என் காதலி Part 13 164

அங்கு டேவிட் கட்டிலில் படுத்து இருந்தான் .காலில் பெரிய கட்டு போட்டு படுத்து இருந்தான் .அவன் அருகில் அவன் பொண்டாட்டியும் எதிரில் உள்ள சேரில் மணியும் உக்காந்து இருந்தான் .

விக்கி நுழைந்ததும் மணி எந்திருச்சு வந்தான் .வாடா முழிச்சு தான் இருக்கான் போயி பாரு என்றான் .விக்கி மெல்ல அவன் அருகே போனான் .ஹ எப்படிடா இருக்க என்றான் விக்கி மெல்ல .

ம்ம் பரவலடா என்றான் டேவிட் .ரெஜினா எழுந்து நீங்க பேசிகிட்டு இருங்க நான் போயி டாக்டர் கிட்ட போயி பேசிட்டு ரிசப்சென் போயி பணம் கட்டிட்டு வரேன் என்றாள் .

கொடும்மா நான் கூட போயி கட்டிட்டு வரேன் என்றான் மணி .இல்லன்னா நீங்க கொஞ்ச நேரம் பிறியா பேசுங்க அது அவருக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும் என்று சொல்லி விட்டு போனாள் .அவள் போன பின் டேவிட் சொன்னான் தேங்க்ஸ்டா என்னையே பாக்க வந்ததுக்கு நான் கூட நீ வர மாட்டே அவனுக்கு சொல்லாத அப்படின்னு மணி கிட்ட சொன்னேன் .

ஆனா நீ எல்லாத்தையும் மறந்து என்னையே பாக்க வந்தது எவளவு சந்தோசமா இருக்கு தெரியுமா இப்ப எனக்கு என் காலுல வலி கூட இல்ல என்றான் .

டேய் இது என்னடா உனக்கு ஒன்னுனா நான் வர மாட்டேனா நம்ம 6 வருஷ நட்ப வெறும் 6 மாச சண்டைல மறந்துடுவேனா அதலாம் நம்ம ரெண்டு பேரும் எப்பயுமே பிரண்டு தான் என்றான் .தேங்க்ஸ் buddy என்று சொல்லி டேவிட் மெல்ல அழுதான் .

சரி என்னடா ஆச்சு என்றான் .பைக்ல போனப்ப ஒரு செகதில டயர் மாட்டி கீழ விழுந்துட்டேன்டா என்றான் .ம்ம் மழை காலத்துல பாத்து போ கூடாது என்றான் .

என்ன பண்ண எல்லாம் என் கெட்ட நேரம் கெட்டதா நடக்குது ஒரு நல்லது கூட நடக்க மாட்டிங்குது என்று சொல்லி பெரு மூச்சு விட்டான் .அவன் அவ்வாறு சொல்வது எதையோ மறைமுகமாக மனதில் வைத்து கொண்டு பேசியது போல் விக்கிக்கு தோணியது .அதன் பின் மணி பேச்சை வேறு விதமாக மாற்றினான் .

மூவரும் வேற வேற விசயங்களை பேசி சிரித்து கொண்டு இருந்தனர் .அதன் பின் ரெஜினா உள்ளே வந்ததும் எல்லாரும் நார்மல் ஆகி அமைதி ஆனார்கள் .பின் டேவிட்டை தூங்க வைத்து விட்டு எல்லாரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள் .மணி விக்கியை மட்டும் வெளியே கூப்பிட்டான் .

ஓகே மச்சான் மணி 9 ஆச்சு வள்ளி வீட்ல தனியா இருப்பா மத்த நாள் மாதிரின்னா பரவல இப்ப அவளுக்கு 8 மாசம் ஆச்சு அதுனால நான் கூட இருக்கிறது தான் நல்லது அதனால நான் கிளம்புறேன் நீ இங்க இருந்து கொஞ்சம் பாத்துக்கிரியா என்றான் .

ஒ சுயர்டா நீ போ நான் பாத்துக்கிறேன் . ஆமா நீ எதுல போ போற என்றான் .பஸ் இல்லாட்டி ஆட்டோ தான் என்றான் மணி .என் கார எடுத்துட்டு போ நாளைக்கு ஆபிஸ்க்கு ஸ்ட்ரைட்டா கொண்டு வந்துரு என்று சொல்லி கார் சாவியை கொடுத்தான் .

ஓகே தேங்க்ஸ் மச்சி என்று மணி கிளம்பினான் .டேய் வள்ளிய கேட்டாத சொல்லு என்றான் விக்கி .சரிடா என்று சொல்லி விட்டு மணி ஆஸ்பத்திரியை விட்டு கிளம்பினான் .

7 Comments

  1. Going nice, very good well done. Looking for next part

  2. Please upload next post soon

  3. Next part sekiram upload pannunga … Vera level story 🤯.. verithanama waiting for next part…

  4. நண்பா என்ன ஆச்சு கதையை தொடருங்கள்

  5. Continue this story. It is unique

  6. Continue this story. It is unique

Comments are closed.