விக்கி டேவிட்டை பார்க்க நீ போடா நாங்க சமாளிசுகிருவோம் என்றான் டேவிட் .
ஓகே பாத்து இருடா எதாச்சும்னா போன் போடுங்க உடனே வந்துறோம் என்று சொல்லி விட்டு இருவரும் வெளியே போனார்கள் .
பின் வெளியே விக்கியும் மணியும் காரில் ஏறினார்கள் .மச்சி உன் கார்ல நேத்து நிறைய பிளவர்ஸ் இருந்துச்சு என்ன விசயம்டா புதுசா பிளவர்ஸ் எல்லாம் வாங்கி இருக்க எதுவும் பொண்ணு லவ்வுன்னு விழுந்துட்டியா என்றான் மணி .மணி சொன்ன பிறகு அந்த பிளவர்ஸ் எல்லாம் பார்த்தான் .
அது வாடி போயி இருந்தது ,கிட்டத்தட்ட விக்கியும் அதே நிலையில் தான் இருந்தான் .பின் மணியிடம் கேட்டான் .என்ன மச்சான் கேட்ட என்றான் .இல்ல பிளவர்ஸ் வாங்கி இருக்கியே என்ன மேட்டர் என்றான் .
அதான் மேட்டர் தான் ஒரு பொண்ண மேட்டர் பண்றதுக்குகாக பிளவர்ஸ் வாங்கிட்டு போனேன் அதுக்குள்ளே நீ போன் போட்டியா அதான் இங்க வந்துட்டேன் என்றான் .
நீ திருந்தவே மாட்டியாடா என்றான் மணி .எதுக்கு திருந்தனும் ஏன் திருந்தனும் என்று பொய்யாக சிரித்து விட்டு ஒரு நிமிஷம் அந்த பிளவர்ஸ் வச்சு இனி எந்த யூஸ்ம் இல்ல அதுனால அத குப்ப தொட்டில போட்டுட்டு வரேன் .
அப்படியே மழை காலமா ஒன்னுக்கு ரொம்ப அர்ஜெண்டா இருக்கு டாய்லெட் போயிட்டு வரேன் என்று சொல்லி கொண்டு அந்த பிளவர்ஸ் எடுத்து கொண்டு போயி ஒரு குப்பை தொட்டி முன் நின்றான் .
கடைசியாக அதை ஒரு ஏக்கத்தோடு பார்த்து விட்டு மெல்ல அதை குப்பை தொட்டியில் போட்டான் .பின் டாய்லெட் போயி உக்காந்து குழாயை திறந்து விட்டு சிறிது நேரம் அழுதான் .ஏண்டா உனக்கு மட்டும் இப்படி ஒரு நிலைமை வருது இப்ப பிரண்டா இல்ல லவ்வரா நான் என்ன பண்ணுவேன் என்று அழுதான் .
விக்கி பாத் ரூமில் உக்காந்து அழுதுவிட்டு பின் வெளியே வந்து காரில் ஏறி ஆபிஸ் போனான் .ஆபிசில் சுவாதியையும் டேவிட்டையும் நினைத்து கொண்டே இருந்தான் .
பின் ஆபிசில் முக்கியாமான மீட்டிங் ஒன்று நடந்தது அப்போதும் விக்கி அவர்களை நினைத்து பார்த்து ஒழுங்காக மீட்டிங்கில் பேசமால் சொதப்பி விட்டு சாரி எனக்கு உடம்பு சரி இல்லை என்று சொல்லி விட்டு மீண்டும் வருத்ததோடு அவன் சேரில் உக்காந்தான் .
பின் மீட்டிங் எல்லாம் முடிந்த பின் மணி வந்தான் அவன் ரூமுக்கு .சரி வா டேவிட கூப்பிட அவன் ஆஸ்பத்திரி போவோம் என்றான் ,இந்த வந்துட்டேன்டா என்று போனான் .பின் மணி காரை தான் ஒட்டுவாதாக சொன்னான் .சரி என்று சொல்லி விட்டு விக்கியும் அருகே உக்காந்து தலையில் கை வைத்தாவரு உக்காந்து கண்ணை மூடி வந்தான் .பின் மணி ஒரு இடத்தில காரை நிப்பாட்டினான் .
விக்கி முழித்து என்னடா அதுக்குள்ளே ஆஸ்பத்திரி வந்துருச்சா என்றான் . இல்ல சும்மா உன் கிட்ட பேசுறதுக்கு தான் நிப்பாட்டினேன் என்றான் மணி .
ஒ மீட்டிங்க்ல சொதப்புனத பத்தி கேக்க போறியா நானே சொல்லனும்னு நினைச்சேன் .அது வந்து மச்சான் நைட் நம்ம டேவிட் பயலுக்கு அப்படி ஆனத நினைச்சு நைட் புல்லா தூங்கல அதான் அப்படி சொதப்பின்னேன் அதுனால் தான் இப்ப கூட தூங்கி கிட்டு இருக்கேன் என்றான் .
மச்சி எதுக்குடா நடிக்கிற முந்தி எல்லாம் ஞாயிற்று கிழமைல விடிய விடிய ஆட்டம் போட்டுட்டு அடுத்த நாள் அசால்ட்டா ஆபிஸ் வந்து மீட்டிங்ல சூப்பரா பேசி அசத்துவ இப்ப என்னமோ ஆஸ்பத்திரில தூங்கல அதுனால தான் சொதப்புனேன்னு கத விடாத மச்சி என்றான் . டேய் அதாண்டா நிஜம் என்றான் .ம்ம் நம்பிட்டேன் மச்சான் உனக்கு என்ன தாண்டா ஆச்சு இந்த ஆறு மாசமா நீ சரியாவே இல்ல .

Going nice, very good well done. Looking for next part
Please upload next post soon
Next part sekiram upload pannunga … Vera level story 🤯.. verithanama waiting for next part…
நண்பா என்ன ஆச்சு கதையை தொடருங்கள்
Continue this story. It is unique
Continue this story. It is unique
Continue