ஊட்டியில் நங்கள் அடித்த லூட்டி 43

இந்த 3 நாளுமே தண்ணியில் மிதப்பதாக முடிவு செய்திருந்தோம். ஆர்த்திக்குத் திருமனம் நிச்சயமாகி இருந்தது அவள் வருங்காலக் கணவன் சதீஸ் சனிக்கிழமைக் காலை எங்களுடன் இனைவதாகச் சொல்லியிருந்தான். வண்டிக் கிளம்பி 1 மணி நேரம் ஆனதும் மற்ற பயனிகளுக்கு தொல்லை தரக் கூடாதென அவரவர் படுக்கைக்குச் சென்றோம். நானும் ரமேஸ¤ம் குட்நைட் ரவுண்ட் ஒன்று போட்டுவிட்டு ஏ.சி குளிருக்கு இதமாகக் கம்பளிக்குள் நுழைந்துக் கொண்டோம்.

காலை 6.15 க்கு மேட்டுப் பாளயம் வந்தோம். எங்களுக்காக 2 டெம்போ ட்ராவல்ஸ் ஏற்பாடாகியிருந்தது. மேட்டுப் பாளயத்திலேயே ஒரு லாட்ஜில் 3 ரூம் போட்டு எல்லோரும் காலைக் கடன்கள் முடித்து,சிற்றுண்டி அருந்திவிட்டு கோத்தகிரியை நோக்கி பயனத்தை ஆரம்பித்தோம்.

நான், ரமேஸ், பாலா,மேஹா,அனிதாஆர்த்தி ஒரு வண்டியிலும் மற்றவர்கள் இன்னொரு வண்டியிலும் கிளம்பினோம்.

10 நிமிடத்தில் மலைப் பாதை ஆரம்பமாகியது. பாலா ஒரு பாட்டிலையும் 3 டம்ளர்களையும் எடுத்து ஒரு ரவுண்ட் ஊற்றினான். எங்களுடன் அனிதாவும் சேர்வதாகச் சொன்னாள். உடனே பாலா ரம் பாட்டிலை மூடி வைத்து விட்டு வோட்காவைத் திறந்தான். சென்னையிலிருந்து ஒரு முன்னால் ரானுவவீர நன்பர் மூலம் 6 வோட்கா( ஸ்மெர்ன்ஆ·ப்)வும் 10 ரம்( பக்கார்டி) பின் பர்மா மஜாரிலிருந்து 48 டின் பீரும் 2 வாட் 69ம் வாங்கி வந்திருந்தோம். மேட்டுப்பாளயத்தில் தேவையான அளவு சோடாவும், பெப்ஸி, 7அப் வகையராக்களும் வாங்கியிருந்தோம். இது எல்லாவற்றுக்கும் பாலாவும் மேஹாவும் பொறுப்பேற்றிருந்தனர். எஸ்டேட் பங்களாவில் மணி மற்றும் குமார் என 2 சமையல்காரர்கள் இருந்தனர். சாப்பாட்டிற்குஅருனும் விச்சுவும் பொறுப்பு. 45 நிமிடங்களில் வியூ பாய்ண்ட் எனும் இடத்தில் வண்டிகளை நிறுத்தி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். அங்கு சாந்தியும் மற்ற ஆண்களும் எங்களுடன் மது அருந்தினார்கள். சிறிய இடைவேளைக்குப் பின் எங்கள் பயனம் தொடர்ந்தது.

நான் அதிகமாக மது அருந்துவதைத் தவிர்க்கும்படி மேஹா என்னிடம் சொன்னாள். நான் அதற்கு நகரின் போலி வேசத்திலிருந்து ஒரு 3 நாட்கள் மனதிற்குப் பிடித்த நன்பர்களோடு களித்துக் கழிக்க வந்திருக்கேன்.. ப்ளீஸ் இந்த 3 நாள் மட்டும் என்னை கண்ட்ரோல் செய்யாதே.. மற்றபடி நான் ஒன்னும் ரெகுலர் குடிகாரன் இல்லை.. எப்பவாவது அதுவும் கல்லூரி நன்பர்களோடு மட்டும்தான் என்றேன்.