மறுப்பு தெரிவித்தாள்.
என்னம்மா,ஒரு கிறிஸ்டியன் கல்யாணத்தில் பார்த்தது இல்லையா?கல்யாணம் முடித்தவுடன் உதட்டோடு உதடு வைத்து முத்தம் இடுவார்கள் ,அது போல தான் இதுவும்.இப்போ எப்படியும் அவரோட பிள்ளையை தான் நீ சுமக்க போகிற.உனக்கே நல்லா தெரியும் நாம் சாப்பிடுகிற உணவு தான் உடம்பில் ரத்தமும் ,சதையுமாக மாறுகிறது.அந்த இரத்தம் தான் சில நாட்கள் கழித்து நம் உடம்பில் கரு முட்டையாகவும் ,விந்தணு ஆகவும் மாறுகிறது. இப்போ எங்கள் தெய்வத்தின் முன்னால் அவர் வாயால் ஊட்டகூடிய உணவு உன் வயிற்றில் பின் கருமுட்டையாக மாறும் ,அது போல் உன் வாயால் ,அவர் வாயில் ஊட்டக்கூடிய உணவு அவர் உடம்பில் விந்தணுவாக மாறும்.இதனால் தோஷம் கழிந்து நீங்கள் இணை சேரும் போது உங்கள் இருவரின் உயிர் அணுக்கள் சேர்ந்து ஆரோக்கியமான குழந்தையை கொடுக்கும்.சீக்கிரம் ஆரம்பிங்க
